LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-12

 

276. குடப்பால் சில்லுறை!
பாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார்
திணை:தும்பை 
துறை: தானைநிலை 
நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்,
இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்,
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப், 5
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.  
277. சிதரினும் பலவே!
பாடியவர்: பூங்கணுத்திரையார்
திணை: தும்பை 
துறை: உவகைக் கலுழ்ச்சி 
மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து 5
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.  
278. பெரிது உவந்தனளே!
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்
திணை: தும்பை 
துறை: உவகைக் கலுழ்ச்சி 
நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற,
மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான் எனச் சினைஇக், 5
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!  
279. செல்கென விடுமே!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை 
துறை: மூதின் முல்லை 
கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், 5
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள், 10
செருமுக நோக்கிச் செல்க என விடுமே!  
280. வழிநினைந்து இருத்தல் அரிதே!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்
திணை: பொதுவியல் 
துறை: ஆந்தப் பையுள் 
என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; 5
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண ! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும் 10
மண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத்,
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே! 15
281. நெடுந்தகை புண்ணே!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி 
துறை: பேய்க் காஞ்சி 
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,
வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, 5
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,
காக்கம் வம்மோ-காதலந் தோழீ!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!  
282. புலவர் வாயுளானே!
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. 
திணையும் துறையும் தெரிந்தில.
எகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,
யாண்டுளனோ?வென, வினவுதி ஆயின்,
. . . . . . . . . . . . 5
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய 10
பலகை அல்லது, களத்துஒழி யதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,
நாநவில் புலவர் வாய் உளானே.  
283. அழும்பிலன் அடங்கான்!
பாடியவர்: அடை நெடுங் கல்வியார்
திணை: தும்பை 
துறை: பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்). 
ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி,
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், 5
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்,
மன்றுள் என்பது கெட .. .. .. னே பாங்கற்கு
ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க,
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்,
தெற்றிப் பாவை திணிமணல் அயரும், 10
மென்தோள் மகளிர் நன்று புரப்ப,
.. .. .. .. .. ண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே.  
284. பெயர்புற நகுமே!
பாடியவர்: ஓரம் போகியார்
திணை: தும்பை 
துறை: பண்பாட்டு 
வருகதில் வல்லே ; வருகதில் வல் என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடிக் , காலின்,
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த 5
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்,
தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே.  
285. தலைபணிந்து இறைஞ்சியோன்!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: வாகை 
துறை: சால்பு முல்லை 
பாசறை யீரே ! பாசறை யீரே !
துடியன் கையது வேலே ; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே ; காண்வரக்
கடுந்தெற்று மூடையின் .. .. .. 5
வாடிய மாலை மலைந்த சென்னியன்;
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென, விடுகணை மொசித்த
மூரி வேண்டோள் .. .. .. .. ..
சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ! 10
மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக;
நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ;
அதுகண்டு, பரந்தோர் எல்லாம்-புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே, குருசில் ! _ பிணங்குகதிர்
அலமரும் கழனித் தண்ணடை ஒழிய; 15
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.  
286. பலர்மீது நீட்டிய மண்டை!
பாடியவர்: அவ்வையார்
திணை: கரந்தை 
துறை: வேத்தியல் 
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்வழி கட்டிலிற் கிடப்பித்,
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே! 5
287. காண்டிரோ வரவே!
பாடியவர்: சாத்தந்தையார்
திணை: கரந்தை 
துறை: நீண்மொழி 
துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
பொலம்புனை ஓடை அண்ணல் யானை 5
இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்,
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்,
தண்ணடை பெறுதல் யாவது? படினே; 10
மாசில் மகளிர் மன்றல் நன்றும்,
உயர்நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!  
288. மொய்த்தன பருந்தே!
பாடியவர்: கழாத்தலையார்
திணை: தும்பை 
துறை: மூதின் முல்லை 
மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, 5
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.  
289. ஆயும் உழவன்!
பாடியவர்: கழாத்தலையார்.
திணை, துறை. தெரிந்தில. 
ஈரச் செவ்வி உதவின ஆயினும்,
பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி,
வீறுவீறு ஆயும் உழவன் போலப்,
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
மூதி லாளர் உள்ளும், காதலின் 5
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை,
இவற்கு ஈக ! என்னும்; அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி_பாண! பாசறைப்,
பூக்கோள் இன்று என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? 10
290. மறப்புகழ் நிறைந்தோன்!
பாடியவர்: அவ்வையார்
திணை: கரந்தை 
துறை: குடிநிலையுரைத்தல் 
இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை_இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே: 5
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன்_ பெரும ! நிற் குறித்துவரு வேலே.  
291. மாலை மலைந்தனனே!
பாடியவர்: நெடுங்கழுத்துப் பரணர்
திணை: கரந்தை 
துறை: வேத்தியல் 
சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்;
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,
விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_ 5
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை!
மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!  
292. சினவல் ஓம்புமின்!
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்
திணை: வஞ்சி 
துறை: பெருஞ்சோற்று நிலை 
வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனென் என்று,
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின், 5
என்முறை வருக என்னான், கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி,
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.  
293. பூவிலைப் பெண்டு!
பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: காஞ்சி 
துறை: பூக்கோட் காஞ்சி 
நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ? 5
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!  
294. வம்மின் ஈங்கு!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்
திணை: தும்பை 
துறை: தானை மறம் 
வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்;
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்,
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து,
இறையும் பெயரும் தோற்றி,நுமருள் 5
நாள்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு எனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும்
அரவுஉமிழ் மணியின் குறுகார்;
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.  
295. ஊறிச் சுரந்தது!
பாடியவர்: அவ்வையார்
திணை: தும்பை 
துறை: உவகைக் கலுழ்ச்சி 
கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்,
தோடுஉகைத்து எழுதரூஉ, துரந்துஎறி ஞாட்பின்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 5
சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி,
வாடுமலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.  
296. நெடிது வந்தன்றால்!
பாடியவர்: வெள்ளை மாளர்
திணை: வாகை 
துறை: எறான் முல்லை 
வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே? 5
297. தண்ணடை பெறுதல்!
பாடினோர் பாடப்பட்டோன் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வெட்சி 
துறை: இண்டாட்டு 
பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்,
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி 5
நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்,
துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்,
மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே. 10
298. கலங்கல் தருமே!
'எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே : நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே_
நேரார் ஆரெயில் முற்றி,
வாய் மடித்து உரறி, நீ முந்து? என் னானே. 5
299. கலம் தொடா மகளிர்!
பாடியவர்: பொன் முடியார்
திணை: நொச்சி 
துறை: குதிரை மறம் 
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,
கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, 5
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.  
300. எல்லை எறிந்தோன் தம்பி!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: தும்பை 
துறை: தானைமறம் 
தோல்தா; தோல்தா என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேரூர் அட்ட கள்ளிற்கு 5
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.


