LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

கலைஞர் மு. கருணாநிதி

இயற்பெயர் : தக்ஷிணாமூர்த்தி

பெயர் : முத்துவேல் கருணாநிதி

சிறப்புப் பெயர்: கலைஞர்

பிறந்த தேதி: 3 - ஜூன் - 1924

இறந்த தேதி : 7 - ஆகஸ்ட் - 2018

ராசி : மிதுனம்

அப்பா : முத்துவேலர் 

அம்மா : அஞ்சுகம் 

 

பிறப்பு:

       நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி.கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

 

மாணவர் மன்றம்:

    கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்:

     1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர்:

     போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

பொருளாளர்:

     1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.  

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் அரசியல் வாழ்க்கை நிகழ்வுகள் .. 

  

ஆண்டு    நிகழ்வு 
1924   திருக்குவளையில் பிறப்பு
1939   நட்பு என்ற தலைப்பில் முதல் மேடைப்பேச்சு
1941   முதல் பத்திரிகை மாணவ நேசன் மாத இதழ்
1944   அரங்கேற்றிய முதல் நாடகம் "பழனியப்பன்" 
1947   முதல் வசனம் எழுதிய "ராஜகுமாரி" திரைப்படம் வெளியானது 
1953   கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பு
1953   திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில் இடதுகண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டது 
1955   கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது 
1957   இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்பு 
1957   குளித்தலை சட்டசபை தொகுதியில் முதல் வெற்றி
1962   தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் வெற்றி
1963   இந்தி எதிர்ப்பு மாநாட்டில் சட்ட நகலை எரித்து கைது 
1967   சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி
1969   முதல் முறையாக முதல்வர் ஆனார்
1969   உதவியாளராக திரு.சண்முகநாதன் சேர்ந்து கடைசிவரை உடனிருந்தார்
1969  

"நீராரும் கடலுடுத்த"  பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். 

1970   லண்டனில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். 
1971   சைதாபேட்டை தொகுதியில் வெற்றி
1971   "உயிரினும் மேலான உடன்பிறப்பே" பயன்படுத்தத் துவங்கினார். 
1971   2-வது முறையாக முதல்வராக பதிவியேற்றார். 
1972   விவசாயிகள் போராட்டம் தமிழகத்தில் நடந்தது . 
1972   சுதந்திர போராட்டத்தில் மாநில முதல்வர்கள் கொடியேற்ற அனுமதியை பெற்றுத்தந்தார்.
1973   கை ரிக்க்ஷா  பழக்கத்தை ஒழித்தார்
1974   சுதந்திர தினத்தில் கொடியேற்றிய முதலாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.
1976   திமுக ஆட்சி வீராணம் ஊழல் புகார் எதிரொலியாக கலைக்கப்பட்டது. 
1977   அண்ணாநகர் தொகுதியில் வென்றார்
1980   அண்ணாநகர் தொகுதியில் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
1989   துறைமுகம் தொகுதியில் வெற்றி
1989   3வது முறையாக முதல்வர் ஆனார்
1989   பெண்களுக்கும் சம சொத்துரிமை உண்டு என சட்டம் நிறைவேற்றினார்
1991   துறைமுகம் தொகுதியில் 890 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 
1996   சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்றார்
1996   4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
1997   நாட்டிலேயே முதல்முறையாக தகவல் தொழில்நுட்பத் துறைக்கென கொள்கையை அறிவித்தார்.
2001   மேம்பால ஊழல் வழக்கில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
2001   சேப்பாக்கம் தொகுதியில் 4834 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
2006   சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் வெற்றி.
2006   5-வது முறையாக முதலமைச்சரானார்.
2011   திருவாரூர் தொகுதியில் வெற்றி
2011   கலைஞர் வசனத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் "பொன்னர் சங்கர்"
2016   மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு 68366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 
2018   ஆகஸ்ட் 7, மாலை 6:10 மணிக்கு மறைந்தார்.
by Swathi   on 18 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன் கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!!
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
தோழர் நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.