LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-16

 

376. கிணைக்குரல் செல்லாது!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியாதன்.
திணை:பாடாண். 
துறை: இயன்மொழி. 
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
சிறுநனி பிறந்த பின்றைச், செறிபிணிச்
சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்,
பாணர் ஆரும் அளவை, யான்தன் 5
யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்!
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரெனக்,
குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்,
பண்டுஅறி வாரா உருவோடு, என் அரைத்
தொன்றுபடு துளையொடு பருஇழை போகி, 10
நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி,
விருந்தினன் அளியன், இவன் எனப், பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவுவெகுண் டன்ன தேறலொடு. சூடுதருபு,
நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே, 15
இரவி னானே, ஈத்தோன் எந்தை;
அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன், நிரப்படு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி, 20
ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்,
தோன்றல் செல்லாது, என் சிறுகிணைக் குரலே.  
377. நாடு அவன் நாடே!
பாடியவர்: உலோச்சனார்.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி.
திணை: பாடாண். 
துறை: வாழ்த்தியல். 
பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய,
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்,
இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி,
அவி உணவினோர் புறங் காப்ப, 5
அற, நெஞ்சத்தோன் வாழ, நாள் என்று,
அதற் கொண்டு வரல் ஏத்திக்
கரவு இல்லாக் கவிவண் கையான்,
வாழ்க! எனப் பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் பிறர் இல், என 10
அது நினைத்து, மதி மழுகி,
அங்கு நின்ற எற் காணூஉச்
சேய் நாட்டுச் செல் கிணைஞனை!
நீபுரவலை எமக்கு என்ன,
மலைபயந்த மணியும், கடறுபயந்த பொன்னும், 15
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவிற் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
நனவின் நல்கியோன், நகைசால் தோன்றல்;
நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர் 20
வேந்தென மொழிவோர், அவன் வேந்தென மொழிவோர்
. . . . . பொற்கோட்டு யானையர்
கவர் பரிக் கச்சை நன்மான்
வடி மணி வாங்கு உருள
. . . . நல்தேர்க் குழுவினர், 25
கத ழிசை வன்க ணினர்,
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டிக்,
கடல் ஒலி கொண்ட தானை
அடல்வெங் குருசில்! மன்னிய நெடிதே!  
378. எஞ்சா மரபின் வஞ்சி!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண் . 
துறை: இயன்மொழி. 
தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,
கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
5
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல, 10
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும், 15
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு, 20
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.  
379. இலங்கை கிழவோன்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்
பாடப்பட்டோன்: ஓய்மான்வில்லியாதன்
திணை:பாடாண் 
துறை: பரிசில் 
யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை;
அவனே பெறுக, என் நாஇசை நுவறல்;
நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்,
பின்னை மறத்தோடு அரியக், கல்செத்து,
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் 5
நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லி யாதன் கிணையேம்; பெரும!
குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்!
நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா,
வல்லன், எந்தை, பசிதீர்த்தல் எனக், 10
கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்,
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது.
விண்தோய் தலைய குன்றம் பிற்பட,
. . . . ரவந்தனென், யானே-
தாயில் தூவாக் குழவிபோல, ஆங்கு அத் 15
திருவுடைத் திருமனை, ஐதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.  
380. சேய்மையும் அணிமையும்!
தென் பவ்வத்து முத்துப் பூண்டு
வட குன்றத்துச் சாந்தம் உரீ இ.
. . . . . . . ங்கடல் தானை,
இன்னிசைய விறல் வென்றித்,
தென் னவர் வய மறவன், 5
மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து,
நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய,
தேறுபெ. . . . . . . . த்துந்து,
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்;
துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; 10
நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்;
வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல,
. . . த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்;
அன்னன் ஆகன் மாறே, இந்நிலம்
இலம்படு காலை ஆயினும், 15
புலம்பல்போ யின்று, பூத்தஎன் கடும்பே.  
381. கரும்பனூரன் காதல் மகன்!
பாடியவர்: புறத்திணை நன்னகனார்.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 
ஊனும் ஊணும் முனையின், இனிதெனப்,
பாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து, மெல்லிது பருகி,
விருந்து உறுத்து, ஆற்ற இருந்தென மாகச்,
சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு? என, 5
யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது
அன்புடை மையின், எம்பிரிவு அஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப், பழம்ஊழ்த்துப்,
பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
பெயல்பெய் தன்ன, செல்வத்து ஆங்கண் 10
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்,
சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி,
விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்,
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு 15
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,
இருநிலம் கூலம் பாறக், கோடை
வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்,
சேயை யாயினும், இவணை யாயினும்
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! 20
சிறுநனி, ஒருவழிப் படர்க என் றோனே - எந்தை,
ஒலிவெள் அருவி வேங்கட நாடன்;
உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான, மறப்பின்று,
இருங்கோள் ஈராப் பூட்கைக் 25
கரும்பன் ஊரன் காதல் மகனே!  
382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
கடல் படை அடல் கொண்டி,
மண் டுற்ற மலிர் நோன்றாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
நலங் கிள்ளி நசைப் பொருநரேம்; 5
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
அவற் பாடுதும், அவன் தாள் வாழிய! என!
நெய் குய்ய ஊன் நவின்ற
பல்சோற்றான், இன் சுவைய
நல் குரவின் பசித் துன்பின் நின் 10
முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்,
யானும், ஏழ்மணி யங்கேள், அணிஉத்திக்,
கட்கேள்விக், சுவை நாவின்
நிறன் உற்ற, அரா அப் போலும்
வறன் ஒரீ இ, வழங்கு வாய்ப்ப, 15
விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்!
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய;
எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
எறிதொறும் நுடங்கி யாங்கு, நின் பகைஞர் 20
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்,
வென்ற தேர், பிறர் வேத்தவை யானே.  
383. வெள்ளி நிலை பரிகோ!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது
(கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு,அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்)
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து,
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி,
நெடுங்கடை நின்று, பகடுபல வாழ்த்தித்,
தன்புகழ் ஏத்தினெ னாக, ஊன்புலந்து,
5
அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்,
கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்,
தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்,
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
கழைபடு சொலியின் இழை அணி வாரா. 10
ஒண்பூங் கலிங்கம் உடீ இ, நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பின், அவ்வாங்கு உந்திக்,
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல,
எற் பெயர்ந்த நோக்கி . . . . .
. . . . கற்கொண்டு, 15
அழித்துப் பிறந்ததென னாகி, அவ்வழிப்,
பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே;
குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி,
நரைமுக வூகமொடு, உகளும், சென. . .
. . . . . . கன்றுபல கெழீ இய 20
கான்கெழு நாடன், நெடுந்தேர் அவியன், என
ஒருவனை உடையேன் மன்னே, யானே;
அறான், எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?  
384. நெல் என்னாம்! பொன் என்னாம்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்.
திணை: பாடாண். 
துறை: கையறுநிலை. 
மென் பாலான் உடன் அணை இ,
வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்;
வன் பாலான் கருங்கால் வரகின்
. . . 5
அங்கண் குறுமுயல் வெருவ, அயல
கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து;
விழவின் றாயினும், உழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து;
. . . . . கிணையேம் பெரும! 10
நெல் என்னாம், பொன் என்னாம்,
கனற்றக் கொண்ட நறவு என்னும்,
. . . . மனை என்னா, அவை பலவும்
யான் தண்டவும், தான் தண்டான்,
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை 15
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கிப்,
