LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறாராம் ரஜினி !!

லிங்கா படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினி காந்த் அடுத்ததாக யாருடைய படத்தில் நடிப்பார் என தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. ஷங்கர், முருகதாஸ் என முன்னணி இயக்குநர்களின் படத்தில் நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டாலும், அது உறுதி செய்யப்பட்டவில்லை.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு முழு நீள காமெடி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான கதை தேர்வு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறதாம்.

ஏற்கெனவே ரஜினி நடித்த காமெடி படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலையும் வாரி குவித்தது. குறிப்பாக தில்லுமுல்லு, தம்பிக்கு எந்த ஊரு , குரு சிஷ்யன் உள்ளிட்ட காமெடி படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. அந்த படங்கள் சாயலில் காமெடி படம் ஒன்றில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளாராம்.

சமீபத்திய அவரது படங்கள் அனைத்தும் சீரியஸ் கதையம்சம் உள்ள படங்களாகவே இருந்தன. ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கோச்சடையான்’ என ஆக்ஷன் படங்களில் நடித்தார். லிங்காவும் ஆக்ஷன் படமாகவே இருந்தது. எனவே இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை கொஞ்ச காலம் ஒதுக்கி வைத்து விட்டு காமெடி படங்களில் நடிக்க தயாராகிறாராம் ரஜினி.

காமெடி கதைகள் எழுதி பிரபலமான கிரேசி மோகனை சில தினங்களுக்கு முன்பு ரஜினி சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. காமெடி படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

காமெடி படங்களை இயக்கம் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ரஜினியின் புதுப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
by Swathi   on 25 Mar 2015  0 Comments
Tags: Comedy   Comedy Movie   Rajinikanth   Rajinikanth Next Movie   Rajinikanth Comedy Movies   காமெடி படங்கள்   நகைச்சுவை படம்  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !! இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !! ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.