LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாட்டிலேயே மிக நீளமான ரயில்-சாலை இரண்டு அடுக்குப் பாலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

நாட்டிலே மிகவும் நீளமான ரயில் மற்றும் சாலை இரண்டு அடுக்குபாலத்தை பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைத்தார். 

அஸ்ஸாம் மாநிலத்தில் பொகீபில் என்னும் இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 4.94 கி.மீ. தூரத்திற்கு இந்தப் பாலம் கட்டப்பட்டு உள்ளது.

பாலத்தின் கீழ் அடுக்கில் இரட்டை அகல ரயில் பாதையும், மேல் அடுக்கில் மூன்று வழிச் சாலையும் இடம்பெற்றுள்ளன. கடந்த 1997-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் தேவகவுடா இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமர் வாஜ்பாயால் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. 

முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2007-ஆம் ஆண்டில் இதை தேசிய திட்டமாக அறிவித்தது. மொத்தத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு வாஜ்பாய் பிறந்த தினத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

தின்சுகியா - நாஹர்லாகுன் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இது வெறும் பாலம் அல்ல. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களை இணைக்கும் உயிர்நாடி அது என்றார் பிரதமர் மோடி.

அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் அருகேயுள்ள பொகீபில் என்னும் இடத்தில் இந்த இரட்டைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுகியா நகரில் இருந்து அருணாசலப் பிரதேச மாநிலத்தின் நாஹர்லாகுன் நகருக்கு ரயிலில் செல்வதற்கான பயண நேரம் 10 மணி நேரத்துக்கும் மேலாக குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாகப் பதிவாகும் நிலநடுக்கத்தை தாங்கும் வல்லமை கொண்டது. தொடக்கத்தில் ரூ.3,230.02 கோடியில் திட்டமிடப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி, கால தாமதம் காரணமாக ரூ.5,960 கோடி செலவில் முடிந்து இருக்கிறது. 

பொகீபில் ரயில்-சாலை இரட்டை பாலத்தால் இந்திய பாதுகாப்புத் துறையின் பலம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக, அவசர காலங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் வகையில் பாலம் கட்டமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் பிரம்மபுத்ரா நதியின் தெற்குக் கரையில் இருந்து வடக்கு கரைக்கு எளிதாக செல்வதற்கு இந்த இரட்டைப் பாலம் பேருதவியாக இருக்கும் என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதாவது, சீனாவை ஒட்டிய இந்தியாவின் தொலைதூர எல்லைப் பகுதியை சென்றடைவது இனி எளிதாக இருக்கும் என்றார் அவர்.

by Mani Bharathi   on 27 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி  மே1-ந் தேதிக்குள் வருகிறது! ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி மே1-ந் தேதிக்குள் வருகிறது!
இந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் இந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் "112"  நடைமுறைக்கு வந்தது!
தூய்மை நகரங்கள் பட்டியலில் 3-வது முறையாக  இந்தூர் முதலிடம் பிடித்து  விருது பெறுகிறது! தூய்மை நகரங்கள் பட்டியலில் 3-வது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்து விருது பெறுகிறது!
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு! வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு!
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் ராணுவ மரியாதையுடன் நடந்தது! காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் ராணுவ மரியாதையுடன் நடந்தது!
காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட   40 பேர் பலி! காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 பேர் பலி!
மத்திய அரசு துறைகளில் 4.12 லட்சம்  பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தகவல்! மத்திய அரசு துறைகளில் 4.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தகவல்!
பசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது-  நாசாவின் பாராட்டு! பசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.