LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-4

 

76. அதுதான் புதுமை!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை :வாகை. 
துறை: அரச வாகை. 
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, 5
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப்,
பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப், 10
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!  
77. யார்? அவன் வாழ்க!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 
கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் 5
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே. 10
78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை:வாகை. 
துறை: அரசவாகை. 
வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,
விழுமியம், பெரியம், யாமே; நம்மிற் 5
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத், 10
தந்தை தம்மூர் ஆங்கண்,
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.  
79. பகலோ சிறிது!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை; அரசவாகை. 
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே; 5
எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?  
80. காணாய் இதனை!
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: தும்பை. 
துறை: எருமை மறம். 
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் 5
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல,
இருதலை ஒசிய எற்றிக்,
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.  
81. யார்கொல் அளியர்?
பாடியவர்: சாத்தந்தையார்
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
திணை:வாகை 
துறை: அரசவாகை 
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே? 5
82. ஊசி வேகமும் போர் வேகமும்!
பாடியவர் :சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனொடு, 5
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!  
83. இருபாற்பட்ட ஊர்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. 
துறை: பழிச்சுதல். 
அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி 5
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!  
84. புற்கையும் பெருந்தோளும்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. 
துறை: பழிச்சுதல். 
என், புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு 5
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!  
85. யான் கண்டனன்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை 
துறை: பழிச்சுதல். 
என்னைக்கு ஊர் இது அன்மை யானும்,
என்னைக்கு நாடு இது அன்மை யானும்,
ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே;
ஆடன்று என்ப, ஒருசா ரோரே;
நல்ல,பல்லோர் இருநன் மொழியே; 5
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்,
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.  
86. கல்லளை போல வயிறு!
பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம். பாடப்பட்டோன்
திணை: வாகை 
துறை: ஏறாண் முல்லை 
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே! 5
87. எம்முளும் உளன்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை. 
துறை; தானை மறம். 
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.  
88. எவருஞ் சொல்லாதீர்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை. 
துறை; தானை மறம். 
யாவிர் அயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே. 5
89. என்னையும் உளனே!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. 
துறை: தானை மறம். 
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,
மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன 5
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்னையும் உளனே!  
90. புலியும் மானினமும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. 
துறை: தானை மறம். 
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? 5
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
விரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை 10
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?  
91. எமக்கு ஈத்தனையே!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. 
துறை: வாழ்த்தியல். 
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி 5
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச், 10
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.  
92. மழலையும் பெருமையும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. 
துறை: இயன் மொழி. 
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து 5
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.  
93. பெருந்தகை புண்பட்டாய்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை. 
திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், 5
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என 10
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ;
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய,
அருஞ்சமம் ததைய நூறி, நீ
பெருந் தகை! விழுப்புண் பட்ட மாறே. 15
94. சிறுபிள்ளை பெருங்களிறு!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை. 
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே. 5
95. புதியதும் உடைந்ததும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். 
துறை: வாண் மங்கலம், 
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும் 5
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.  
96. அவன் செல்லும் ஊர்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.
திணை : பாடாண். 
துறை: இயன் மொழி. 
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,
திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, 5
விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,
மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ? என
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.  
97. மூதூர்க்கு உரிமை!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். 
துறை: இயன் மொழி. 
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே;
வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், 5
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே; 10
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில் 15
கணை பொருத துளைத்தோ லன்னே;
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின், 20
ஒல்வான் அல்லன், வெல்போ ரான் எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்,
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று; அது அறிந்துஆ டுமினே. 25
98. வளநாடு கெடுவதோ!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை. திணை: வஞ்சியும், துறை; கொற்றவள்ளையுமாம். 
முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்,
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் 5
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர் 10
தோள் கழியொடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, 15
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்,
பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே; 20
99.அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
 
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல,
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்,
பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல், 5
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு,
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் 10
பரணன் பாடினன் மற்கொல், மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு, 15
100. சினமும் சேயும்!
பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை.
குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது. 
கையது வேலே; காலன புழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னக
வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச்,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரி வயம் பொருத வயக்களிறு போல, 5
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.


