LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- புதுமைப்பித்தன்

பித்துக்குளி

 

மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு மலை மறைவிலே கொட்டிக் குதூகலித்து விளையாடுகிறாள். வாலிபனுக்குக் காதல் தோன்றும். கவிஞனுக்குக் கனவு தோன்றும். அறிவில் முதியவனுக்குச் சாந்தி தோன்றும் அந்த இடத்திலே.
சுற்றிலும் காயல் நீலவானைத் தழுவியது. அதன் ஓரத்திலே கமுக மரங்களைக் குழைந்து தழுவின காதற் கொடிகள் – மிளகுதான். அந்த மிளகுக் கொடி… உள்ளத்தையும் உடலையும் ரகஸ்யமற்று அர்ப்பணம் செய்யும் கங்கையின் களங்கமற்ற அன்பு மாதிரி…
காயலுக்கு வட பக்கத்தில் வடசேரி. அதில் வல்லியத் தம்பிரான் என்றால் பழைய அரச வம்சம். மலை நாட்டு வீரம் முதலிய இழந்த இலக்ஷியங்கள் எல்லாம் நினைவிற்கு வரும். அவருக்கு ஒரு மகள் சகுந்தலா. காளிதாசன் கனவில் கண்ட சாகுந்தலை இவளைப் போல்தான் இருந்திருக்க முடியும். இயற்கையின் மடியில் வளர்ந்த குயில். பழைய படாடோ பத்தின் அம்சமான வல்லியத் தம்பிரானுக்கு உயிர். சமஸ்தான சம்பந்தத்தில் தமது இழந்த சிறப்புகளைப் பெறவிருந்தார். அவளுடைய ரகஸிய நாடிகளை அவர் அறிவாரா?…
மாவேலிக்கரைக்கும் வடசேரிக்கும் இடையில் காயல் ஒரு மைல்தான்.
மாவேலிக்கரையில் நீரருகில் ஒரு பிறையிடம் தம்பிரானைச் சேர்ந்ததுதான். அங்கே மார்த்தாண்டவர்மன் என்ற வாலிபன். ஓலைச்சுவடி, விவசாயம் இதுதான் அவனுடைய பொழுதுபோக்கு, வாழ்க்கை இலட்சியம்.
அன்று இரவு சற்று மழை தூறிக்கொண்டிருந்தது.
ஓங்கி வளர்ந்த தென்னங்கீற்றுகளிலிருந்து சொட்டுச் சொட்டென்று நீர்த்துளிகள்.
நாளைக்குச் சகுந்தலா புருஷன் வீடு சென்றுவிடுவாள்.
இன்றாவது கடைசி முறை காண…
இருளிலே படகு வரும் சப்தம்.
மார்த்தாண்டவர்மன் ஒரு மூலையில் மணையில் உட்கார்ந்திருக்கிறான்.
இருட்டு.
அவள் வந்தாள். தீபத்தை ஏற்றினாள்.
மூலையிலிருந்த கரியடுப்பில் பாலைக் காய்ச்சினாள்.
அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
மார்த்தாண்ட வர்மன் நினைவற்றவன்போல் இருந்தான்.
பால் கிண்ணம் அவனது வாயண்டை வந்தது. குழந்தை மாதிரி அருந்தினான்.
பிறகும்…?
மௌனந்தான்.
மெதுவாக அவன் கால்களை எடுத்து இடையில் சுற்றிக் கொண்டாள்…
அவளது மழையில் நனைந்த உடலை மறைத்த கேசத்தை ஒதுக்கி அவனது சிரத்தை தோள் மீது மெதுவாக சாய்த்தாள். அவனது உஷ்ணமான கன்னங்கள்… அவள் கழுத்திலிருந்து முகம்வரை செக்கச் சிவப்பாக மாறியது…
மெதுவாக அணைத்த அவன் கரத்துடன் அவன் மடியில் கண்ணை மூடிய வண்ணம் படுத்தாள்.
என்ன நம்பிக்கை! அவள் கடைக்கண்ணில் சுடர்விட்ட இரண்டு துளிகள் எதை நினைத்தனவோ!
ஆமா… சகுந்தலா… என்னுடைய… சகுந்தலா… அவள் என்னுடையவள்… அவள் கழுத்து, அந்தப் பிளவுபட்ட கேசம் எவ்வளவு அழகாக… இப்படியே என் பக்கத்தில்… எப்பொழுதுமே… ஆமாம். எப்பொழுதுமே… அதை அவள் கழுத்தில் அப்படியே சுற்றினால்…
அவனது கரங்கள் இருகூறாகப் பிளந்து கிடந்த சிகையை அவள் கழுத்தில் சுற்றுகின்றன, இறுக்குகின்றன.
“ஆமாம்! என்னுடையவள்!” என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருகின்றன.
அவள் கண்கள் மூடியபடிதான்… அதரத்திலும் அந்தப் புன்சிரிப்பு. அந்தத் தழுவல், அவனைத் தன்னுள் அழுத்திய கை இன்னும் அவனை இழுப்பது மாதிரி அழுத்துகின்றது… அந்த நிலையில்…
அவ்வளவுதான்.
அந்த இரண்டு துளிகள் என்ன நினைத்தனவோ?
அன்று அவனை அணைத்த வண்ணமே இரவு கழிகிறது.
அவள் எப்படி விலகுவாள்? உயிர் இருந்தால்தானே.
அன்று இரவு அவள் விலகவில்லை.
அவன் மனதில் காதலின் வெறி! ஐக்கிய வெறி!…
அவள் எப்படி நீங்குவாள்?
அன்று இரவு அவள் நீங்கவில்லை!
உயிர் இருந்தால்தானே!

        மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு மலை மறைவிலே கொட்டிக் குதூகலித்து விளையாடுகிறாள். வாலிபனுக்குக் காதல் தோன்றும். கவிஞனுக்குக் கனவு தோன்றும். அறிவில் முதியவனுக்குச் சாந்தி தோன்றும் அந்த இடத்திலே.சுற்றிலும் காயல் நீலவானைத் தழுவியது. அதன் ஓரத்திலே கமுக மரங்களைக் குழைந்து தழுவின காதற் கொடிகள் – மிளகுதான். அந்த மிளகுக் கொடி… உள்ளத்தையும் உடலையும் ரகஸ்யமற்று அர்ப்பணம் செய்யும் கங்கையின் களங்கமற்ற அன்பு மாதிரி…காயலுக்கு வட பக்கத்தில் வடசேரி. அதில் வல்லியத் தம்பிரான் என்றால் பழைய அரச வம்சம். மலை நாட்டு வீரம் முதலிய இழந்த இலக்ஷியங்கள் எல்லாம் நினைவிற்கு வரும். அவருக்கு ஒரு மகள் சகுந்தலா. காளிதாசன் கனவில் கண்ட சாகுந்தலை இவளைப் போல்தான் இருந்திருக்க முடியும்.

 

      இயற்கையின் மடியில் வளர்ந்த குயில். பழைய படாடோ பத்தின் அம்சமான வல்லியத் தம்பிரானுக்கு உயிர். சமஸ்தான சம்பந்தத்தில் தமது இழந்த சிறப்புகளைப் பெறவிருந்தார். அவளுடைய ரகஸிய நாடிகளை அவர் அறிவாரா?…மாவேலிக்கரைக்கும் வடசேரிக்கும் இடையில் காயல் ஒரு மைல்தான்.மாவேலிக்கரையில் நீரருகில் ஒரு பிறையிடம் தம்பிரானைச் சேர்ந்ததுதான். அங்கே மார்த்தாண்டவர்மன் என்ற வாலிபன். ஓலைச்சுவடி, விவசாயம் இதுதான் அவனுடைய பொழுதுபோக்கு, வாழ்க்கை இலட்சியம்.அன்று இரவு சற்று மழை தூறிக்கொண்டிருந்தது.ஓங்கி வளர்ந்த தென்னங்கீற்றுகளிலிருந்து சொட்டுச் சொட்டென்று நீர்த்துளிகள்.நாளைக்குச் சகுந்தலா புருஷன் வீடு சென்றுவிடுவாள்.இன்றாவது கடைசி முறை காண…இருளிலே படகு வரும் சப்தம்.மார்த்தாண்டவர்மன் ஒரு மூலையில் மணையில் உட்கார்ந்திருக்கிறான்.இருட்டு.அவள் வந்தாள். தீபத்தை ஏற்றினாள்.மூலையிலிருந்த கரியடுப்பில் பாலைக் காய்ச்சினாள்.அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.மார்த்தாண்ட வர்மன் நினைவற்றவன்போல் இருந்தான்.பால் கிண்ணம் அவனது வாயண்டை வந்தது. குழந்தை மாதிரி அருந்தினான்.பிறகும்…?மௌனந்தான்.

 

       மெதுவாக அவன் கால்களை எடுத்து இடையில் சுற்றிக் கொண்டாள்…அவளது மழையில் நனைந்த உடலை மறைத்த கேசத்தை ஒதுக்கி அவனது சிரத்தை தோள் மீது மெதுவாக சாய்த்தாள். அவனது உஷ்ணமான கன்னங்கள்… அவள் கழுத்திலிருந்து முகம்வரை செக்கச் சிவப்பாக மாறியது…மெதுவாக அணைத்த அவன் கரத்துடன் அவன் மடியில் கண்ணை மூடிய வண்ணம் படுத்தாள்.என்ன நம்பிக்கை! அவள் கடைக்கண்ணில் சுடர்விட்ட இரண்டு துளிகள் எதை நினைத்தனவோ!ஆமா… சகுந்தலா… என்னுடைய… சகுந்தலா… அவள் என்னுடையவள்… அவள் கழுத்து, அந்தப் பிளவுபட்ட கேசம் எவ்வளவு அழகாக… இப்படியே என் பக்கத்தில்… எப்பொழுதுமே… ஆமாம். எப்பொழுதுமே… அதை அவள் கழுத்தில் அப்படியே சுற்றினால்…அவனது கரங்கள் இருகூறாகப் பிளந்து கிடந்த சிகையை அவள் கழுத்தில் சுற்றுகின்றன, இறுக்குகின்றன.

 

     “ஆமாம்! என்னுடையவள்!” என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருகின்றன.அவள் கண்கள் மூடியபடிதான்… அதரத்திலும் அந்தப் புன்சிரிப்பு. அந்தத் தழுவல், அவனைத் தன்னுள் அழுத்திய கை இன்னும் அவனை இழுப்பது மாதிரி அழுத்துகின்றது… அந்த நிலையில்…அவ்வளவுதான்.அந்த இரண்டு துளிகள் என்ன நினைத்தனவோ?அன்று அவனை அணைத்த வண்ணமே இரவு கழிகிறது.அவள் எப்படி விலகுவாள்? உயிர் இருந்தால்தானே.அன்று இரவு அவள் விலகவில்லை.அவன் மனதில் காதலின் வெறி! ஐக்கிய வெறி!…அவள் எப்படி நீங்குவாள்?அன்று இரவு அவள் நீங்கவில்லை!உயிர் இருந்தால்தானே!

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.