LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ரசமவதே ஜெயக !!! - நம்ம ரசம் பற்றிய கவிதை

சிற்றின்ப வாழ்க்கையில் பேரின்பம் காண  

மிளகு , தக்காளி , பருப்பு , பூண்டு , புளி என வகைகொண்டு 

 

சித்தர்கள் தமிழ் உலகுக்கு அளித்தது ரசவாதம் 

 

என்னும் ரசம்  வைக்கும் முறையாம் !!! 

 

சூடு தண்ணீரில் புளி கலந்தால் ரசமில்லை தமிழ் நெஞ்சங்களே

 

 ஆய கலைகள் அறுபத்தி நான்கில் முதற்க் கலை ரசக்கலை!

 

திருப்பாற்கடலை கடைந்து எடுத்தது அமிர்தல்ல ரசம் தமிழ்  இனமே 

 

சிவபெருமான் விஷத்தை உண்டு ரசத்தைக் காத்தார்!

 

அரிதினும் அரிது நன்று கரைத்த பச்சைப்புளி ரசம் -அவ்வை பாட்டி அறிவுரையும் 

 

கடையில் வாங்கிய ரசப்பொடி வைத்து ரசம் வைப்போர் 

 

மக்கள் அல்ல மாக்கள்  என வள்ளுவர் பெருந்தகை வாக்கும் 

 

காதலாகி கண்ணீர் மல்கி ரசம் குடித்தேன் -மாணிக்கவாசகர் கூற்றும் 

 

ரசத்தை குடித்தேனே உயிரை வளர்தேனே என்று திருமூலரும் 

 

தமிழ் கூறும் நல்லுலகுக்கு விட்டுச் சென்ற ரசமொழிகளாம்!!

 

என் முப்பாட்டன் முருகப்பெருமானும்  

 

ரசத்துக்கு சண்டையிட்டு மலையேறினான்!

 

மாம்பழம் காரணம் என்பது 

 

திரிக்கப்பட்ட வரலாற்றின் கறுப்புப் பக்கமாம் !  உண்மையறிக உள்ளங்களே !

 

இஃது கேள்வி  ஞானமில்லை !  ஏட்டுச் சுரைக்காயுமில்லை!

 

மனைவி அம்மா வீடு சென்றுவிட 

 

விழி மேல் காலி ரசக்குண்டா வைத்து  ஏக்கம் கொள்ளும்

 

கணவனின் மனக் குமுறல்கள் என்றரிக!

 

ஆதலினால் மகாஜனங்களே நினைவில் கொள்க 

 

ரசமில்லா வாழ்வு விஷமாகும் !!!

 

-பாவி

 

 

 

by Guest   on 10 Aug 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.