LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-10

 

226. இரந்து கொண்டிருக்கும் அது!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்-பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத் 5
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே.  
227. நயனில் கூற்றம்!
பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய, 5
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின், 10
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?  
228. ஒல்லுமோ நினக்கே!
பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். 
துறை: ஆனந்தப் பையுள். 
கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்? 5
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் 10
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? 15
229. மறந்தனன் கொல்லோ?
பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை.
குறிப்பு: அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது. 
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்,
பங்குனி உயர் அழுவத்துத்,
5
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல் நாள்மீன் துறை படியப்,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக், 10
கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே:
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்,
பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமன் தில்லென 15
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்,
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும், 20
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்,
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு 25
அளந்து கொடை அறியா ஈகை,
மணிவரை அன்ன மாஅ யோனே?  
230. நீ இழந்தனையே கூற்றம்!
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.
திணை: பொதுவியல். 
துறை: கையுறுநிலை. 
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்,
களம்மலி குப்பை காப்பில வைகவும்,
விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்,
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள், 5
பொய்யா எழினி பொருதுகளம் சேர-
ஈன்றோர் நீத்த குழவி போலத்,
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்,
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி 10
நீ இழந் தனையே, அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்,
வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்,
நேரார் பல்லுயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே. 15
231. புகழ் மாயலவே!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
எரிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்அழல்,
குருகினும் குறுகுக; குறுகாது சென்று,
விசும்பஉற நீளினும் நீள்க: பசுங்கதிர்
திங்கள் அன்ன வெண்குடை 5
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!  
232. கொள்வன் கொல்லோ!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
திணை : தும்பை. துறை:பாண்பாட்டும் ஆம். 
இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய 5
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?  
233. பொய்யாய்ப் போக!
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!
இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண், 5
போர்அடு தானை, எவ்வி மார்பின்
எகுஉறு விழுப்புண் பல என
வைகறு விடியல், இயம்பிய குரலே.  
234. உண்டனன் கொல்?
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்,
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்-
உலகுபுகத் திறந்த வாயில் 5
பலரோடு உண்டல் மரீஇ யோனே?  
235. அருநிறத்து இயங்கிய வேல்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே! 5
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ, 10
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ? 15
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!  
236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
குறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது. 
கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
மலை கெழு நாட! மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்
புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே 5
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி,
இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்,
இம்மை போலக் காட்டி, உம்மை 10
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!  
237. சோற்றுப் பானையிலே தீ!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை.
(வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப்
பாடிய செய்யுள் இது.) 
நீடுவாழ்க! என்று, யான் நெடுங்கடை குறுகிப்,
பாடி நின்ற பசிநாட் கண்ணே,
கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என 5
நச்சி இருந்த நசைபழுது ஆக,
அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு,
அளியர் தாமே ஆர்க என்னா
அறன்இல் கூற்றம் திறனின்று துணிய,
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் 10
வாழைப் பூவின் வளைமுறி சிதற,
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;
ஆங்கு அது நோயின்று ஆக, ஓங்குவரைப் 15
புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்,
எலிபார்த்து ஒற்றாது ஆகும்; மலி திரைக்
கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
எழுமதி, நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே. 20
238. தகுதியும் அதுவே!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை.
(வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.) 
கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே, கட்கா முறுநன்; 5
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்,
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே;
ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே;
வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப, 10
எந்தை ஆகுல அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற
என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே?
மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின்,
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக் 15
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு,
வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து,
அவல மறுசுழி மறுகலின்,
தவலே நன்றுமன் ; தகுதியும் அதுவே.  
239. இடுக, சுடுக, எதுவும் செய்க!
பாடியவர்: பேரெயின் முறுவலார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
தொடி யுடைய தோள் மணந்தணன் ;
கடி காவிற் பூச் சூடினன் ;
தண் கமழுஞ் சாந்து நீவினன் ;
செற் றோரை வழி தபுத்தனன் ;
நட் டோரை உயர்பு கூறினன் ; 5
வலியரென, வழி மொழியலன் ;
மெலியரென, மீக் கூறலன்;
பிறரைத் தான் இரப் பறியலன் ;
இரந் தோர்க்கு மறுப் பறியலன் ;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; 10
வருபடை எதிர் தாங்கினன் ;
பெயர் படை புறங் கண்டனன் ;
கடும் பரிய மாக் கடவினன் ;
நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ;
ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்; 15
தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்;
பாண் உவப்பப் பசி தீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்-
இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! 20
படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!  
240. பிறர் நாடுபடு செலவினர்!
பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, 5
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை,
சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி,
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது; 10
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.  
241. விசும்பும் ஆர்த்தது!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே. 5
242. முல்லையும் பூத்தியோ?
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை.
குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம். 
இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை 5
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?  
243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு 5
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை 10
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே?  
244. கலைபடு துயரம் போலும்!
(பாடினோர் பாடபபட்டடோர் யாவரெனத் தெரியாதவாறு இது அழிந்தது. பாடலும் சிதைந்தே கிடைத்துள்ளன). 
பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .  
245. என்னிதன் பண்பே?
பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 
யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, 5
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!  
246. பொய்கையும் தீயும் ஒன்றே!
பாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
திணை: பொதுவியல் 
துறை: ஆனந்தப் பையுள் 
பல்சான் றீரே ; பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, 5
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; 10
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! 15
247. பேரஞர்க் கண்ணள்!
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: பொதுவியல் 
துறை: ஆனந்தப் பையுள் 
யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப், 5
பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,
தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்
முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்,
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே! 10
248. அளிய தாமே ஆம்பல்!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்
திணை: பொதுவியல் 
துறை: தாபதநிலை 
அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே. 5
249. சுளகிற் சீறிடம்!
பாடியவர்: தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்.
திணை: பொதுவியல் 
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)). 
கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்,
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு, 5
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று ; மன்னே! இன்றே
அடங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை, 10
உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே.  
250. மனையும் மனைவியும்!
பாடியவர்: தாயங் கண்ணியார்
திணை: பொதுவியல் 
துறை: தாபதநிலை 
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே 5
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