புரந்தோன் எந்தை; யாம் எவன் தொலைவதை;
அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட 20
உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்.
வந்த வைகல் அல்லது,
சென்ற எல்லைச் செலவு அறி யேனே!  
385. காவிரி அணையும் படப்பை!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை.
திணை: பாடாண். 
துறை: வாழ்த்தியல். 
வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப,
புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்,
தன்கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி,
வறன்யான் நீங்கல் வேண்டி, என் அரை 5
நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து,
வெளியது உடீஇ, என் பசிகளைந் தோனே;
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்.
நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய 10
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே!  
386. வேண்டியது உணர்ந்தோன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை: வாழ்த்தியல். 
நெடு நீர நிறை கயத்துப்
படு மாரித் துளி போல,
நெய் துள்ளிய வறை முகக்கவும்,
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,
ஊன் கொண்ட வெண் மண்டை
5
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன் எந்தை, இசைதனது ஆக;
வயலே நெல்லின் வேலி, நீடிய கரும்பின் 10
பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின;
புறவே , புல்லருந்து பல்லா யத்தான்,
வில்இருந்த வெங்குறும் பின்று;
கடலே, கால்தந்த கலம் எண்ணுவோர்
கானற் புன்னைச் சினைநிலக் குந்து; 15
கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி,
பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து;
அன்னநன் நாட்டுப் பொருநம், யாமே;
பொரா அப் பொருந ரேம்,
குணதிசை நின்று குடமுதற் செலினும், 20
வடதிசை நின்று தென்வயிற் செலினும்,
தென்திசை நின்று குறுகாது நீடினும்,
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே!  
387. சிறுமையும் தகவும்!
பாடியவர்: குண்டுகட் பாலியாதனார்.
பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்.
திணை: பாடாண். 
துறை: வாழ்த்தியல். 
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண் டன்ன,
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண்கண் மாக்கிணை இயக்கி, என்றும்
மாறு கொண்டோர் மதில் இடறி,
5
நீறு ஆடிய நறுங் கவுள,
பூம்பொறிப் பணை எருத்தின,
வேறு வேறு பரந்து இயங்கி,
வேந்துடை மிளை அயல் பரக்கும்,
ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத்,
10
திருந்து தொழிற் பல பகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்து, நின்
நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி,
மிகப்பொலியர், தன் சேவடியத்தை ! என்று
யாஅன் இசைப்பின், நனிநன்று எனாப்,
15
பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்!
மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்,
திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி,
வென் றிரங்கும் விறன் முரசினோன்,
என் சிறுமையின், இழித்து நோக்கான். 20
தன் பெருமையின் தகவு நோக்கிக்,
குன்று உறழ்ந்த களி றென்கோ;
கொய் யுளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
மனைக் களமரொடு களம் என்கோ? 25
ஆங்கவை கனவுஎன மருள, வல்லே, நனவின்
நல்கி யோனே, நகைசால் தோன்றல்;
ஊழி வாழி, பூழியர் பெருமகன்!
பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
செல்வக் கடுங்கோ வாழி யாதன்  
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து, இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி 30
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.  
388. நூற்கையும் நா மருப்பும்!
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.
பாடப்பட்டோன்: சிறுகுடிகிழான் பண்ணன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்
பள்ளம், வாடிய பயன்இல் காலை,
இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்,
தன்நிலை அறியுநன் ஆக, அந்நிலை 5
இடுக்கண் இரியல் போக, உடைய
கொடுத்தோன் எந்தை, கொடைமேந் தோன்றல்,
நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக,
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ; அவன் 10
வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா,
நாடொறும் பாடேன் ஆயின், ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்,
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
அண்ணல் யானை வழுதி, 15
கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே!  
389. நெய்தல் கேளன்மார்!
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன்: ஆதனுங்கன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
நீர் நுங்கின் கண் வலிப்பக்
கான வேம்பின் காய் திரங்கக்,
கயங் களியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போகுறு காலை,
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்! 5
என்றுஈத் தனனே, இசைசால் நெடுந்தகை;
இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன்தலை மடப்பிடி இனையக், கன்றுதந்து,
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும், 10
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்!
ஆத னுங்கன் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட,
வீறுசால் நன்கலம் நல்குமதி, பெரும! 15
ஐதுஅகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங்கடை யானே!  
390. காண்பறியலரே!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து தாய்இ லாளர்,
அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்,
விழவணி வியன்களம் அன்ன முற்றத்து,
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
5
கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்,
மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப, வென்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்,
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்
10
வந்ததற் கொண்டு, நெடுங்கடை நின்ற
புன்தலைப் பொருநன் அளியன் தான் எனத்,
தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ, 15
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி,
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்நடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற, 20
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்,
கொண்டி பெறுக! என் றோனே; உண்துறை
மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்,
கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி, 25
. . . . . . . . . . . . . . .
வான்அறி யலவென் பாடுபசி போக்கல்;
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ, அறியலர், காண்பறி யலரே!  
391. வேலி ஆயிரம் விளைக!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான்.
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி, 5
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின், 10
முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின், பொருநன் இவன் என,
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்,
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் 15
ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்,
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு,
இன்துயில் பெறுகதில் நீயே; வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய, 20
வேலி ஆயிரம் விளைக நின் வயலே!  
392. அமிழ்தம் அன்ன கரும்பு!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான்
பசலை நிலவின் பனிபடு விடியல்,
பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ, 5
உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து,
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் 10
வைகல் உழவ! வாழிய பெரிது எனச்
சென்றுயான் நின்றனெ னாக, அன்றே,
ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத் 15
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை
விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து
அரும்பெறல் அமிழ்த மன்ன 20
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.  
393. பழங்கண் வாழ்க்கை!
பாடியவர்: நல்லிறையனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையொடும் கூமை வீதலிற்,
குடிமுறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்
5
வள்ளன் மையின்எம் வரைவோர் யார்? என;
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா,
உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென,
மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி,
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல் 10
கூர்ந்தஎவ் வம்வீடக், கொழுநிணம் கிழிப்பக்,
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன,
வெண்நிண மூரி அருள, நாளுற
ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என் 15
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்,
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன,
அகன்றுமடி கலிங்கம் உடீஇச், செல்வமும்
கேடின்று நல்குமதி, பெரும! மாசில்
மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, 20
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்,
கோடை யாயினும் கோடி . . . .
காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந!
வாய்வாள் வளவன் வாழ்க! எனப்
பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே. 25
394. என்றும் செல்லேன்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன்.
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்,
ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,
வள்ளிய னாதல் வையகம் புகழினும்!
உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்! 5
யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை,
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,
பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக,
அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக், 10
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சி
யான்அது பெயர்த்தனென் ஆகத், தான்அது
சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஓர்
பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு, 15
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்,
துன்னரும் பரிசில் தரும் என,
என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே!  
395. அவிழ் நெல்லின் அரியல்!
பாடியவர்: மதுரை நக்கீரர்.
பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டுக்
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்
பழஞ் சோற்றுப் புக வருந்திப்,
5
புதல் தளவின் பூச் சூடி,
அரில் பறையாற் புள்ளோப்பி,
அவிழ் நெல்லின் அரியலா ருந்து;
மனைக் கோழிப் பைம்பயி ரின்னே,
கானக் கோழிக் கவர் குரலொடு,
10
நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து;
வே யன்ன மென் தோளால்,
மயில் அன்ன மென் சாயலார்,
கிளிகடி யின்னே;
அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து;
15
ஆங்கப் , பலநல்ல புலன் அணியும்
சீர்சான்ற விழுச் சிறப்பின்,
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் 20
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,
தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
தீங்குரல் . . கின் அரிக்குரல் தடாரியொடு, 25
ஆங்கு நின்ற எற் கண்டு,
சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான்,
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி,
ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி,இவனை 30
என்போல் போற்று என் றோனே; அதற்கொண்டு,
அவன்மறவ லேனே, பிறர்உள்ள லேனே;
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
குள மீனோடும் தாள் புகையினும், 35
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த,
விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க! என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
ஆங்குஅமைந் தன்றால்; வாழ்க, அவன் தாளே! 40
396. பாடல்சால் வளன்!
பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
கீழ் நீரால் மீன் வழங்குந்து;
மீநீரான், கண்ணன்ன, மலர்பூக் குந்து;
கழி சுற்றிய விளை கழனி,
அரிப் பறையாற் புள் ளோப்புந்து;
நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
5
மென் பறையாற் புள் இரியுந்து;
நனைக் கள்ளின் மனைக் கோசர்
தீந் தேறல் நறவு மகிழ்ந்து
தீங் குரவைக் கொளைத்தாங் குந்து;
உள்ளி லோர்க்கு வலியா குவன்,
10
கேளி லோர்க்குக் கேளா குவன்
கழுமிய வென்வேல் வேளே;
வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
கிணை யேம், பெரும!
கொழுந் தடிய சூடு என்கோ?
15
வளநனையின் மட்டு என்கோ?
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறுநெய்ய சோறு என்கோ?
திறந்து மறந்து கூட்டு முதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ? 20
அன்னவை பலபல . . .
. . . . வருந்திய
இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;
எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே; 25
மாரி வானத்து மீன் நாப்பண்,
விரி கதிர வெண் திங்களின்,
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை!
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
நிரைசால் நன்கலன் நல்கி, 30
உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே!  
397. தண் நிழலேமே!
பாடியவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம். 
வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே;
பொய்கையும் போடுகண் விழித்தன; பையச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடெழுந்து
இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
5
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,
எகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! பலகோள்
செய்தார் மார்ப! எழுமதி துயில்! எனத்,
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, 10
நெடுங்கடைத் தோன்றி யேனே; அது நயந்து,
உள்ளி வந்த பரிசிலன் இவன் என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,
மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்,
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு, 15
மாரி யன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங்கலம் நல்கி யோனே; என்றும்,
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை,
அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த 20
தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்;
எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்,
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்,
என்னென்று அஞ்சலம் யாமே; வென்வெல் 25
அருஞ்சமம் கடக்கும் ஆற்றல், அவன்
திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே!  
398. துரும்புபடு சிதா அர்!
பாடியவர்: திருத்தாமனார்.
பாடப்பட்டோன்: சேரமான் வஞ்சன்.
திணை: பாடாண். 
துறை: கடைநிலை. 
மதிநிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,
வகைமாண் நல்லில் . . . . .
பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,
பொய்கைப் பூமுகை மலரப், பாணர்
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க,
5
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்,
பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்,
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப்
புலியினம் மடிந்த கல்லளை போலத், 10
துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்,
மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி,
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து,
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்!
தள்ளா நிலையை யாகியர் எமக்கு என, 15
என்வரவு அறீஇச்,
சிறி திற்குப் பெரிது உவந்து,
விரும்பிய முகத்த னாகி, என் அரைத்
துரும்புபடு சிதாஅர் நீக்கித், தன் அரைப்
புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ, 20
அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை,
நிழல்காண் தேறல் நிறைய வாக்கி,
யான்உண அருளல் அன்றியும், தான்உண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை,
கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர, 25
வரையுறழ் மார்பின், வையகம் விளக்கும்,
விரவுமணி ஒளிர்வரும், அரவுஉறழ் ஆரமொடு,
புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்.
உரைசெல அருளி யோனே;
பறைஇசை அருவிப் பாயல் கோவே. 30
399. கடவுட்கும் தொடேன்!
பாடியவர்: ஐயூற் முடவனார்
பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன்
திணை: பாடாண் 
துறை: பரிசில் விடை 
அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி,
மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை,
5
செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,
பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன,
மெய்களைந்து, இன்னொடு விரைஇ. . .
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்,
அழிகளிற் படுநர் களியட வைகின்,
10
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்;
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக், 15
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு,
ஒருசிறை இருந்தேன்; என்னே! இனியே,
அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன்,தொல்லோர் மருகன், 20
இசையிற் கொண்டான், நசையமுது உண்க என,
மீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி,
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை,
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக், 25
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்;
கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தை யான் வேண்டிவந் தது என,
ஒன்றியான் பெட்டா அளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை; விசும்பின் 30
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கி யோனே; சீர்கொள
இழுமென இழிதரும் அருவி,
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.  
400. உலகு காக்கும் உயர் கொள்கை!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
மாசு விசும்பின் வெண் திங்கள்
மூ வைந்தான் முறை முற்றக்,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்திக்
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
5
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் கொள்கை,
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே;
கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது:
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, 10
மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
. . . . . . . . . . லவான
கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,
நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து;
போ தறியேன், பதிப் பழகவும், 15
தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்ததன் . . . . .
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் 20
தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்,
துறைதொறும் பிணிக்கும் நல்லூர்,
உறைவின் யாணர் , நாடுகிழ வோனே!  
புறநானூறு முற்றும்.

