தேவையானவை :
வெண்டைக்காய் 1/2கிலோ வெங்காயம்-1 சிவப்புமிளகாய்வத்தல்-6,7 எண்ணெய்-3ஸ்பூன் கடுகு-கொஞ்சம் கறிவேப்பிலை-கொஞ்சம் உப்பு-தேவையானஅளவு செய்முறை : 1. முதலில் வெண்டைக்காயை சிறிய வட்டமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாநறுக்கிக்கொள்ளவும். 2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலையை முதலில் போட்டு வதக்கிக் கொள்ளவும். 3. பின் வெண்டைக்காய், வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டேஇருக்கவேண்டும். 4. பத்து நிமிடங்கள் நன்கு வதங்கியதும் அதில் உப்பையும் சேர்த்துக் கிளறவும்.
|