LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினி - ரஞ்சித் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

’அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. தற்போது அந்தத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை தாணு தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ரஜினி நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் கபிலன், உமாதேவி, கானா பாலா, கலை, இயக்கம் ராமலிங்கம், படத்தொகுப்பு - பிரவீன் கே.எல். ,சண்டைப்பயிற்சி அன்பு ,அறிவு, நடனம் - சதீஷ், ஒலி வடிவமைப்பு ரூபன்.

ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தற்போது இப்படத்தின் அடுத்த கேள்வி ஹீரோயின் , மற்ற நடிகர்கள் யார் என்பதே.

by CinemaNews   on 01 Jun 2015  0 Comments
Tags: Rajini - Ranjith Movie   ரஜினி ரஞ்சித்                 
 தொடர்புடையவை-Related Articles
ரஜினி - ரஞ்சித் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! ரஜினி - ரஞ்சித் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.