LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- சட்ட பஞ்சாயத்து இயக்கம்

நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…

(ஓராண்டு தொடர் போராட்டத்தின் துவக்கம்…)


குடும்பங்களில் வறுமை, வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகள், சீரழியும் இளையதலைமுறை என அனைத்து பிரச்னைகளுக்கும் தூண்டுகோலாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் போராடி வருகிறது ( 2016 மதுவிலக்கு ஆண்டுஎன்ற இலக்கோடு…)

மதுவிற்கு எதிரான போராட்டத்தை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக, இளைஞர் இயக்கமாக மாற்றுவதற்காக இன்று(29-11-2014), சட்ட பஞ்சாயத்து இயக்கம் “நாட்டுக்காக 4 பேர் – டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டத்தை” சென்னை-கண்ணம்மா பேட்டை சுடுகாடு முன்பு துவங்குகிறது.

போராட்ட வழிமுறை: 4 பேர் கொண்ட குழு சேர்ந்து நின்று மதுவை தரையில் ஊற்றி, மதுஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்.  இன்று துவங்கும் இந்தப் போராட்டம் அடுத்த ஓராண்டு தொடரும். அடுத்த ஆண்டு, இதே தேதியில்( நவம்பர் 29, 2015, ஞாயிறு) இப்போராட்டத்தின் நிறைவு நிகழ்வு தமிழகந்தழுவியதொரு மாபெரும் மக்கள் எழுச்சியாக, மதுக்கடைகளுக்கு இறுதி முடிவு கட்டும் விதமாக அமையும்.

ஏன், இன்று துவங்கப்படுகிறது.. ? 2003ம் ஆண்டு, இதே நாளில்தான்( 29-11-2003) தமிழக அரசாங்கம் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்தது. அதாவது, அரசே சாராயம் விற்கத் துவங்கிய நாள் இன்று. தமிழகத்தை சீரழிக்கத் துவங்கிய டாஸ்மாக் கடைகள் துவங்கப்பட்ட இதே நாளில், இக்கடைகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கான மக்கள் போராட்டம் துவங்கப்படுகிறது.

ஏன் சுடுகாடு முன்பு துவங்கப்படுகிறது…? மதுப்பழக்கத்தின் விளைவாக கல்லீரல் வீங்கி, குடல் வெடித்து, சாலை விபத்துகளில் சிக்கி இறப்பவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 5 லட்சம் பேர். தமிழக அரசு, தனது வருமானத்திற்காக பலலட்சம் பேரை மறைமுகமாகக் கொன்றுவருகிறது என்பதை அடையாளப்படுத்துவதற்காக, இப்போராட்டம் சுடுகாடு முன்பு நடக்கிறது.


பொதுமக்கள்சமூக ஆர்வலர்கள்பொதுநல அமைப்புகள் சுய உதவிக்குழு - பள்ளிகல்லூரி மாணவர்களுக்கு வேண்டுகோள்:


மதுக்கடைகளுக்கு இறுதிமுடிவு கட்டும் இந்த அகிம்சைப் போராட்டத்தில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டுகிறோம். 4 பேர் கொண்ட குழு, காலி மது பாட்டிலில் தண்ணீரை நிரப்பி அல்லது சாதாரண தண்ணீர் பாட்டிலில் உள்ள நீரை தரையில் ஊற்றி ” மது வேண்டாம்” “ மதுக்கடைகளை மூடுங்கள்” என்ற உங்கள் உணர்வை அரசிற்குத் தெரிவியுங்கள்.

குறிப்பாக பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் இப்போராட்டத்தில் வீரியமாகப் பங்கெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த அறவழிப்போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலம், அடுத்த தலைமுறை “மது இல்லா” சமுதாயத்தில் வாழட்டும்.

உங்களின் செயல்பாட்டை புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் புகைப்படங்களை, பெயர், மாவட்டம், தொடர்பு எண், ஈமெயில் முகவரியோடு:

1. sattapanchayat@gmail.com  க்கு ஈமெயில் அனுப்பி வைக்கலாம்.
2. WhatsAPP க்கு அனுப்பி வைக்க : 99625-10291

3. தபாலில் அனுப்ப:
   சட்ட பஞ்சாயத்து இயக்கம், 31, தென்மேற்கு போக் சாலை, தி.நகர், சென்னை-600017

இப்படங்கள், சட்ட பஞ்சாயத்து இயக்க முகநூலில்( 47352+ LIKES) தொடர்ந்து வெளியிடப்படும். ( facebook.com/sattapanchayath )

தொடர்புக்கு:   87545-80274 , 87545-88222

குறிப்புகள் :

1. (2003ல்) சாராய விற்பனை மூலம் அரசிற்கு கிடைத்த வரிவருவாய் ரூ.3639 கோடி. 10 ஆண்டுகளில்(2013ல்) இது ரூ.21681 கோடி. கிட்டத்தட்ட 700% வளர்ச்சி !!

2. தமிழகத்தில் சாலைவிபத்துகளில் ஆண்டுக்கு சுமார் 15000 பேர் இறப்பு. கணிசமான இறப்பிற்குக் காரணம் மது. ( இந்தியாவில் தமிழகம் முதலிடம் )


                 2016மதுவிலக்கு ஆண்டு     

by Swathi   on 29 Nov 2014  0 Comments
Tags: மது ஒழிப்பு   சட்ட பஞ்சாயத்து இயக்கம்   2016 மதுவிலக்கு ஆண்டு   Sudukaadu   Satta Panchayat Iyakkam   Madhu vilakku     
 தொடர்புடையவை-Related Articles
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள் தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !! சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !!
தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !! தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !!
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம்  -2016 – மதுவிலக்கு ஆண்டு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு
ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.