376. கிணைக்குரல் செல்லாது!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியாதன்.திணை:பாடாண். துறை: இயன்மொழி. 
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்திசிறுநனி பிறந்த பின்றைச், செறிபிணிச்சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்,பாணர் ஆரும் அளவை, யான்தன் 5யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்!இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரெனக்,குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்,பண்டுஅறி வாரா உருவோடு, என் அரைத்தொன்றுபடு துளையொடு பருஇழை போகி, 10நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி,விருந்தினன் அளியன், இவன் எனப், பெருந்தகைநின்ற முரற்கை நீக்கி, நன்றும்அரவுவெகுண் டன்ன தேறலொடு. சூடுதருபு,நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே, 15இரவி னானே, ஈத்தோன் எந்தை;அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்,இரப்பச் சிந்தியேன், நிரப்படு புணையின்;உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி, 20ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்,தோன்றல் செல்லாது, என் சிறுகிணைக் குரலே.  


377. நாடு அவன் நாடே!
பாடியவர்: உலோச்சனார்.பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி.திணை: பாடாண். துறை: வாழ்த்தியல். 
பனி பழுநிய பல் யாமத்துப்பாறு தலை மயிர் நனைய,இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்,இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி,அவி உணவினோர் புறங் காப்ப, 5அற, நெஞ்சத்தோன் வாழ, நாள் என்று,அதற் கொண்டு வரல் ஏத்திக்கரவு இல்லாக் கவிவண் கையான்,வாழ்க! எனப் பெயர் பெற்றோர்பிறர்க்கு உவமம் பிறர் இல், என 10அது நினைத்து, மதி மழுகி,அங்கு நின்ற எற் காணூஉச்சேய் நாட்டுச் செல் கிணைஞனை!நீபுரவலை எமக்கு என்ன,மலைபயந்த மணியும், கடறுபயந்த பொன்னும், 15கடல் பயந்த கதிர் முத்தமும்,வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,கனவிற் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,நனவின் நல்கியோன், நகைசால் தோன்றல்;நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர் 20வேந்தென மொழிவோர், அவன் வேந்தென மொழிவோர். . . . . பொற்கோட்டு யானையர்கவர் பரிக் கச்சை நன்மான்வடி மணி வாங்கு உருள. . . . நல்தேர்க் குழுவினர், 25கத ழிசை வன்க ணினர்,வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டிக்,கடல் ஒலி கொண்ட தானைஅடல்வெங் குருசில்! மன்னிய நெடிதே!  


