பொங்கல் விடுமுறையை குறிவைத்து தற்போது தமிழ் சினிமாவில் பல படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன. படங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், தியேட்டர்களின் எண்ணிக்கையை பொருத்து ஒரு சில படங்கள் ரிலீஸில் பின்வாங்கும் நிலை ஏற்படும்.
பொங்கல் ரிலீசில் களம் இறங்கும் படங்கள் குறித்த தகவல்களை இப்போது பார்ப்போமா...
விஷால் - இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் கதகளி படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதேபோல இயக்குநர் பாண்டிராஜின் இன்னொரு படமான சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படமும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள மிருதன் படமும் பொங்கல் சமயத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாலாவின் இயக்கத்தில், சசிகுமார் நடித்துள்ள தாரை தப்பட்டை பொங்கல் அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்புகள் வெளிவர உள்ளன.
பேய்ப்படங்கள் ஹிட் ஆகிற நேரம் இது. இதனால் சுந்தர் சியின் அரண்மனை 2 படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படமும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது.
இதுபோல 6 படங்கள் பொங்கல் ரேஸில் இருந்தாலும் திரையரங்குகள் கிடைக்காமல் ஒன்றிரண்டு படங்கள் வெளியாகாமல் போக வாய்ப்புள்ளது.
|