LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் 1033வது சதய விழா தஞ்சையில் கோலகலம்!

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் 1033 வது சதய விழா தஞ்சையில் கோலாகலமாகக்  கொண்டாடப்பட்டது. 

மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டுஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடுகிறது.

60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்ட நிலையில், இம்முறை விழா சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாகத் திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

ராஜராஜ சோழன் பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில்,  மங்கள இசை முழங்க விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாமன்னன் 'ராஜராஜன் கண்ட திருமுறை', 'ராஜராஜன் ஆட்சிக்காலம்' போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும், 'திருமுறை பன்னிசை' என்கிற பெயரில் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சதய விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்த பிறகு 108 கலச பூஜை நடைபெற்றது. அதன் பிறகு தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குப் பூஜை செய்யப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் ‘தேவார வீதி உலா' நடைபெற்றது.

ராஜராஜ சோழன் உயிருடன் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அவரது சிலையும் பட்டத்து இளவரசி உலகமாதேவி சிலையும் காணாமல் போய் குஜராத்தில் உள்ள தனியார் மியூசியத்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. அந்த சிலைகளை பலத்த பாதுகாப்போடு கோயிலுக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர். இந்தச் சிலைகளைக் கொண்டு வரும் போதே மக்கள் திரண்டு பெரிய விழா எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

சதய விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் செய்யப்பட்டன. தமிழகம் முழுதும் இருந்து வந்துள்ள ஏராளமானோர் மீட்கப்பட்ட சிலைகளை பார்த்து செல்கின்றனர்.

ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டு இருந்தது. பெரிய கோயில் மின் விளக்கு அலங்காரத்தினால் ஜொலித்தது.

by Mani Bharathi   on 24 Oct 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
28-Oct-2018 14:05:19 ம.கி.சுப்ரமணியன் said : Report Abuse
திரு. ராஜ ராஜ சோழன் தஞ்சையில் ஸ்ரீ ப்ரஹதீஸ்வரர் கோவிலைக் கட்டியது இந்திய, உலக சரித்ரத்தில் பொன் எழுத்துக்களால் எழுதவேண்டும். இது ஒரு சாமான்யமான செயல் அல்ல. தெய்வீகச் செயல் போல் தோற்றம். இந்திய மக்கள் அனைவரும் இதைக்கண்டு பெருமை,புளகாங்கிதமும் அடைகின்றனர். இதர நாட்டினரும் இதைக் கண்ணுற்று வியப்படைகின்றனர். கோவில் கட்டிடக் கலையில் இயல்பாகவே ஆர்வம் கொண்ட மாமன்னர் திரு. "ராஜராஜ சோழன்" இந்தக் கோவிலை நிர்மாணித்தற்காக அவரை எவ்வளவு போற்றினாலும் போதாது. 1033 'சதய' விழா தஞ்சாவூரில் மட்டுமன்றி உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லையில்லா மகிழ்ச்சியுறுகின்றனர். இன்னும், இந்த ப்ரஹமாண்டமான கோவிலின் பராமரிப்பை நவீன விஞ்ஞான முறையில் செய்வது தான் அந்த 'சதய' நக்ஷத்திரத்தில் பிறந்த மாமன்னன், "ராஜ ராஜ சோழனுக்கும்", இதை அந்தக் காலத்தில் கட்டிய அனைத்து கட்டிட வல்லுனர்களுக்கும், தலை சிறந்த சிற்ப கலைஞர்களுக்கும் நாம் செய்யும் கைம்மாறாகும். கோவிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. தொல்பொருளாய்வுத் துறை .மேலும் நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க கோருகிறேன் - மணியன்.
 
28-Oct-2018 10:43:43 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். பேரரசன் ராஜராஜ சோழன்,அரசி உலகமாதேவி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு தஞ்சை கொண்டு வரப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு அவரது பிறந்த நாளை சதய விழாவாக கொண்டாடுவதும் மகிழ்ச்சி.உலகம் உள்ளம் வரை அவர் புகழ் விளங்கும். " வாழ்க ராஜராஜனின் புகழ், வளர்க தமிழகம்"
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.