378. எஞ்சா மரபின் வஞ்சி!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.திணை: பாடாண் . துறை: இயன்மொழி. 
தென் பரதவர் மிடல் சாய,வட வடுகர் வாள் ஓட்டியதொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
5புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,எஞ்சா மரபின் வஞ்சி பாட,எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல, 10மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கைதாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும், 15அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையைவலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு, 20அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,இருங்குளைத் தலைமை எய்தி,அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.  


379. இலங்கை கிழவோன்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்பாடப்பட்டோன்: ஓய்மான்வில்லியாதன்திணை:பாடாண் துறை: பரிசில் 
யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை;அவனே பெறுக, என் நாஇசை நுவறல்;நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்,பின்னை மறத்தோடு அரியக், கல்செத்து,அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் 5நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்வில்லி யாதன் கிணையேம்; பெரும!குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்!நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா,வல்லன், எந்தை, பசிதீர்த்தல் எனக், 10கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்,கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது.விண்தோய் தலைய குன்றம் பிற்பட,. . . . ரவந்தனென், யானே-தாயில் தூவாக் குழவிபோல, ஆங்கு அத் 15திருவுடைத் திருமனை, ஐதுதோன்று கமழ்புகைவருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.  


380. சேய்மையும் அணிமையும்!

தென் பவ்வத்து முத்துப் பூண்டுவட குன்றத்துச் சாந்தம் உரீ இ.. . . . . . . ங்கடல் தானை,இன்னிசைய விறல் வென்றித்,தென் னவர் வய மறவன், 5மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து,நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய,தேறுபெ. . . . . . . . த்துந்து,தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்;துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; 10நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்;வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல,. . . த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்;அன்னன் ஆகன் மாறே, இந்நிலம்இலம்படு காலை ஆயினும், 15புலம்பல்போ யின்று, பூத்தஎன் கடும்பே.  


381. கரும்பனூரன் காதல் மகன்!
பாடியவர்: புறத்திணை நன்னகனார்.பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்.திணை: பாடாண். துறை: இயன் மொழி. 
ஊனும் ஊணும் முனையின், இனிதெனப்,பாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும்அளவுபு கலந்து, மெல்லிது பருகி,விருந்து உறுத்து, ஆற்ற இருந்தென மாகச்,சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு? என, 5யாம்தன் அறியுநமாகத் தான் பெரிதுஅன்புடை மையின், எம்பிரிவு அஞ்சித்துணரியது கொளாஅ வாகிப், பழம்ஊழ்த்துப்,பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்பெயல்பெய் தன்ன, செல்வத்து ஆங்கண் 10ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்,சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரிஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி,விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்,இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு 15தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,இருநிலம் கூலம் பாறக், கோடைவருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்,சேயை யாயினும், இவணை யாயினும்இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! 20சிறுநனி, ஒருவழிப் படர்க என் றோனே - எந்தை,ஒலிவெள் அருவி வேங்கட நாடன்;உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்அறத்துறை அம்பியின் மான, மறப்பின்று,இருங்கோள் ஈராப் பூட்கைக் 25கரும்பன் ஊரன் காதல் மகனே!  


382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!
பாடியவர்: கோவூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.திணை: பாடாண். துறை: கடைநிலை. 
கடல் படை அடல் கொண்டி,மண் டுற்ற மலிர் நோன்றாள்,தண் சோழ நாட்டுப் பொருநன்,அலங்கு உளை அணி இவுளிநலங் கிள்ளி நசைப் பொருநரேம்; 5பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்அவற் பாடுதும், அவன் தாள் வாழிய! என!நெய் குய்ய ஊன் நவின்றபல்சோற்றான், இன் சுவையநல் குரவின் பசித் துன்பின் நின் 10முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்,யானும், ஏழ்மணி யங்கேள், அணிஉத்திக்,கட்கேள்விக், சுவை நாவின்நிறன் உற்ற, அரா அப் போலும்வறன் ஒரீ இ, வழங்கு வாய்ப்ப, 15விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்!நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய;எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணைகண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்எறிதொறும் நுடங்கி யாங்கு, நின் பகைஞர் 20கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்,வென்ற தேர், பிறர் வேத்தவை யானே.  


383. வெள்ளி நிலை பரிகோ!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது(கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு,அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்)திணை: பாடாண். துறை: கடைநிலை. 
ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து,தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி,நெடுங்கடை நின்று, பகடுபல வாழ்த்தித்,தன்புகழ் ஏத்தினெ னாக, ஊன்புலந்து,
5அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்,கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்,தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்,பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்கழைபடு சொலியின் இழை அணி வாரா. 10ஒண்பூங் கலிங்கம் உடீ இ, நுண்பூண்வசிந்துவாங்கு நுசுப்பின், அவ்வாங்கு உந்திக்,கற்புடை மடந்தை தற்புறம் புல்ல,எற் பெயர்ந்த நோக்கி . . . . .. . . . கற்கொண்டு, 15அழித்துப் பிறந்ததென னாகி, அவ்வழிப்,பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே;குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி,நரைமுக வூகமொடு, உகளும், சென. . .. . . . . . கன்றுபல கெழீ இய 20கான்கெழு நாடன், நெடுந்தேர் அவியன், எனஒருவனை உடையேன் மன்னே, யானே;அறான், எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?  


