LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

ராமுவின் பெரும் உதவி

சுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான். ராமு அந்த ஊரில் உள்ள நடு நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். மயில்வாகணன் அருகில் உள்ள ஒரு நகரத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். தினமும் காலையில் சைக்கிளில் அந் நகரத்துக்கு சென்று கடையை திறந்து வியாபாரத்தை பார்த்துவிட்டு இரவு ஒன்பது மனிக்கு மேல்தான் வீடு திரும்புவார். அவரது கடையில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் பூச்சி மருந்துகள் போன்றவை விற்பனையாகும்.

ராமு நல்ல மாணவனாய் மட்டும் இல்லாமல், அவன் அம்மாவுக்கு வீட்டில் எல்லா உதவியும் செய்வான். அதுமட்டுமல்லாமல் அந்த ஊரில் உள்ள வயதானவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகள் செய்வான். ராமுவின் செயல்களினால் அவனின் பெற்றோர்களுக்கும் அந்த ஊரில் நல்ல பெயர் இருந்தது.

ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு விவசாயி தன் நிலத்தில் தண்ணீர் தேவைக்காக ஒரு ஆழ்துளைக்கிணறு போட்டார். தண்ணீர் கிடைக்காததால், அதனை அப்படியே விட்டு விட்டு அடுத்த இடத்திற்கு சென்று நிலத்தை துளையிட்டார். முன்னர் துளை போட்ட இடத்தை மூடாமல் விட்டு விட்டார். அந்த இடத்தின் பாதையோரத்தில் மரங்களும் இருந்ததால், நடந்து வருவோர் சற்று அமர்ந்து செல்ல பெரிய கற்களும் பதித்து வைத்திருப்பர். இதனால் அந்த விவசாயின் தோட்டத்து வழி எப்பொழுதும் ஆட்கள் நடமாட்டமாகவே இருக்கும்.ராமுவைப்போலவே நிறைய மாணவர்கள் அவருடைய தோட்ட வழியாகத்தான் பள்ளிக்கு செல்வர். அவர்கள் இந்த ஆழ்துளைக் கிணறு திறந்திருப்பதை பார்த்து விட்டு விவசாயிடம் சென்று ஐயா, நீங்கள் தண்ணீருக்காக நிலத்தில் துளையிட்டுவிட்டு அப்படியே திறந்து போட்டுவிட்டு வந்து விட்டீர்கள்.தயவு செய்து அதை மூடிவிடுங்கள் என்று கேட்டனர்.அவர் நல்லவர்தான் என்றாலும், போவோர் வருவோர் சொல்லி நாம் கேட்பதா என்னும் மனப்பான்மையால் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை.

இப்படி இருக்கையில் ஒரு நாள் ஒரு அம்மாள் தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அன்று நல்ல வெயில். வந்தவர் ஒரு மர நிழலில் சிறிது நேரம் களைப்புற்று கைக்குழந்தையையுடன் அருகில் இருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து விட்டார். அந்த வெயிலுக்கு, மர நிழல் சுகமாக இருந்தது.தன்னுடைய குழந்தையை அப்படியே தன் உடல் மீது சாய்த்துக்கொண்டு நிழலின் சுகத்தில் கண்ணை மூடியவர் அசந்து விட்டார். அந்த பெண்ணின் மடியில் இருந்த குழந்தை மெல்ல அம்மாவின் கையை விட்டு இறங்கி அந்த மண்ணின் மீது தவழ்ந்தவாறு  நடக்க ஆரம்பித்து விட்டது.

அந்தக்குழந்தை நடந்த பாதை அருகேதான் அந்த விவசாயி போட்டிருந்த ஆழ்துளை கிணறு இருந்தது. அது மூடாமலும் இருந்தது. அந்தக்குழந்தை  திறந்திருந்த அந்த துளையில் மெல்ல கை விட்டு பின் கையை எடுத்து விளையாடியது.அதன் பின் என்ன நினைத்ததோ தெரியாது மெல்ல திருப்பி ஒரு காலை விட்டு விளையாண்டது. இதை எதுவும் அறியாத அந்த பெண் நல்ல தூக்கத்துக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்.