226. இரந்து கொண்டிருக்கும் அது!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,இரந்தன்று ஆகல் வேண்டும்-பொலந்தார்மண்டமர் கடக்கும் தானைத் 5திண்தேர் வளவற் கொண்ட கூற்றே.  


227. நயனில் கூற்றம்!
பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
நனிபே தையே, நயனில் கூற்றம்!விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனைஇன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய, 5நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்வளவன் என்னும் வண்டுமூசு கண்ணிஇனையோற் கொண்டனை ஆயின், 10இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?  


228. ஒல்லுமோ நினக்கே!
பாடியவர்: ஐயூர் முடவனார்.பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: பொதுவியல். துறை: ஆனந்தப் பையுள். 
கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகைஅகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்? 5நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்னசேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் 10தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழிவனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்இருநிலம் திகிரியாப், பெருமலைமண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? 15


229. மறந்தனன் கொல்லோ?
பாடியவர்: கூடலூர் கிழார்.பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.குறிப்பு: அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது. 
ஆடு இயல் அழல் குட்டத்துஆர் இருள் அரை இரவில்முடப் பனையத்து வேர் முதலாக்கடைக் குளத்துக் கயம் காயப்,பங்குனி உயர் அழுவத்துத்,
5தலை நாள்மீன் நிலை திரிய,நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,தொல் நாள்மீன் துறை படியப்,பாசிச் செல்லாது, ஊசித் துன்னாதுஅளக்கர்த் திணை விளக்காகக், 10கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே:அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்,பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்நோயிலன் ஆயின் நன்றுமன் தில்லென 15அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே;மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்,காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும், 20கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்,தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு 25அளந்து கொடை அறியா ஈகை,மணிவரை அன்ன மாஅ யோனே?  