384. நெல் என்னாம்! பொன் என்னாம்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்.திணை: பாடாண். துறை: கையறுநிலை. 
மென் பாலான் உடன் அணை இ,வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரைஅறைக் கரும்பின் பூ அருந்தும்;வன் பாலான் கருங்கால் வரகின். . . 5அங்கண் குறுமுயல் வெருவ, அயலகருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து;விழவின் றாயினும், உழவர் மண்டைஇருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து;. . . . . கிணையேம் பெரும! 10நெல் என்னாம், பொன் என்னாம்,கனற்றக் கொண்ட நறவு என்னும்,. . . . மனை என்னா, அவை பலவும்யான் தண்டவும், தான் தண்டான்,நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை 15மண் நாணப் புகழ் வேட்டு,நீர் நாண நெய் வழங்கிப்,புரந்தோன் எந்தை; யாம் எவன் தொலைவதை;அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்குயாண்டு நிற்க வெள்ளி, மாண்ட 20உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்.வந்த வைகல் அல்லது,சென்ற எல்லைச் செலவு அறி யேனே!  


385. காவிரி அணையும் படப்பை!
பாடியவர்: கல்லாடனார்.பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை.திணை: பாடாண். துறை: வாழ்த்தியல். 
வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப,புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்,தன்கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி,வறன்யான் நீங்கல் வேண்டி, என் அரை 5நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து,வெளியது உடீஇ, என் பசிகளைந் தோனே;காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பைநெல்விளை கழனி அம்பர் கிழவோன்.நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய 10வேங்கட விறல்வரைப் பட்டஓங்கல் வானத்து உறையினும் பலவே!  


386. வேண்டியது உணர்ந்தோன்!
பாடியவர்: கோவூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.திணை: பாடாண். துறை: வாழ்த்தியல். 
நெடு நீர நிறை கயத்துப்படு மாரித் துளி போல,நெய் துள்ளிய வறை முகக்கவும்,சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,ஊன் கொண்ட வெண் மண்டை
5ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,செய் தொழிலான் வியர்ப்பு அறியாமைஈத்தோன் எந்தை, இசைதனது ஆக;வயலே நெல்லின் வேலி, நீடிய கரும்பின் 10பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின;புறவே , புல்லருந்து பல்லா யத்தான்,வில்இருந்த வெங்குறும் பின்று;கடலே, கால்தந்த கலம் எண்ணுவோர்கானற் புன்னைச் சினைநிலக் குந்து; 15கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி,பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து;அன்னநன் நாட்டுப் பொருநம், யாமே;பொரா அப் பொருந ரேம்,குணதிசை நின்று குடமுதற் செலினும், 20வடதிசை நின்று தென்வயிற் செலினும்,தென்திசை நின்று குறுகாது நீடினும்,யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே!  


387. சிறுமையும் தகவும்!
பாடியவர்: குண்டுகட் பாலியாதனார்.பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்.திணை: பாடாண். துறை: வாழ்த்தியல். 
வள் உகிர வயல் ஆமைவெள் அகடு கண் டன்ன,வீங்கு விசிப் புதுப் போர்வைத்தெண்கண் மாக்கிணை இயக்கி, என்றும்மாறு கொண்டோர் மதில் இடறி,
5நீறு ஆடிய நறுங் கவுள,பூம்பொறிப் பணை எருத்தின,வேறு வேறு பரந்து இயங்கி,வேந்துடை மிளை அயல் பரக்கும்,ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத்,
10திருந்து தொழிற் பல பகடுபகைப்புல மன்னர் பணிதிறை தந்து, நின்நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி,மிகப்பொலியர், தன் சேவடியத்தை ! என்றுயாஅன் இசைப்பின், நனிநன்று எனாப்,
15பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்!மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்,திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி,வென் றிரங்கும் விறன் முரசினோன்,என் சிறுமையின், இழித்து நோக்கான். 20தன் பெருமையின் தகவு நோக்கிக்,குன்று உறழ்ந்த களி றென்கோ;கொய் யுளைய மா என்கோ?மன்று நிறையும் நிரை என்கோ?மனைக் களமரொடு களம் என்கோ? 25ஆங்கவை கனவுஎன மருள, வல்லே, நனவின்நல்கி யோனே, நகைசால் தோன்றல்;ஊழி வாழி, பூழியர் பெருமகன்!பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்செல்வக் கடுங்கோ வாழி யாதன்  ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து, இவன்விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்பல்லூர் சுற்றிய கழனி 30எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.  


388. நூற்கையும் நா மருப்பும்!
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.பாடப்பட்டோன்: சிறுகுடிகிழான் பண்ணன்.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்பள்ளம், வாடிய பயன்இல் காலை,இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர்சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்,தன்நிலை அறியுநன் ஆக, அந்நிலை 5இடுக்கண் இரியல் போக, உடையகொடுத்தோன் எந்தை, கொடைமேந் தோன்றல்,நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக,வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ; அவன் 10வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா,நாடொறும் பாடேன் ஆயின், ஆனாமணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்,பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானைஅண்ணல் யானை வழுதி, 15கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே!  


389. நெய்தல் கேளன்மார்!
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.பாடப்பட்டோன்: ஆதனுங்கன்.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
நீர் நுங்கின் கண் வலிப்பக்கான வேம்பின் காய் திரங்கக்,கயங் களியும் கோடை ஆயினும்,ஏலா வெண்பொன் போகுறு காலை,எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்! 5என்றுஈத் தனனே, இசைசால் நெடுந்தகை;இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்;செலினே, காணா வழியனும் அல்லன்;புன்தலை மடப்பிடி இனையக், கன்றுதந்து,குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும், 10கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்,செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்!ஆத னுங்கன் போல, நீயும்பசித்த ஒக்கல் பழங்கண் வீட,வீறுசால் நன்கலம் நல்குமதி, பெரும! 15ஐதுஅகல் அல்குல் மகளிர்நெய்தல் கேளன்மார், நெடுங்கடை யானே!  