திடீரென ஒரு கூக்குரல் எழுந்தது திடுக்கிட்டு விழித்த அந்த் பெண் தூரத்தில் ஒரு பையன் கீழே படுத்து கிடப்பதையும் எதையோ கையில் பிடித்தவாறு கத்திக்கொண்டிருப்பதையும் பார்த்தவள், திடீரென நினைவு வந்தவளாய் தன் குழந்தையை தேட அது காணாமல், பதட்டத்துடன் எதையோ கையில் பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டு படுத்துக்கிடந்த அந்த பையனின் அருகில் ஒடிப்போய் பார்த்தவளுக்கு மூச்சே நின்றுவிட்டது போல் இருந்தது. தன்னுடைய குழந்தையின் முக்கால்வாசி உடல் அந்த குழியில் உள்ளே இருக்க, கழுத்தை மட்டும் அந்தப்பையன் பிடித்து கத்திக்கொண்டிருந்தான்.அந்த பெண்ணும் உதவி உதவி என்று கூச்சலிட்டுக்கொண்டு அந்தப்பையனோடு சேர்ந்து தானும் தன் குழந்தையை பிடித்துக்கொண்டாள்.

அதற்குள் சத்தம் கேட்டு அந்த வழியாக போவோர் வருவோர் அனைவரும் வந்துவிட்டனர்.பின் அங்கிருந்த அனைவரும் சுற்றிலும் உள்ள மண்ணை மெல்ல எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தையை வெளியே எடுத்தனர். நெடுநேரம் குழந்தையின் கழுத்தை பிடித்திருந்த்தால் அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் எடுத்து மயக்க நிலைக்கு போயிருந்த்து. உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை நல்லபடியாக பிழைத்துக்கொண்டது. எல்லோரும் அந்த விவசாயிடம் சென்று உங்களால் ஒரு குழந்தை சாகத்தெரிந்தது. இந்த பையனால்தான் பிழைத்தது, என்று சொன்னார்கள் அந்த விவசாயி "தம்பி" அன்று  நீங்கள் எல்லாம் சொன்னபோது வழியில போறவங்கதானே, என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன். இன்று வீணான பழிச்சொல்லுக்கு ஆகாமல் என்னை காப்பாற்றி விட்டாய் என்னை மன்னித்துக்கொள் என்றார்.

ராமு ஐயா நீங்கள் பெரியவர்கள், என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்கவேண்டாம். நான் என் தந்தைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். ஒரு குழந்தை தனியாக வருவதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டேன். அப்புறம்தான் எனக்கு
ஞாபகம் வந்தது இங்கு ஒரு குழி இருக்குமே என்று ஓடி வந்தேன். அதற்குள் குழந்தை அந்த குழிக்குள் காலை விட்டு விட்டது.

உடனே ஓடி வந்து அதனை பிடிக்க முயல்வதற்குள் உடல் உள்ளே இறங்க ஆரம்பித்துவிட்டது. வேறு வழியில்லாமல் கழுத்தை என் கரத்தோடு இறுகப்பற்றி அப்படியே படுத்துக்கொண்டு சத்தம் போட்டேன். நல்ல வேளை அதற்குள் அந்த குழந்தையின் அம்மாவும் வந்ததால் நல்லதாகப்போயிற்று என்று கூறினான். அந்த ஊர் மக்கள் இன்றும் ராமுவின் அந்த பெரும் உதவியைப்பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Ramu help
by Dhamotharan.S   on 17 Jun 2016  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
02-Jul-2017 17:53:55 ravi said : Report Abuse
I like all the stories daily I choose one story and tell to my baby
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.