LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பசங்க, கோலிசோடா நடிகர்கள் நடிக்கும் வஜ்ரம்... இது கல்வி உரிமை பற்றிய படமாம்....

விஜயகாந்த் நடித்த “உளவுத்துறை” அருண்விஜய் நடித்த "ஜனனம்" போன்ற படங்களை இயக்கிய S.D.ரமேஷ்செல்வன், அடுத்து இயக்கி வரும் படம் “வஜ்ரம் “.  


இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். “வஜ்ரம் “ படத்தில் பசங்க, கோலிசோடா  வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.


கதாநாயகியாக பவானிரெட்டி  என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்கள் தவிர ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சனா, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள். 


இந்த படம் குறித்து அதன் இயக்குனர் கூறுகையில், இன்று உலகம்  முழுக்க பிரச்சனையாகி வருவது வருங்காலத்தினரின் அடிப்படைத் தேவையான கல்வி பற்றித்தான். இன்று அங்கீகரிக்கப்பட்ட கொள்ளேயே கல்விதான் இதை தான் இந்த படத்தில் சொல்கிறோம்.  கேட்டு வாங்கவேண்டிய உரிமை கொண்ட கல்வியை பணம் கட்டி பெற்றுக் கொண்டிருக்கிற அவலம் தான் இன்றைய தலைமுறையினரின் பிரச்னை.


இந்த படத்தில் இதை கமர்ஷியல் கலந்து அதிரடி படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சென்னை, மூணார், சாலக்குடி மற்றும் அசாம் மாநிலத்திலும் படப்பிடிப்பு நடக்கிறது என்றார் இயக்குனர்.   

by Swathi   on 27 Oct 2014  0 Comments
Tags: Vajram   Vajram Movie   Vajram Tamil Movie   வஜ்ரம் திரைப்படம்   ரமேஷ் செல்வன்   கோலிசோடா   வஜ்ரம்  
 தொடர்புடையவை-Related Articles
அனைவருக்கும் கல்வியை வலியுறுத்தி வஜ்ரம் படக்குழு சார்பாக சென்னையில் மாரத்தான் போட்டி !! அனைவருக்கும் கல்வியை வலியுறுத்தி வஜ்ரம் படக்குழு சார்பாக சென்னையில் மாரத்தான் போட்டி !!
பசங்க, கோலிசோடா நடிகர்கள் நடிக்கும் வஜ்ரம்... இது கல்வி உரிமை பற்றிய படமாம்.... பசங்க, கோலிசோடா நடிகர்கள் நடிக்கும் வஜ்ரம்... இது கல்வி உரிமை பற்றிய படமாம்....
புசான் உலக திரைப்பட விழாவில் கோலிசோடா !! புசான் உலக திரைப்பட விழாவில் கோலிசோடா !!
விக்ரம், விஜய் படங்களில் நடிக்கும் கோலிசோடா சீதா!! விக்ரம், விஜய் படங்களில் நடிக்கும் கோலிசோடா சீதா!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.