|
||||||||
பீட்ரூட் பொரியல் (beetroot poriyal ) |
||||||||
தேவையானவை: பீட்ரூட் - 1 வத்தல் - 5 தேங்காய் துருவல் - அரைகப் வெங்காயம் - 1 சிரகம் - சிறிது பூண்டு - 2பல் உப்பு - தேவைகேற்ப்ப எண்ணெய் - தேவையான அளவு கடுகு - சிறிது உளுத்தம் பருப்பு - சிறிது கறிவேப்பிலை - சிறிது செய்முறை : 1.முதலில் பீட்ரூட்டை நன்கு தோல் எடுத்து சிறிதாக சீவி கொள்ளவும். 2.பிறகு தேங்காய் மற்றும் சீரகம், பூண்டு வத்தல் இவை அனைத்தையும் மிக்ஸில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். 3.அடுப்பில் கடாயை வைத்து அதில் தாளிக்க கொடுத்தவையை போட்டு தாளிக்க வேண்டும். 4.அதன் பின்னர் அதில் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியது அதில் பீட்ரூட் போட்டு நன்கு வதக்க வேண்டும். 5.தண்ணீர் ஊற்றாமல் எண்ணெய்யில் வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் அதில் உப்பு போட்டு கிளரவேண்டும். 6.அதன் பின்னர் அதில் அரைத்து வைத்த தேங்காவை போட வேண்டும்.தேங்காய் போட்டு 2 நிமிடம் வதக்கி இறக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|