LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

போங்கடி நீங்களும் உங்க காதலும் - திரை விமர்சனம் !!

நடிகர் : ராமகிருஷ்ணன்


நடிகை : ஆத்மியா


இயக்குனர் :ராமகிருஷ்ணன்


இசை : கண்ணன்



அப்பா, அம்மா இல்லாதா அனாதையாக ஒரு குப்பத்தில் வாழ்கிறார் ஹீரோ ராமகிருஷ்ணன்.


வேலை ஏதும் செய்யாமல் ஊரை சுற்றும் ராமகிருஷ்ணன், தன் நண்பர் சென்ராயனுடன் சேர்ந்து அப்ப அப்ப சிறுசிறு திருட்டு தொழிலையும் செய்து வருகிறார். 


ஒரு நாள் ஹீரோயின் ஆத்மியாவும், அவரது தோழி காருண்யாவும் ரோட்டில் நடந்து செல்லும் போது சென்ராயன் ஆத்மியாவின் பையை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறார். அப்போது நல்லவன் போல வரும் ராமகிருஷ்ணன் சென்ராயனை துரத்திக் கொண்டு ஓடுகிறார். இவர்களை பின் தொடரும் ஆத்மியாவும், காருண்யாவும் இவர்கள் இருவரும் நண்பர்கள் எனத் தெரிந்ததும் ஷாக் ஆகிறார்கள். 


ஆனால் ராமகிருஷ்ணன் மீது கோபம் கொள்ள வேண்டிய ஆத்மியாவோ கோபம் கொள்ளாமல், ஹீரோ மீது காதல்க் கொள்கிறார். தன் காதலை ஹீரோவிடம் சொல்ல முயற்சி செய்கிறார் ஆத்மியா. 


ஆனால் ராமகிருஷ்ணனோ காதலை ஏற்காமல் அலட்சியம் காட்டி வருகிறார். ஒரு கட்டத்தில் ஆத்மியாவின் காதலை ராமகிருஷ்ணன் ஏற்றுக் கொள்ள. அதற்கு பிறகு ராமகிருஷ்ணனை அவமானப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறார் ஆத்மியா. இதைப் பார்த்து கோபம் அடையும் ஆத்மியாவின் தோழி காருண்யா, ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கிறார். 


அதற்கு ஆத்மியா, நான் முன்பு ஒருவரை காதலித்து வந்தேன். வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய முடிவு எடுத்த நிலையில், என் வீட்டிற்கு திருட வந்த ராமகிருஷ்ணன் நாங்கள் காதலிப்பதை வீட்டிற்கு தெரியும்படி செய்துவிட்டான். இதனால் என் வாழ்க்கை வீணாய் போனது. அவனைப் பழிவாங்கத்தான் தேடிச் சென்று காதலித்தேன் என்று கூறுகிறார். இதைக் கேட்டு காருண்யாஅதிர்ச்சியடைகிறார். இந்த விஷயம் ராமகிருஷ்ணனுக்கு தெரிந்து விடுகிறது. 


இறுதியில் ராமகிருஷ்ணன், ஆத்மியாவிடம் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.  


ஹீரோவாக வரும் ராமகிருஷ்ணனின் நடிப்பு சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், ''டவுசர் தெரிய லுங்கி கட்டினா நாங்க லோக்கலு, ஜட்டி தெரிய பேண்ட் போட்டா அது பேஷனா...?'' என்பது போன்ற அவரது வசனங்கள் சற்றே அவரை கவனிக்க வைக்கிறது. அவரது நடமும் பரவாயில்லை. மொத்தத்தில் ராமகிருஷ்ணன் தனது முந்தைய படங்களைக்காட்டிலும் இந்த படத்தில் கொஞ்சம் நன்றாகவே செய்திருக்கிறார். 


ஹீரோயின் ஆத்மியா, மனம் கொத்தி பறவை'யில் கவர்ந்த அளவிற்கு நம் மனம் கவரவில்லை என்றாலும், வில்லானிக் ஹீரோயினாக மிரட்ட முயற்சித்திருக்கிறார்.


ஆத்மியாவின் தோழியாக வரும் காருண்யா, போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சென்ராயன் ஆகியோர் கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்.


கண்ணன் இசையில் பாடல்கள் கொஞ்சம் பரவாயில்லை..


மொத்தத்தில் போங்கடி நீங்களும் உங்க காதலும் ஏதோ பரவாயில்லை....... 

by Swathi   on 26 Apr 2014  0 Comments
Tags: போங்கடி நீங்களும் உங்க காதலும்   Pongadi Neengalum Unga Kaadhalum                 
 தொடர்புடையவை-Related Articles
போங்கடி நீங்களும் உங்க காதலும் - திரை விமர்சனம் !! போங்கடி நீங்களும் உங்க காதலும் - திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.