76. அதுதான் புதுமை!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை :வாகை. துறை: அரச வாகை. 
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரைமன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, 5செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப்,பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்பீடும் செம்மலும் அறியார் கூடிப், 10பொருதும் என்று தன்தலை வந்தபுனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!  


77. யார்? அவன் வாழ்க!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்.திணை: வாகை. துறை: அரசவாகை. 
கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் 5யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டுஉடன்றுமேல் வந்த வம்ப மள்ளரைஅழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே. 10


78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை:வாகை. துறை: அரசவாகை. 
வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்னமலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,விழுமியம், பெரியம், யாமே; நம்மிற் 5பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,எள்ளி வந்த வம்ப மள்ளர்புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்மாண்இழை மகளிர் நாணினர் கழியத், 10தந்தை தம்மூர் ஆங்கண்,தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.  


79. பகலோ சிறிது!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை: வாகை.துறை; அரசவாகை. 
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்தவம்ப மள்ளரோ பலரே; 5எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?  


80. காணாய் இதனை!
பாடியவர்: சாத்தந்தையார்.பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.திணை: தும்பை. துறை: எருமை மறம். 
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே;நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் 5போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-பசித்துப் பணைமுயலும் யானை போல,இருதலை ஒசிய எற்றிக்,களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.  


81. யார்கொல் அளியர்?
பாடியவர்: சாத்தந்தையார்பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளிதிணை:வாகை துறை: அரசவாகை 
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறேகார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்செறியத் தொடுத்த கண்ணிக்கவிகை மள்ளன் கைப்பட் டோரே? 5


82. ஊசி வேகமும் போர் வேகமும்!
பாடியவர் :சாத்தந்தையார்.பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.திணை: வாகை. துறை: அரசவாகை. 
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,கட்டில் நிணக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;ஊர்கொள வந்த பொருநனொடு, 5ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!  


83. இருபாற்பட்ட ஊர்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.திணை: கைக்கிளை. துறை: பழிச்சுதல். 
அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;என்போற் பெருவிதுப் புறுக; என்றும்ஒருபால் படாஅது ஆகி 5இருபாற் பட்ட இம் மையல் ஊரே!  


84. புற்கையும் பெருந்தோளும்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.திணை: கைக்கிளை. துறை: பழிச்சுதல். 
என், புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மேபோறெதிர்ந்து என் போர்க்களம் புகினே,கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு 5உமணர் வெரூஉம் துறையன் னன்னே!  


85. யான் கண்டனன்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.திணை: கைக்கிளை துறை: பழிச்சுதல். 
என்னைக்கு ஊர் இது அன்மை யானும்,என்னைக்கு நாடு இது அன்மை யானும்,ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே;ஆடன்று என்ப, ஒருசா ரோரே;நல்ல,பல்லோர் இருநன் மொழியே; 5அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்,முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,யான்கண் டனன் அவன் ஆடா குதலே.  


86. கல்லளை போல வயிறு!
பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம். பாடப்பட்டோன்திணை: வாகை துறை: ஏறாண் முல்லை 
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்புலி சேர்ந்து போகிய கல்அளை போல,ஈன்ற வயிறோ இதுவே;தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே! 5


87. எம்முளும் உளன்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.திணை; தும்பை. துறை; தானை மறம். 
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்எண் தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே.  


88. எவருஞ் சொல்லாதீர்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.திணை; தும்பை. துறை; தானை மறம். 
யாவிர் அயினும், கூழை தார்கொண்டுயாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே. 5


89. என்னையும் உளனே!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : தும்பை. துறை: தானை மறம். 
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!எறிகோல் அஞ்சா அரவின் அன்ன 5சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்றுபொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமைவளி பொரு தெண்கண் கேட்பின்,அது போர்! என்னும் என்னையும் உளனே!  


90. புலியும் மானினமும்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : தும்பை. துறை: தானை மறம். 
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டியஇருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? 5அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கியபண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,விரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும்பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை 10வழுவில் வன்கை, மழவர் பெரும!இருநில மண் கொண்டு சிலைக்கும்பொருநரும் உளரோ, நீ களம் புகினே?  


