LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

உருளைக்கிழங்கு கறி (potato curry)

தேவையானவை:


உருளைக்கிழங்கு = அரை கிலோ

வெங்காயம் = 100 கிராம்

தக்காளி = 100 கிராம்

இஞ்சி = சிறு துண்டு

சீரகம் = அரை ஸ்பூன்

மிளகாய் பொடி = 2 ஸ்பூன்

மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்

எண்ணெய் = 5 ஸ்பூன்

உப்பு = தேவையான அளவு


செய்முறை:


1.முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து தேவையான அளவில் துண்டு போட்டுக் கொள்ளவும்.

2.வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி விட்டு தட்டிக் கொள்ளவும்.

3.எண்ணெயை காய வைத்து சீரகம் சேர்க்கவும். இது வெடித்ததும் வெங்காயம், தட்டிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

4.வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

5.இரண்டும் வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

6.பிறகு கிளறி இறக்கும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது சேர்த்து கிளறி பரிமாறவும்.

by nandhini   on 02 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.