230. நீ இழந்தனையே கூற்றம்!
பாடியவர்: அரிசில் கிழார்.பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.திணை: பொதுவியல். துறை: கையுறுநிலை. 
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்,களம்மலி குப்பை காப்பில வைகவும்,விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்,வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள், 5பொய்யா எழினி பொருதுகளம் சேர-ஈன்றோர் நீத்த குழவி போலத்,தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்,கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடுநோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி 10நீ இழந் தனையே, அறனில் கூற்றம்!வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்,வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்,நேரார் பல்லுயிர் பருகி,ஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே. 15


231. புகழ் மாயலவே!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
எரிபுனக் குறவன் குறையல் அன்னகரிபுற விறகின் ஈம ஒள்அழல்,குருகினும் குறுகுக; குறுகாது சென்று,விசும்பஉற நீளினும் நீள்க: பசுங்கதிர்திங்கள் அன்ன வெண்குடை 5ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!  


232. கொள்வன் கொல்லோ!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. திணை : தும்பை. துறை:பாண்பாட்டும் ஆம். 
இல்லா கியரோ, காலை மாலை!அல்லா கியர், யான் வாழும் நாளே!நடுகல் பீலி சூட்டி, நார்அரிசிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-கோடு உயர் பிறங்குமலை கெழீஇய 5நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?  


233. பொய்யாய்ப் போக!
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.பாடப்பட்டோன்: வேள் எவ்வி.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
பொய்யா கியரோ! பொய்யா கியரோ!பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றியபொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண், 5போர்அடு தானை, எவ்வி மார்பின்எகுஉறு விழுப்புண் பல எனவைகறு விடியல், இயம்பிய குரலே.  


234. உண்டனன் கொல்?
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.பாடப்பட்டோன்: வேள் எவ்வி.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
நோகோ யானே? தேய்கமா காலை!பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்,தன்அமர் காதலி புன்மேல் வைத்தஇன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்-உலகுபுகத் திறந்த வாயில் 5பலரோடு உண்டல் மரீஇ யோனே?  


235. அருநிறத்து இயங்கிய வேல்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!பெரிய கட் பெறினே,யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே! 5என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!நரந்தம் நாறும் தன் கையால்,புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னேஅருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ, 10இரப்போர் புன்கண் பாவை சோர,அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்சென்றுவீழ்ந் தன்று, அவன்அருநிறத்து இயங்கிய வேலே!ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ? 15இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்றுஈயாது வீயும் உயிர்தவப் பலவே!  


236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!
பாடியவர்: கபிலர்திணை: பொதுவியல் துறை: கையறுநிலைகுறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது. 
கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம்சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்மலை கெழு நாட! மா வண் பாரிகலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே 5பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாதுஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி,இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்மேயினேன் அன்மை யானே; ஆயினும்,இம்மை போலக் காட்டி, உம்மை 10இடையில் காட்சி நின்னோடுஉடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!  


237. சோற்றுப் பானையிலே தீ!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன்: இளவெளிமான்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.(வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப்பாடிய செய்யுள் இது.) 
நீடுவாழ்க! என்று, யான் நெடுங்கடை குறுகிப்,பாடி நின்ற பசிநாட் கண்ணே,கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்,பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என 5நச்சி இருந்த நசைபழுது ஆக,அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு,அளியர் தாமே ஆர்க என்னாஅறன்இல் கூற்றம் திறனின்று துணிய,ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் 10வாழைப் பூவின் வளைமுறி சிதற,முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்கள்ளி போகிய களரியம் பறந்தலை,வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;ஆங்கு அது நோயின்று ஆக, ஓங்குவரைப் 15புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்,எலிபார்த்து ஒற்றாது ஆகும்; மலி திரைக்கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று,நனியுடைப் பரிசில் தருகம்,எழுமதி, நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே. 20


238. தகுதியும் அதுவே!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன்: இளவெளிமான்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.(வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.) 
கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்தசெவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா,வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்காடுமுன் னினனே, கட்கா முறுநன்; 5தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்,பாடுநர் கடும்பும் பையென் றனவே;தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே;ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே;வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப, 10எந்தை ஆகுல அதற்படல் அறியேன்;அந்தோ! அளியேன் வந்தனென்; மன்றஎன்ஆ குவர்கொல், என் துன்னி யோரே?மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின்,ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக் 15கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு,வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து,அவல மறுசுழி மறுகலின்,தவலே நன்றுமன் ; தகுதியும் அதுவே.  