276. குடப்பால் சில்லுறை!
பாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார்திணை:தும்பை துறை: தானைநிலை 
நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்,இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்,மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்தகுடப்பால் சில்லுறை போலப், 5படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.  


277. சிதரினும் பலவே!
பாடியவர்: பூங்கணுத்திரையார்திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி 
மீன்உண் கொக்கின் தூவிஅன்னவால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகைஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்நோன்கழை துயல்வரும் வெதிரத்து 5வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.  


278. பெரிது உவந்தனளே!
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி 
நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்முளரி மருங்கின், முதியோள் சிறுவன்படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற,மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்முலைஅறுத் திடுவென், யான் எனச் சினைஇக், 5கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகியபடுமகன் கிடக்கை காணூஉ,ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!  


279. செல்கென விடுமே!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்திணை: வாகை துறை: மூதின் முல்லை 
கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;மூதின் மகளிர் ஆதல் தகுமே;மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், 5பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,ஒருமகன் அல்லது இல்லோள், 10செருமுக நோக்கிச் செல்க என விடுமே!  


280. வழிநினைந்து இருத்தல் அரிதே!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்திணை: பொதுவியல் துறை: ஆந்தப் பையுள் 
என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; 5நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;துடிய! பாண ! பாடுவல் விறலி!என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும்இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும் 10மண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத்,தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்கழிகல மகளிர் போல,வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே! 15


281. நெடுந்தகை புண்ணே!
பாடியவர்: அரிசில் கிழார்திணை: காஞ்சி துறை: பேய்க் காஞ்சி 
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, 5நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,காக்கம் வம்மோ-காதலந் தோழீ!வேந்துறு விழுமம் தாங்கியபூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!  


