LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழ் அறிவியலாளர்கள்

ரவி கண்ணன் (கணிணியியல்)

ரவிந்திரன் கண்ணன் (Ravindran Kannan) மைக்ரோசாப்ட் இந்திய ஆய்வுமையத்தில் படிமுறைத் தீர்வுகளைக் குறித்த ஆராய்ச்சிகளை நடத்தும் குழுவிற்கு தலைமை வகிக்கும் முதன்மை ஆய்வாளராவார். இந்திய அறிவியல் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் தானியங்கித்துறையின் முதல் இணைஆசிரியரும் ஆவார். கணினிப் பொறிமை சங்கத்தின் சிகாக்ட் (SIGACT) எனப்படும் படிமுறைத்தீர்வுகளும் கணியியலும் சிறப்பு ஆர்வலர் குழுவின் 2011 ஆண்டுக்கான கெநூத் பரிசிற்கு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]


ரவி கண்ணன் தனது பொறியியல் பட்டப்படிப்பை (பி.டெக்) இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையிலும் முனைவர் பட்ட மேற்படிப்பை கார்னெல் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.


இவரது முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று புரோபெனியசு சிக்கலுக்கான தீர்வாகும். பணத்தின் குறிப்பிட்ட வெவ்வேறு மதிப்புகள் கொண்ட தாள்களும் நாணயங்களும் இருக்கையில் இவற்றைக் கொண்டு கூட்ட முடியாத தொகைகளில் பெரிய தொகை எவ்வளவு என்பதை விரைவாகக் கணிக்கும் முறையை இவர் கண்டறிந்தார். காட்டாக, ஒரு நாட்டில் ஐந்து உருவாவும் மூன்று உருவாவும் மட்டுமே புழக்கத்தில் உள்ளது என வைத்துக் கொண்டால், அங்கே ஏழு உருவாவுக்கு எந்த வணிகமும் செய்ய முடியாது. இவரது தீர்வுமுறையின் விளைவாக எண்கணித நிரலாக்கத்திலும் அளவாக்கி நீக்கமுறையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் ஏற்பட்டன.

by Swathi   on 01 Nov 2014  0 Comments
Tags: Ravindran Kannan   ரவி கண்ணன்   Tamil Computer Scientists              
 தொடர்புடையவை-Related Articles
ரவி கண்ணன் (கணிணியியல்) ரவி கண்ணன் (கணிணியியல்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.