LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

அறிஞர் அண்ணாதுரையின் அரசியல் வரலாறு

 

பிறப்பு:அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 15, 1909, இல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் 
பிறந்தார்.அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளந்தார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை 
மணம்புரிந்தார். கல்வி:1934 இல், இளங்கலைமானி மேதகைமை, மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் 
பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். 
ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.கடமை கண்ணியம் கட்டுபாடு: பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் 
கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடாக மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். அவை கட்டுப்பாடு, கடமை, கண்ணியம்.அரசியலில் 
நுழைவு:அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் 
உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக 
திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் 
போட்டியிடுவதையும் கைவிட்டார் பெரியாருடன் கருத்து வேறுபாடு:திராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் 
பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிகூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு 
செய்தார்.இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் 
வெளியேறினார்.திமுக உருவாதல்:அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து 
பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக்க்டசி துவக்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி 
அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது. அண்ணாதுரை செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்திருந்தாலும் கீழ்தட்டு சாதி 
வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார். அவர் தொடங்கிய 
திமுகாவும் செல்வாக்கை பெற்றது.திராவிட நாடு:இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் 
கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் 
பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற 
கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.1938 இன் இந்தி எதிர்ப்பு போராட்டம்:1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு 
அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசி முன்மொழிந்து, முதலாம் இந்தி எதிர்ப்பு 
போராட்டமும் வெடித்தது.சட்டமன்றத்தில் அண்ணா:சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், அளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் 
அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் 
வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.வகித்த பொறுப்புகள்:மே 1956 
இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து 
விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட 
முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு 
நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது.அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.மறைவு:அண்ணாதுரை 
முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969ல் மரணமடைந்தார். 

பிறப்பு:

 

     அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 15, 1909, இல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளந்தார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார்.

 

கல்வி:

 

    1934 இல், இளங்கலைமானி மேதகைமை, மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.

 

கடமை கண்ணியம் கட்டுபாடு:

 

   பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடாக மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். அவை கட்டுப்பாடு, கடமை, கண்ணியம்.

 

அரசியலில் நுழைவு:

 

  அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.

 

பெரியாருடன் கருத்து வேறுபாடு:

 

     திராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிகூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

 

திமுக உருவாதல்:

 

     அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக்க்டசி துவக்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது. அண்ணாதுரை செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்திருந்தாலும் கீழ்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார். அவர் தொடங்கிய திமுகாவும் செல்வாக்கை பெற்றது.

 

திராவிட நாடு:

 

     இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.

 

1938 இந்தி எதிர்ப்பு போராட்டம்:

 

     1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசி முன்மொழிந்து, முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் வெடித்தது.

 

சட்டமன்றத்தில் அண்ணா:

 

     சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், அளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் 
அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.

 

வகித்த பொறுப்புகள்:

 

     மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

 

மறைவு:

 

     அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969ல் மரணமடைந்தார். 

 

அறிஞர் அண்ணா...

பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.

அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.

படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.

படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.

எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.

சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.

இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.

1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.

17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.

நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.

அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது .அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.

அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.

எதையும்..தாங்கும் இதயம்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

மாற்றான் தோட்டத்து மல்லைகைக்கும் மணம் உண்டு

ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

 

by Swathi   on 20 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன் கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!!
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
தோழர் நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.