282. புலவர் வாயுளானே!
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. 
திணையும் துறையும் தெரிந்தில.எகுஉளம் கழிய இருநில மருங்கின்அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,யாண்டுளனோ?வென, வினவுதி ஆயின்,. . . . . . . . . . . . 5வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்அருங்கடன் இறுமார் வயவர் எறிய,உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய 10பலகை அல்லது, களத்துஒழி யதே;சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,நாநவில் புலவர் வாய் உளானே.  


283. அழும்பிலன் அடங்கான்!
பாடியவர்: அடை நெடுங் கல்வியார்திணை: தும்பை துறை: பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்). 
ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி,வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்பெறாஅ உறையரா வராஅலின் மயங்கிமாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், 5வலம்புரி கோசர் அவைக்களத் தானும்,மன்றுள் என்பது கெட .. .. .. னே பாங்கற்குஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க,உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்,தெற்றிப் பாவை திணிமணல் அயரும், 10மென்தோள் மகளிர் நன்று புரப்ப,.. .. .. .. .. ண்ட பாசிலைக்கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே.  


284. பெயர்புற நகுமே!
பாடியவர்: ஓரம் போகியார்திணை: தும்பை துறை: பண்பாட்டு 
வருகதில் வல்லே ; வருகதில் வல் எனவேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப,நூலரி மாலை சூடிக் , காலின்,தமியன் வந்த மூதி லாளன்அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த 5ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்திரிந்த வாய்வாள் திருத்தாத்,தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே.  


285. தலைபணிந்து இறைஞ்சியோன்!
பாடியவர்: அரிசில் கிழார்திணை: வாகை துறை: சால்பு முல்லை 
பாசறை யீரே ! பாசறை யீரே !துடியன் கையது வேலே ; அடிபுணர்வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பாணன் கையது தோலே ; காண்வரக்கடுந்தெற்று மூடையின் .. .. .. 5வாடிய மாலை மலைந்த சென்னியன்;வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடுநெடுநகர் வந்தென, விடுகணை மொசித்தமூரி வேண்டோள் .. .. .. .. ..சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ! 10மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக;நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ;அதுகண்டு, பரந்தோர் எல்லாம்-புகழத் தலைபணிந்துஇறைஞ்சி யோனே, குருசில் ! _ பிணங்குகதிர்அலமரும் கழனித் தண்ணடை ஒழிய; 15இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.  


286. பலர்மீது நீட்டிய மண்டை!
பாடியவர்: அவ்வையார்திணை: கரந்தை துறை: வேத்தியல் 
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்கால்வழி கட்டிலிற் கிடப்பித்,தூவெள் அறுவை போர்ப்பித் திலதே! 5


287. காண்டிரோ வரவே!
பாடியவர்: சாத்தந்தையார்திணை: கரந்தை துறை: நீண்மொழி 
துடி எறியும் புலைய!எறிகோல் கொள்ளும் இழிசின!கால மாரியின் அம்பு தைப்பினும்,வயல் கெண்டையின் வேல் பிறழினும்,பொலம்புனை ஓடை அண்ணல் யானை 5இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்,ஓடல் செல்லாப் பீடுடை யாளர்நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளைநெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்,தண்ணடை பெறுதல் யாவது? படினே; 10மாசில் மகளிர் மன்றல் நன்றும்,உயர்நிலை உலகத்து, நுகர்ப; அதனால்வம்ப வேந்தன் தானைஇம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!  


288. மொய்த்தன பருந்தே!
பாடியவர்: கழாத்தலையார்திணை: தும்பை துறை: மூதின் முல்லை 
மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,வென்றதன் பச்சை சீவாது போர்த்ததிண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, 5நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,அருகுகை .. .. .. .. .. .. மன்றகுருதியொடு துயல்வரும் மார்பின்முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.  


