LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-8

 

176. சாயல் நினைந்தே இரங்கும்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன் : ஓய்மான் நல்லியக் கோடான்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி. 
ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
இழுமென ஒலிக்கும் புனலம் புதவின், 5
பெருமா விலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழி, யெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக், 10
காணாது கழிந்த வைகல், காணா
வழிநாட்கு இரங்கும், என் நெஞ்சம்-அவன்
கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.  
177. யானையும் பனங்குடையும்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும்
வாரி வழங்கிய கொடையியல்பைப் பாடுகின்றார் புலவர்.) 
ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்,
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்,
பாடிப் பெற்ற பொன்னணி யானை,
தமர்எனின், யாவரும் புகுப; அமர்எனின்,
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக், 5
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்,
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக், 10
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்,
பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு,
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, 15
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.  
178. இன்சாயலன் ஏமமாவான்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம்.
திணை: வாகை 
துறை: வல்லாண் முல்லை 
கந்துமுனிந்து உயிர்க்கும்யானையொடு,பணைமுனிந்து,
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன் 5
ஈண்டோர் இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை, 10
ஏம மாகத் தான்முந் துறுமே.  
179. பருந்து பசி தீர்ப்பான்!
பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை 
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்? என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், 5
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்,
தோலா நல்லிசை, நாலை கிழவன், 10
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.  
180. நீயும் வம்மோ!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.
திணை: வாகை. 
துறை: வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம். 
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து,
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி, 5
வடுவின்றி வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து,
ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? முதுவாய் இரவல!
யாம்தன் இரக்கும் காலைத், தான்எம் 10
உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்,
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே.  
181. இன்னே சென்மதி!
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்.
திணை: வாகை.
துறை: வல்லாண்முல்லை. 
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்,
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு,
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்,
புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை, 5
வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன்;
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி, நீயே; சென்று, அவன்
பகைப்புலம் படரா அளவை, நின்
பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. 10
182. பிறர்க்கென முயலுநர்!
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி 
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின், 5
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.  
183. கற்கை நன்றே!
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி 
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும், 5
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே, 10
184. யானை புக்க புலம்!
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ. 
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, 5
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத், 10
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.  
185. ஆறு இனிது படுமே!
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(இது உலகாளும் முறைமையைக் கூறியதாம்.) 
கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு, 5
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.  
186. வேந்தர்க்குக் கடனே!
பாடியவர்: மோசிகீரனார்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.) 
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.  
187. ஆண்கள் உலகம்!
பாடியவர்: அவ்வையார்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.) 
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!  
188. மக்களை இல்லோர்!
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.) 
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், 5
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.  
189. உண்பதும் உடுப்பதும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.) 
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே; 5
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.  
190. எலி முயன் றனையர்!
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வலியுடையோரின் நடப்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது.) 
விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ! 5
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து 10
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ!  
191. நரையில ஆகுதல்!
பாடியவர்: பிசிராந்தையர்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி 
யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை 5
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.  
192. பெரியோர் சிறியோர்!
பாடியவர்: கணியன் பூங்குன்றன்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி 
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், 5
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 10
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.  
193. ஒக்கல் வாழ்க்கை!
பாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி 
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.  
194. முழவின் பாணி!
 
ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்! 5
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.  
195. எல்லாரும் உவப்பது!
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி 
பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; 5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.  
196. குறுமகள் உள்ளிச் செல்வல்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடா நிலை. 
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே; 5
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும், 10
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே! 15
197. நல் குரவு உள்ளுதும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடா நிலை. 
வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு 5
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த 10
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் 15
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!  
198. மறவாது ஈமே!
பாடியவர்: வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடா நிலை. 
`அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்,
கடவுள் சான்ற, கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிக!`` என்று ஏத்தித், 5
திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்,
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்,
வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், 10
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்,
பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்
நின்னோ ரன்னநின் புதல்வர், என்றும்,
ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும் 15
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க; இவர் பெருங்கண் ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும்,
நீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும், 20
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி,
நீடு வாழிய! நெடுந்தகை; யானும்
கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின் 25
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.  
199. கலிகொள் புள்ளினன்!
பாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாடாண் 
துறை: பரிசில் கடா நிலை 
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் 5
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.  
200. பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!