390. காண்பறியலரே!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்மறவை நெஞ்சத்து தாய்இ லாளர்,அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்,விழவணி வியன்களம் அன்ன முற்றத்து,ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
5கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்,மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப, வென்அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்பாடி நின்ற பன்னாள் அன்றியும்,சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்
10வந்ததற் கொண்டு, நெடுங்கடை நின்றபுன்தலைப் பொருநன் அளியன் தான் எனத்,தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரைமுதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ, 15மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி,முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்நடைஇரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற, 20அகடுநனை வேங்கை வீகண் டன்னபகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்,கொண்டி பெறுக! என் றோனே; உண்துறைமலைஅலர் அணியும் தலைநீர் நாடன்,கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி, 25. . . . . . . . . . . . . . .வான்அறி யலவென் பாடுபசி போக்கல்;அண்ணல் யானை வேந்தர்உண்மையோ, அறியலர், காண்பறி யலரே!  


391. வேலி ஆயிரம் விளைக!
பாடியவர்: கல்லாடனார்.பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான்.திணை: பாடாண். துறை: கடைநிலை. 
தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்விண்டு அனைய விண்தோய் பிறங்கல்முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்றதிருந்தா மூரி பரந்துபடக் கெண்டி, 5அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடிநனந்தலை மூதூர் வினவலின், 10முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்அளியன் ஆகலின், பொருநன் இவன் என,நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்,காண்கு வந்திசிற் பெரும, மாண்தகஇருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் 15ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்,நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு,இன்துயில் பெறுகதில் நீயே; வளஞ்சால்துளிபதன் அறிந்து பொழிய, 20வேலி ஆயிரம் விளைக நின் வயலே!  


392. அமிழ்தம் அன்ன கரும்பு!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி.திணை: பாடாண். துறை: கடைநிலை. 
மதிஏர் வெண்குடை அதியர் கோமான்கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான்பசலை நிலவின் பனிபடு விடியல்,பொருகளிற்று அடிவழி யன்ன, என்கைஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ, 5உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து,அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் 10வைகல் உழவ! வாழிய பெரிது எனச்சென்றுயான் நின்றனெ னாக, அன்றே,ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசிவேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரைநுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத் 15தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறைவிருந்திறை நல்கி யோனே - அந்தரத்துஅரும்பெறல் அமிழ்த மன்ன 20கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.  


393. பழங்கண் வாழ்க்கை!
பாடியவர்: நல்லிறையனார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: பாடாண். துறை: கடைநிலை. 
பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்குறுநெடுந் துணையொடும் கூமை வீதலிற்,குடிமுறை பாடி, ஒய்யென வருந்தி,அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்
5வள்ளன் மையின்எம் வரைவோர் யார்? என;உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா,உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென,மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி,ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல் 10கூர்ந்தஎவ் வம்வீடக், கொழுநிணம் கிழிப்பக்,கோடைப் பருத்தி வீடுநிறை பெய்தமூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன,வெண்நிண மூரி அருள, நாளுறஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என் 15தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்,போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன,அகன்றுமடி கலிங்கம் உடீஇச், செல்வமும்கேடின்று நல்குமதி, பெரும! மாசில்மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, 20ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்,கோடை யாயினும் கோடி . . . .காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந!வாய்வாள் வளவன் வாழ்க! எனப்பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே. 25


394. என்றும் செல்லேன்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன்.திணை: பாடாண். துறை: கடைநிலை. 
சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்,ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்,வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,வள்ளிய னாதல் வையகம் புகழினும்!உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்! 5யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை,ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தைவாடா வஞ்சி பாடினேன் ஆக,அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக், 10கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சியான்அது பெயர்த்தனென் ஆகத், தான்அதுசிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஓர்பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு, 15இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்,துன்னரும் பரிசில் தரும் என,என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே!  


395. அவிழ் நெல்லின் அரியல்!
பாடியவர்: மதுரை நக்கீரர்.பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்.திணை: பாடாண். துறை: கடைநிலை. 
மென் புலத்து வயல் உழவர்வன் புலத்துப் பகடு விட்டுக்குறு முயலின் குழைச் சூட்டொடுநெடு வாளைப் பல் உவியல்பழஞ் சோற்றுப் புக வருந்திப்,
5புதல் தளவின் பூச் சூடி,அரில் பறையாற் புள்ளோப்பி,அவிழ் நெல்லின் அரியலா ருந்து;மனைக் கோழிப் பைம்பயி ரின்னே,கானக் கோழிக் கவர் குரலொடு,
10நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து;வே யன்ன மென் தோளால்,மயில் அன்ன மென் சாயலார்,கிளிகடி யின்னே;அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து;
15ஆங்கப் , பலநல்ல புலன் அணியும்சீர்சான்ற விழுச் சிறப்பின்,சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் 20அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,தீங்குரல் . . கின் அரிக்குரல் தடாரியொடு, 25ஆங்கு நின்ற எற் கண்டு,சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான்,அருங்கலம் வரவே அருளினன் வேண்டி,ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப்பொன்போல் மடந்தையைக் காட்டி,இவனை 30என்போல் போற்று என் றோனே; அதற்கொண்டு,அவன்மறவ லேனே, பிறர்உள்ள லேனே;அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,மிக வானுள் எரி தோன்றினும்,குள மீனோடும் தாள் புகையினும், 35பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த,விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க! என,உள்ளதும் இல்லதும் அறியாது,ஆங்குஅமைந் தன்றால்; வாழ்க, அவன் தாளே! 40