91. எமக்கு ஈத்தனையே!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : தும்பை. துறை: வாழ்த்தியல். 
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,ஆர்கலி நறவின், அதியர் கோமான்போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி 5நீல மணிமிடற்று ஒருவன் போலமன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்பெருமலை விடரகத்து அருமிசை கொண்டசிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,ஆதல் நின்னகத்து அடக்கிச், 10சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.  


92. மழலையும் பெருமையும்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : தும்பை. துறை: இயன் மொழி. 
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்குஅருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்து 5நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.  


93. பெருந்தகை புண்பட்டாய்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : வாகை. துறை: அரச வாகை. 
திண் பிணி முரசம் இழுமென முழங்கச்சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு,ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், 5காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்தநீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என 10வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ;வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்துஅண்ணல் யானை அடுகளத் தொழிய,அருஞ்சமம் ததைய நூறி, நீபெருந் தகை! விழுப்புண் பட்ட மாறே. 15


94. சிறுபிள்ளை பெருங்களிறு!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : வாகை. துறை: அரச வாகை. 
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே. 5


95. புதியதும் உடைந்ததும்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : பாடாண். துறை: வாண் மங்கலம், 
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும் 5உண் டாயின் பதம் கொடுத்து,இல் லாயின் உடன் உண்ணும்,இல்லோர் ஒக்கல் தலைவன்,அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.  


96. அவன் செல்லும் ஊர்!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.திணை : பாடாண். துறை: இயன் மொழி. 
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்குஇரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, 5விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்கைமான் கொள்ளு மோ? எனஉறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.  


97. மூதூர்க்கு உரிமை!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : பாடாண். துறை: இயன் மொழி. 
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே;வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர்நறுங் கள்ளின் நாடு நைத்தலின், 5சுரை தழீஇய இருங் காழொடுமடை கலங்கி நிலைதிரிந் தனவே;களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே; 10மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்பொலந் தும்பைக் கழல் பாண்டில் 15கணை பொருத துளைத்தோ லன்னே;ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள்,பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்குஇறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின், 20ஒல்வான் அல்லன், வெல்போ ரான் எனச்சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்,கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்குறுந்தொடி மகளிர் தோள்விடல்இறும்பூது அன்று; அது அறிந்துஆ டுமினே. 25


98. வளநாடு கெடுவதோ!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : வாகை. துறை: அரச வாகை. திணை: வஞ்சியும், துறை; கொற்றவள்ளையுமாம். 
முனைத் தெவ்வர் முரண் அவியப்பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்இனக் களிறு செலக் கண்டவர்மதிற் கதவம் எழுச் செல்லவும்,பிணன் அழுங்கக் களன் உழக்கிச் 5செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்இன நன்மாச் செயக் கண்டவர்கவை முள்ளின் புழை யடைப்பவும்,மார்புறச் சேர்ந்து ஒல்காத்தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர் 10தோள் கழியொடு பிடி செறிப்பவும்,வாள் வாய்த்த வடுப் பரந்த நின்மற மைந்தர் மைந்து கண்டவர்புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, 15உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்சுற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்இரங்க விளிவது கொல்லோ; வரம்பு அணைந்துஇறங்குகதிர் அலம்வரு கழனிப்,பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே; 20


99.அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போல,ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்,பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல், 5எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு,இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றியஅன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் 10பரணன் பாடினன் மற்கொல், மற்று நீமுரண் மிகு கோவலூர் நூறி, நின்அரண் அடு திகிரி ஏந்திய தோளே!வட்கர் போகிய வளரிளம் போந்தைஉச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு, 15


100. சினமும் சேயும்!
பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : வாகை. துறை: அரச வாகை.குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது. 
கையது வேலே; காலன புழல்;மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னகவெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச்,சுரி இரும் பித்தை பொலியச் சூடி,வரி வயம் பொருத வயக்களிறு போல, 5இன்னும் மாறாது சினனே; அன்னோ!உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே;செறுவர் நோக்கிய கண், தன்சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.