239. இடுக, சுடுக, எதுவும் செய்க!
பாடியவர்: பேரெயின் முறுவலார்.பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
தொடி யுடைய தோள் மணந்தணன் ;கடி காவிற் பூச் சூடினன் ;தண் கமழுஞ் சாந்து நீவினன் ;செற் றோரை வழி தபுத்தனன் ;நட் டோரை உயர்பு கூறினன் ; 5வலியரென, வழி மொழியலன் ;மெலியரென, மீக் கூறலன்;பிறரைத் தான் இரப் பறியலன் ;இரந் தோர்க்கு மறுப் பறியலன் ;வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; 10வருபடை எதிர் தாங்கினன் ;பெயர் படை புறங் கண்டனன் ;கடும் பரிய மாக் கடவினன் ;நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ;ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்; 15தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்;பாண் உவப்பப் பசி தீர்த்தனன்;மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்-இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! 20படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!  


240. பிறர் நாடுபடு செலவினர்!
பாடியவர்: குட்டுவன் கீரனார்.பாடப்பட்டோன்: ஆய்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,வாடா யாணர் நாடும் ஊரும்,பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடுகாலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, 5மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்,பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை,சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி,ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது; 10புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்வாடிய பசியர் ஆகிப், பிறர்நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.  


241. விசும்பும் ஆர்த்தது!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.பாடப்பட்டோன்: ஆய்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடிவச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,போர்ப்புறு முரசும் கறங்க,ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே. 5


242. முல்லையும் பூத்தியோ?
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம். 
இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்தவல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை 5முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?  


243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்திணை: பொதுவியல் துறை: கையறுநிலை 
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு 5உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,கரையவர் மருளத், திரையகம் பிதிர,நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,குளித்துமணற் கொண்ட கல்லா இளமை 10அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,இருமிடை மிடைந்த சிலசொல்பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே?  


244. கலைபடு துயரம் போலும்!
(பாடினோர் பாடபபட்டடோர் யாவரெனத் தெரியாதவாறு இது அழிந்தது. பாடலும் சிதைந்தே கிடைத்துள்ளன). 
பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .  


245. என்னிதன் பண்பே?
பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதைதிணை: பொதுவியல் துறை: கையறுநிலை 
யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?கள்ளி போகிய களரியம் பறந்தலைவெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, 5ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!  


246. பொய்கையும் தீயும் ஒன்றே!
பாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டுதிணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள் 
பல்சான் றீரே ; பல்சான் றீரேசெல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்டகாழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, 5அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்டவேளை வெந்தை, வல்சி ஆகப்,பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; 10பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅறவள்இதழ் அவிழ்ந்த தாமரைநள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! 15


247. பேரஞர்க் கண்ணள்!
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள் 
யானை தந்த முளிமர விறகின்கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப், 5பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்சிறுநனி தமியள் ஆயினும்,இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே! 10


248. அளிய தாமே ஆம்பல்!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்திணை: பொதுவியல் துறை: தாபதநிலை 
அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,இன்னா வைகல் உண்ணும்அல்லிப் படுஉம் புல் ஆயினவே. 5


249. சுளகிற் சீறிடம்!
பாடியவர்: தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்.திணை: பொதுவியல் துறை: தாபதநிலை(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)). 
கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்,கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்,பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு, 5உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,ஒருவழிப் பட்டன்று ; மன்னே! இன்றேஅடங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை, 10உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரிநீறாடு சுளகின் சீறிடம் நீக்கி,அழுதல் ஆனாக் கண்ணள்,மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே.  


250. மனையும் மனைவியும்!
பாடியவர்: தாயங் கண்ணியார்திணை: பொதுவியல் துறை: தாபதநிலை 
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,அல்லி உணவின் மனைவியொடு, இனியே 5புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்முனித்தலைப் புதல்வர் தந்தைதனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.