LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

சிவப்பு மலை!

     பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள் போல இருக்கும். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் படகுகளையும் வாள் மூக்கால் குத்தி, கடலில் இருந்து விரட்டும். கடற்கரைகளில் அமரும் மக்களையும் சும்மா விடாது. அந்த நேரத்தில் சிங்கப்பூரின் அரசராக இருந்தவர் ராஜா இஸ்கந்தர். தனது படைவீரர்களிடம் வாள் மீன்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்.


     பெரிதாக வந்த ஓர் அலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப் பட்ட வீரர்கள், ஈட்டியால் வாள் மீன்களைக் கொல்ல முயன்றனர். ஆனால், ஜெயித்தது என்னவோ வாள் மீன்கள்தான்! பல வீரர்களைத் தங்கள் வாள் முக்கால் காயப்படுத்தி துரத்தி அடித்தன. வீரர்களின் ரத்தத்தால் கடல் செந்நிறமாக மாறியது.


     போர்வீரர்களில் பலர் இறந்ததால் பயந்துபோனார் அரசர். சோகமாக கடற்கரை மணலில் நடந்துகொண்டு இருந்தார். “இந்தப் பயங்கரமான வாள் மீன்களை எப்படிக் கொல்வேன்?” என்று கத்தினார்.


     “வழி இருக்கிறது” என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தார் அரசர். அருகில் இருந்த பாறையில் ஒரு சிறுவன் அமர்ந்து இருந்தான். அவனே தொடர்ந்து, “நீரில் வாழைமரங்களால் ஒரு சுவர் எழுப்புங்கள். அலையில் வாள் மீன்கள் வரும்போது அவற்றின் வாள் மூக்கு கூர்மையாக இருப்பதால் வாழை மரத்தில் குத்தி மீன்கள் சிக்கிவிடும்!” என்றான்.


     அதன்படியே நாடு முழுவதும் இருந்து வாழை மரங்களை எடுத்து வந்து கடலில் சுவர் எழுப்பினார் கள். அடுத்து வந்த பெரிய அலையில் வாள் மீன்கள் வாழை மரத்தில் சிக்கிக்கொண்டன. அவற்றை அரசரின் வீரர்கள் கொன்று குவித்தனர்.


     ஒரு வீரன்கூட இறக்கவில்லை. அதே நேரம், ஒரு வாள் மீன்கூட தப்பிக்கவில்லை! இறந்து கிடந்த மீன்களை எடுத்து சமைத்துப் பெரிய திருவிழாவாகவே கொண்டாடினர்.


     ஆனால், அரசருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தனது தளபதியிடம் “அந்த சிறுவன் மிகவும் புத்திசாலி. என்னைவிட சக்தி வாய்ந்தவனாக ஒரு நாள் வருவான்” என்றார்.


     அன்று இரவு அந்தச் சிறுவனைக் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பினான் தளபதி. அவர்கள் அந்த மலைக்குச் சென்றனர். அங்கே பயங்கர உருவத் தோடு ஒரு கிழவி நின்றிருந்தாள், “ஏமாற்றுக்காரர் களே” என்று கத்திய அவள், “உங்களுக்கு உதவி செய்த சிறுவனையே கொல்லப் போகிறீர்களா? நான் உங்களுக்குத் தண்டனை தருவேன்.” என்றாள்.


     பயந்துபோன வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். திடீரென அவர்கள் முன் இருந்த தரைப் பகுதி பிளந்தது. அதில் விழுந்து இறந்து போனார்கள் வீரர்கள். அவர்களது ரத்தம் ஆறாக ஓடி மலையையே ரத்த நிறமாக்கியது. அதிலிருந்து அதற்கு “சிவப்பு மலை” என்று பெயர் வந்தது.


     இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தக் கிழவியோ, சிறுவனோ காணப்படவில்லை. “எப்போது அந்தச் சிறுவன் திரும்பிவரு கிறானோ அதுவரை மலை சிவப்பாகத்தான் இருக்கும். பல உயிர்களைக் காப்பாற்றிய அப்பாவி சிறுவனைக் கொல்வதற்காகப் போட்ட வஞ்சகத் திட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்” இது சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கை!

by parthi   on 09 Mar 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
01-Jun-2018 09:18:36 ஸ் வெண்ணிலா said : Report Abuse
இந்த கதை உண்மையா !
 
26-Feb-2014 01:06:42 வித்யாதேவி.R said : Report Abuse

very intersting stories

 

 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.