LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!

மான் கராத்தே படத்தை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளி கிழமை அன்று வெளிவந்திருக்கும் படம் காக்கிசட்டை.

இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இவர்கள் தவிர பிரபு, இமான் அண்ணாச்சி, மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு பக்கம் ஆக்‌ஷனுக்குரிய அத்தணை அம்சங்களும் உள்ளன. சிவகார்த்திகேயன் அடுத்த ஸ்டெப் என ஒரு தரப்பு கூறினாலும், மற்றொரு தரப்பு பழைய கதைதான், அதே பாணி ஆக்‌ஷன் சீன்கள், காமெடி, ஆக்‌ஷன் என இரண்டிலும் சற்று அரைகுறை என்பது போல் கலவையான விமர்சனங்கள் உருவாகியுள்ளன.

சரி விமர்சனம் தான் இப்படி இருக்கு.. கலெக்க்ஷன் எப்படி இருக்குனு பார்த்தா... வசூலில் சற்று மந்த நிலையே நிலவி வருவதாக சொல்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். ஆனாலும், விடுமுறை நாட்களில் பரவாயில்லை என்றும் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் சுமார் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காக்கி சட்டை வெளியாகியுள்ளதாம்.

இந்நிலையில் காக்கி சட்டை படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’ரஜினி முருகன்’ படம் 40 கோடிக்கு விலை போயுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனேவே பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மெகா ஹிட் வெற்றி பெற்றதே இதற்கு காரணம் என சொல்கிறது... கோலிவுட் வட்டாரங்கள்...

by Swathi   on 03 Mar 2015  0 Comments
Tags: Rajini Murugan   Sivakarthikeyan   சிவகார்த்திகேயன்   ரஜினி முருகன்           
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !! சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !!
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ் !! ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.