LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- அசைவ வறுவல்

ஈரல் வறுவல்(Goat Liver Fry)

தேவையானவை:


ஆட்டு ஈரல் - அரை கிலோ

மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - இரண்டு

இஞ்சி மற்றும் பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்

பச்சை மிளகாய் - இரண்டு

வர மிளகாய் - 4

மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன்

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்

சோம்பு - ஒரு டீ ஸ்பூன்

பட்டை, இலை - தாளிக்க 


செய்முறை:


1.நன்கு கழுவிய ஈரலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 200 மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும்.


2.அதனுடன் மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.


3.வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, மலிப்பொடி பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். 


4.அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.இப்போது சுவையான ஈரல் வறுவல் ரெடி.

by kavitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.