LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ராகுல் சாங் கிருத்தியாயன்

மனிதன் என்பவன் ஓரே இடத்தில்நிற்கும் மரமல்ல .

உணர்ச்சிப் பிழம்பான ஓர் அசையும் பிராணி .

இயக்கிக் கொண்டே இருக்க வேண்டியது மனிதன் கடமை ,

இயங்க மறுப்பவன் மனிதன் அல்ல .

இந்திப் பயண இலக்கியத்தின் தந்தை என ராகுல் சாங்கிருத்தியாயன் ( Rahul Sankrityayan ) அழைக்கப்படுகிறார் . இவர் பல மொழி கற்ற பல்துறை வித்தகர் , மார்க்சியவாதி . அதுமட்டும் அல்லாமல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுதிய காரணத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார் . இவர் 1893 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார் . ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்றார் . ஆனால் தாமாகவே தமிழ் , இந்தி , பாலி , சமஸ்கிருதம் , அரபி , உருது , பாரசீகம் , கன்னடம் , சிங்களம் , பிரெஞ்சு , ரஷ்யா மொழி என பல மொழிகளைக் கற்றார் . அத்துடன் புகைப்படக் கலையையும் கற்றார் . இவர் நேபாளம் , தீபெத் , இலங்கை , ஈரான் , சீனா , ரஷியா என வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் . தனது வாழ்நாளில் 45 ஆண்டு காலம் உள்நாடு , வெளிநாடுகள் பயணத்தில் செலவழித்தார் .

ராகுல்ஜி 146 புத்தகங்களை எழுதியுள்ளார் . வால்கா முதல் கங்கை வரை என்ற வரலாற்றுப் புனைவு நூல் மிகவும் பிரபலமானது . கி . மு .6000 முதல் கி . பி 1942 இல் முடியும் வரலாறாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது . பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . இவர் சாகித்திய அகாடமி விருதினையும் , பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார் . முறையான கல்வி கற்காதவர் என்றாலும் இவரின் அறிவுத் திறமையைக் கருதி சோவியத் யூனியன் இவரை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் இந்திய பேராசிரியர் பதவி கொடுத்தது . இவர் 1963 ஆம் ஆண்டு காலமானார் .

by Swathi   on 02 Dec 2015  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
13-May-2020 17:59:35 Abdul jabar said : Report Abuse
Very good book from Volga to Ganges. He is a historian and world famous writer
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.