176. சாயல் நினைந்தே இரங்கும்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.பாடப்பட்டோன் : ஓய்மான் நல்லியக் கோடான்.திணை: பாடாண்.துறை: இயன்மொழி. 
ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,இழுமென ஒலிக்கும் புனலம் புதவின், 5பெருமா விலங்கைத் தலைவன், சீறியாழ்இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனைஉடையை வாழி, யெற் புணர்ந்த பாலே!பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக், 10காணாது கழிந்த வைகல், காணாவழிநாட்கு இரங்கும், என் நெஞ்சம்-அவன்கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.  


177. யானையும் பனங்குடையும்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி.திணை: பாடாண்.துறை: இயன்மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும்வாரி வழங்கிய கொடையியல்பைப் பாடுகின்றார் புலவர்.) 
ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்,வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்,பாடிப் பெற்ற பொன்னணி யானை,தமர்எனின், யாவரும் புகுப; அமர்எனின்,திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக், 5கண்மாறு நீட்ட நணிநணி இருந்தகுறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்,புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக், 10கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்,பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு,எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, 15இரும்பனங் குடையின் மிசையும்பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.  


178. இன்சாயலன் ஏமமாவான்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம்.திணை: வாகை துறை: வல்லாண் முல்லை 
கந்துமுனிந்து உயிர்க்கும்யானையொடு,பணைமுனிந்து,கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,மணல்மலி முற்றம் புக்க சான்றோர்உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்றுஉண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன் 5ஈண்டோர் இன்சா யலனே ; வேண்டார்எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறியநெடுமொழி மறந்த சிறுபே ராளர்அஞ்சி நீங்கும் காலை, 10ஏம மாகத் தான்முந் துறுமே.  


179. பருந்து பசி தீர்ப்பான்!
பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்திணை: வாகைதுறை: வல்லாண் முல்லை 
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டைமலர்ப்போர் யார்? என வினவலின் மலைந்தோர்விசிபிணி முரசமொடு மண்பல தந்ததிருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், 5படை வேண்டுவழி வாள் உதவியும்,வினை வேண்டுவழி அறிவு உதவியும்,வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்துஅசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்,தோலா நல்லிசை, நாலை கிழவன், 10பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.  


180. நீயும் வம்மோ!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம். 
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்துஇரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து,மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி, 5வடுவின்றி வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து,ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்;இன்மை தீர வேண்டின், எம்மொடுநீயும் வம்மோ? முதுவாய் இரவல!யாம்தன் இரக்கும் காலைத், தான்எம் 10உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க்கருங்கைக் கொல்லனை இரக்கும்,திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே.  


181. இன்னே சென்மதி!
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்.பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்.திணை: வாகை.துறை: வல்லாண்முல்லை. 
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்,கருங்கண் எயிற்றி காதல் மகனொடு,கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்,புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை, 5வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன்;உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,இன்னே சென்மதி, நீயே; சென்று, அவன்பகைப்புலம் படரா அளவை, நின்பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. 10


182. பிறர்க்கென முயலுநர்!
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதிதிணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின், 5உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;அன்ன மாட்சி அனைய ராகித்,தமக்கென முயலா நோன்தாள்,பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.  


183. கற்கை நன்றே!
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும், 5மூத்தோன் வருக என்னாது, அவருள்அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே, 10


184. யானை புக்க புலம்!
பாடியவர்: பிசிராந்தையார்.பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி.திணை: பாடாண்.துறை: செவியறிவுறூஉ. 
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, 5கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,யானை புக்க புலம்போலத், 10தானும் உண்ணான், உலகமும் கெடுமே.  


