LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல் வரலாறு Print Friendly and PDF
- கட்சிகள் (Political Parties )

அ தி மு க அரசியல் வரலாறு

     எம்,ஜி,ஆர் அக்டோபர் மாதம் 17, 1972 ம் தேதியன்று தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதுக்கட்சியைத் தொடங்கினார். அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரைச் சூட்டினார், எம்,ஜி,ஆர்.


கழகத்தின் கொடி:


     அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது குறித்த அறிவிப்பை முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கம் வெளியிட்டார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.


புதிய இயக்கத்தின் பெயர்:


     புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த எம்.ஜி.ஆர் , அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் தென்னகம் நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.தி.மு.க.வில் இருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம் ஒன்றாய் இருந்தது.


உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்தது:


     அடுத்த சில நாட்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.


இரட்டை இலைச் சின்னம்:


     தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்த சின்னங்களின் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தார் மக்கள்திலகம். ஏழை, எளிய மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாக அது இருந்தது. தேர்தல் பிரச்சாரம் ஒரு மாதம் நடந்தது.


முதல் முறை ஆட்சி:


     பகல்,இரவு பாராமல் ,மக்களைச் சந்தித்து, இரட்டை விரலைக் காண்பித்து, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். இரட்டை இலை சின்னம் உதயசூரியனை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அன்றிலிருந்து இன்று வரை இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலை மனதில் பதிந்து சாதனை படைத்து வருகிறது. 1974ம் ஆண்டு, புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1974இல் மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.


இரண்டாவது முறையாக வெற்றி:


     1977ம் ஆண்டு புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.1980ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.1981ம் ஆண்டு மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.1984இல் அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே நடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.


இறப்பு:


     1987ம் ஆண்டு முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்.எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று ஜெ. ஜெயலலிதா அவர்கள் அதன் பொதுச்செயலாளர் ஆனார்.


ஜெ. ஜெயலலிதா:


     அதன் பின்னர் ஜெயலலிதாவே முதல்வர் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.ஜூன் 24, 1991 முதல் மே 11, 
1996 வரை தமிழகத்தின் 11 வது முதல்வராக இருந்தார்.மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை தமிழகத்தின் 14 வது முதல்வரானார்.2011 முதல் தமிழகத்தின் 16 வது முதல்வராக இருந்து வருகிறார்.

by Swathi   on 21 Aug 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்.... தமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்....
2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம் 2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம்
2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான  ஓட்டு விகிதங்கள் 2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான ஓட்டு விகிதங்கள்
தமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு தமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு
2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம்
தமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும்
காந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு காந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு
கருத்துகள்
19-Mar-2021 02:23:40 இலங்கை ஏ.ஜோன் said : Report Abuse
தமிழக அரசியல் வரலாற்றில் பங்கேற்ற முதலமைச்சர்களில் புரட்சித்தலைவர் வித்தியாசமானவர். ஊழலற்ற உண்மையான தலைவர். அவர் முதலமைச்சரானதில் பெருமை பெற்றார் என்பதைவிட, அவரால் அப்பதவி பெருமைப்பட்டது என்பதே உண்மையாகும். அவர் இறந்து 33 ஆண்டுகளாகியும், இன்றும் தமிழக அரசியலில் அவர் கதாநாயகனாக விளங்குவதே சான்றாகும்.
 
01-Nov-2017 11:21:31 பருத்தியூர் சரவணன் said : Report Abuse
மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களை போல தியாக மனப்பான்மை உள்ள தலைவரை தமிழகம் பெற்றது வரப்பிரசாதம்தான்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.