|
||||||||||||||||||
கார்லிக் சிக்கன் ஃப்ரை(garlic chickan fry ) |
||||||||||||||||||
தேவையானவை: கோழி - ஒருகிலோ பூண்டு- 30 பல் சோயா சாஸ்- ஒரு டீஸ்ஸ்பூன் உப்பு- தேவையான அளவு அரிசி மாவு- மூன்று டேபிள் ஸ்பூன் சோள மாவு- மூன்று டேபிள் ஸ்பூன் சர்க்கரை- இரண்டு டீஸ்ஸ்பூன் எண்ணெய்- பொரிப்பதற்கு மிளகாய் வற்றல் - 10 சின்ன வெங்காயம்- 4 எண்ணெய் -இரண்டு டீஸ்ஸ்பூன் தக்காளி- 1 உப்பு- தேவையான அளவு சர்க்கரை- ஒரு டீஸ்ஸ்பூன் டார்க் சோயா சாஸ்- ஒரு டீஸ்ஸ்பூன் செய்முறை: 1.சிறிய துண்டுகளாக்கிய கோழியை சோளமாவு,அரிசிமாவு,சோயாசாஸ்,உப்பு,சர்க்கரை சேர்த்து கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.பூண்டை லேசாக தட்டி வைக்கவும். 2.வாணலியில் எண்ணெய் சூடாக்கி தட்டிய பூண்டை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.அதே எண்ணெயில் கோழி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுக்கவும் செய்து எடுக்கவும். 3.மிளகாய் வற்றல்,சின்ன வெங்காயம்,தக்காளி,உப்பு ஆகியவற்றை நன்றாக மிக்சியில் அரைத்து கொள்ளவும் இந்த கலவையை எண்ணெயில் வதக்கி சோயாசாஸ் சேர்க்கவும்.டிப்பிங் சாஸு ரெடி. பொரித்த பூண்டு,கோழி துண்டுகளை பரிமாறும் தட்டில் வைத்து டிப்பிங் சாஸுடன் சூடாக பரிமாறவும். |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|