289. ஆயும் உழவன்!
பாடியவர்: கழாத்தலையார்.திணை, துறை. தெரிந்தில. 
ஈரச் செவ்வி உதவின ஆயினும்,பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி,வீறுவீறு ஆயும் உழவன் போலப்,பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கியமூதி லாளர் உள்ளும், காதலின் 5தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை,இவற்கு ஈக ! என்னும்; அதுவும்அன் றிசினே;கேட்டியோ வாழி_பாண! பாசறைப்,பூக்கோள் இன்று என்று அறையும்மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? 10


290. மறப்புகழ் நிறைந்தோன்!
பாடியவர்: அவ்வையார்திணை: கரந்தை துறை: குடிநிலையுரைத்தல் 
இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர்இனக்களிற்று யானை_இயல்தேர்க் குருசில்!நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே: 5மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,உறைப்புழி ஓலை போலமறைக்குவன்_ பெரும ! நிற் குறித்துவரு வேலே.  


291. மாலை மலைந்தனனே!
பாடியவர்: நெடுங்கழுத்துப் பரணர்திணை: கரந்தை துறை: வேத்தியல் 
சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்;தூவெள் அறுவை மாயோற் குறுகிஇரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_ 5கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை!மணிமருள் மாலை சூட்டி, அவன் தலைஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!  


292. சினவல் ஓம்புமின்!
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்திணை: வஞ்சி துறை: பெருஞ்சோற்று நிலை 
வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,வாய்வாள் பற்றி நின்றனென் என்று,சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!ஈண்டே போல வேண்டுவன் ஆயின், 5என்முறை வருக என்னான், கம்மெனஎழுதரு பெரும்படை விலக்கி,ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.  


293. பூவிலைப் பெண்டு!
பாடியவர்: நொச்சி நியமங்கிழார்திணை: காஞ்சி துறை: பூக்கோட் காஞ்சி 
நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமைநாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்பிறர்மனை புகுவள் கொல்லோ? 5அளியள் தானே, பூவிலைப் பெண்டே!  


294. வம்மின் ஈங்கு!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்திணை: தும்பை துறை: தானை மறம் 
வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்;கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்,குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து,இறையும் பெயரும் தோற்றி,நுமருள் 5நாள்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு எனப்போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும்அரவுஉமிழ் மணியின் குறுகார்;நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.  


295. ஊறிச் சுரந்தது!
பாடியவர்: அவ்வையார்திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி 
கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்,வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்,தோடுஉகைத்து எழுதரூஉ, துரந்துஎறி ஞாட்பின்,வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 5சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி,வாடுமலை ஊறிச் சுரந்தனஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.  


296. நெடிது வந்தன்றால்!
பாடியவர்: வெள்ளை மாளர்திணை: வாகை துறை: எறான் முல்லை 
வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,எல்லா மனையும் கல்லென் றவ்வேவெந்துஉடன்று எறிவான் கொல்லோநெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே? 5


297. தண்ணடை பெறுதல்!
பாடினோர் பாடப்பட்டோன் : பெயர்கள் தெரிந்தில.திணை: வெட்சி துறை: இண்டாட்டு 
பெருநீர் மேவல் தண்ணடை எருமைஇருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்,கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி 5நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்,துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதிநெடுவேல் பாய்ந்த மார்பின்,மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே. 10


298. கலங்கல் தருமே!

'எமக்கே கலங்கல் தருமே தானேதேறல் உண்ணும் மன்னே : நன்றும்இன்னான் மன்ற வேந்தே; இனியே_நேரார் ஆரெயில் முற்றி,வாய் மடித்து உரறி, நீ முந்து? என் னானே. 5


299. கலம் தொடா மகளிர்!
பாடியவர்: பொன் முடியார்திணை: நொச்சி துறை: குதிரை மறம் 
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, 5அணங்குஉடை முருகன் கோட்டத்துக்கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.  


300. எல்லை எறிந்தோன் தம்பி!
பாடியவர்: அரிசில் கிழார்திணை: தும்பை துறை: தானைமறம் 
தோல்தா; தோல்தா என்றி ; தோலொடுதுறுகல் மறையினும் உய்குவை போலாய்;நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,பேரூர் அட்ட கள்ளிற்கு 5ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.