396. பாடல்சால் வளன்!
பாடியவர்: மாங்குடி கிழார்.பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.திணை: பாடாண். துறை: கடைநிலை. 
கீழ் நீரால் மீன் வழங்குந்து;மீநீரான், கண்ணன்ன, மலர்பூக் குந்து;கழி சுற்றிய விளை கழனி,அரிப் பறையாற் புள் ளோப்புந்து;நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
5மென் பறையாற் புள் இரியுந்து;நனைக் கள்ளின் மனைக் கோசர்தீந் தேறல் நறவு மகிழ்ந்துதீங் குரவைக் கொளைத்தாங் குந்து;உள்ளி லோர்க்கு வலியா குவன்,
10கேளி லோர்க்குக் கேளா குவன்கழுமிய வென்வேல் வேளே;வளநீர் வாட்டாற்று எழினி யாதன்கிணை யேம், பெரும!கொழுந் தடிய சூடு என்கோ?
15வளநனையின் மட்டு என்கோ?குறு முயலின் நிணம் பெய்தந்தநறுநெய்ய சோறு என்கோ?திறந்து மறந்து கூட்டு முதல்முகந்து கொள்ளும் உணவு என்கோ? 20அன்னவை பலபல . . .. . . . வருந்தியஇரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சியஅளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே; 25மாரி வானத்து மீன் நாப்பண்,விரி கதிர வெண் திங்களின்,விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை!யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்நிரைசால் நன்கலன் நல்கி, 30உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே!  


397. தண் நிழலேமே!
பாடியவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.பாடப்பட்டோன்: கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: பாடாண். துறை: பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம். 
வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே;பொய்கையும் போடுகண் விழித்தன; பையச்சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடெழுந்துஇரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
5இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,எகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை,வைகறை அரவம் கேளியர்! பலகோள்செய்தார் மார்ப! எழுமதி துயில்! எனத்,தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, 10நெடுங்கடைத் தோன்றி யேனே; அது நயந்து,உள்ளி வந்த பரிசிலன் இவன் என,நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்,பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு, 15மாரி யன்ன வண்மையின் சொரிந்து,வேனில் அன்ன என் வெப்பு நீங்க,அருங்கலம் நல்கி யோனே; என்றும்,செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை,அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த 20தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள்வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்;எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்,தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்,என்னென்று அஞ்சலம் யாமே; வென்வெல் 25அருஞ்சமம் கடக்கும் ஆற்றல், அவன்திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே!  


398. துரும்புபடு சிதா அர்!
பாடியவர்: திருத்தாமனார்.பாடப்பட்டோன்: சேரமான் வஞ்சன்.திணை: பாடாண். துறை: கடைநிலை. 
மதிநிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,வகைமாண் நல்லில் . . . . .பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,பொய்கைப் பூமுகை மலரப், பாணர்கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க,
5இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்,பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்,நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப்புலியினம் மடிந்த கல்லளை போலத், 10துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்,மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி,இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து,உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்!தள்ளா நிலையை யாகியர் எமக்கு என, 15என்வரவு அறீஇச்,சிறி திற்குப் பெரிது உவந்து,விரும்பிய முகத்த னாகி, என் அரைத்துரும்புபடு சிதாஅர் நீக்கித், தன் அரைப்புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ, 20அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை,நிழல்காண் தேறல் நிறைய வாக்கி,யான்உண அருளல் அன்றியும், தான்உண்மண்டைய கண்ட மான்வறைக் கருனை,கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர, 25வரையுறழ் மார்பின், வையகம் விளக்கும்,விரவுமணி ஒளிர்வரும், அரவுஉறழ் ஆரமொடு,புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்.உரைசெல அருளி யோனே;பறைஇசை அருவிப் பாயல் கோவே. 30


399. கடவுட்கும் தொடேன்!
பாடியவர்: ஐயூற் முடவனார்பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன்திணை: பாடாண் துறை: பரிசில் விடை 
அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசிகாடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி,மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை,
5செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன,மெய்களைந்து, இன்னொடு விரைஇ. . .மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்,அழிகளிற் படுநர் களியட வைகின்,
10பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்காவிரிக் கிழவன், மாயா நல்லிசைக்கிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்;செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்;நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக், 15கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு,ஒருசிறை இருந்தேன்; என்னே! இனியே,அறவர் அறவன், மறவர் மறவன்,மள்ளர் மள்ளன்,தொல்லோர் மருகன், 20இசையிற் கொண்டான், நசையமுது உண்க என,மீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி,வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணைவிசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை,அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக், 25கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்;கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்பகடே அத்தை யான் வேண்டிவந் தது என,ஒன்றியான் பெட்டா அளவை, அன்றேஆன்று விட்டனன் அத்தை; விசும்பின் 30மீன்பூத் தன்ன உருவப் பன்னிரைஊர்தியொடு நல்கி யோனே; சீர்கொளஇழுமென இழிதரும் அருவி,வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.  


400. உலகு காக்கும் உயர் கொள்கை!
பாடியவர்: கோவூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
மாசு விசும்பின் வெண் திங்கள்மூ வைந்தான் முறை முற்றக்,கடல் நடுவண் கண்டன்ன என்இயம் இசையா, மரபு ஏத்திக்கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
5பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,உலகு காக்கும் உயர் கொள்கை,கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே;கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது:தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, 10மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம். . . . . . . . . . லவானகலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து;போ தறியேன், பதிப் பழகவும், 15தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;மறவர் மலிந்ததன் . . . . .கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் 20தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்,துறைதொறும் பிணிக்கும் நல்லூர்,உறைவின் யாணர் , நாடுகிழ வோனே!  


புறநானூறு முற்றும்.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.