185. ஆறு இனிது படுமே!
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி(இது உலகாளும் முறைமையைக் கூறியதாம்.) 
கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்காவற் சாகாடு உகைப்போன் மாணின்,ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,பகைக்கூழ் அள்ளற் பட்டு, 5மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.  


186. வேந்தர்க்குக் கடனே!
பாடியவர்: மோசிகீரனார்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி(வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.) 
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.  


187. ஆண்கள் உலகம்!
பாடியவர்: அவ்வையார்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.) 
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!  


188. மக்களை இல்லோர்!
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பிதிணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி(மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.) 
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், 5மயக்குறு மக்களை இல்லோர்க்குப்பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.  


189. உண்பதும் உடுப்பதும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.) 
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே; 5பிறவும் எல்லாம் ஓரொக் குமே;அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.  


190. எலி முயன் றனையர்!
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி(வலியுடையோரின் நடப்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது.) 
விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடுஇயைந்த கேண்மை இல்லா கியரோ! 5கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து 10உரனுடை யாளர் கேண்மையொடுஇயைந்த வைகல் உளவா கியரோ!  


191. நரையில ஆகுதல்!
பாடியவர்: பிசிராந்தையர்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
யாண்டுபல வாக , நரையில ஆகுதல்யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்,மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்அல்லவை செய்யான், காக்க; அதன்தலை 5ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.  


192. பெரியோர் சிறியோர்!
பாடியவர்: கணியன் பூங்குன்றன்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;தீதும் நன்றும் பிறர்தர வாரா ;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், 5இன்னா தென்றலும் இலமே; மின்னொடுவானம் தண்துளி தலைஇ, ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 10காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்பெரியோரை வியத்தலும் இலமே;சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.  


193. ஒக்கல் வாழ்க்கை!
பாடியவர்: ஓரேருழவர்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,ஓடி உய்தலும் கூடும்மன்;ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.  


194. முழவின் பாணி! ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்! 5இன்னாது அம்ம, இவ் வுலகம்;இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.  


195. எல்லாரும் உவப்பது!
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
பல்சான் றீரே! பல்சான் றீரே!கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,பயனில் மூப்பின், பல்சான் றீரே!கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; 5நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்எல்லாரும் உவப்பது ; அன்றியும்,நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.  


196. குறுமகள் உள்ளிச் செல்வல்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. 
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவதுஇல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே; 5இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்புகழ்குறை படூஉம் வாயில் அத்தைஅனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும், 10வெயிலென முனியேன், பனியென மடியேன்,கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்மெல்லியல் குறுமகள் உள்ளிச்செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே! 15


197. நல் குரவு உள்ளுதும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. 
வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடுகொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடுமலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு 5செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;எம்மால் வியக்கப் படூஉ மோரே,இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த 10குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் 15உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;நல்லறி வுடையோர் நல்குரவுஉள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!  


198. மறவாது ஈமே!
பாடியவர்: வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்.பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. 
`அருவி தாழ்ந்த பெருவரை போலஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்,கடவுள் சான்ற, கற்பின் சேயிழைமடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்கிண்கிணிப் புதல்வர் பொலிக!`` என்று ஏத்தித், 5திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்,காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்,வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், 10விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்ததண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்,பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்நின்னோ ரன்னநின் புதல்வர், என்றும்,ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும் 15பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்முன்னோர் போல்க; இவர் பெருங்கண் ணோட்டம்!யாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப்பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும்,நீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும், 20இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி,நீடு வாழிய! நெடுந்தகை; யானும்கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின் 25அடிநிழல் பழகிய வடியுறை;கடுமான் மாற! மறவா தீமே.  


199. கலிகொள் புள்ளினன்!
பாடியவர்: பெரும்பதுமனார்திணை: பாடாண் துறை: பரிசில் கடா நிலை 
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;அனையர் வாழியோ இரவலர்; அவரைப்புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் 5உடைமை ஆகும், அவர் உடைமை;அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.  


200. பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.