உலகில் பெரும்பாலானோர் உடல் பருமன் பிரச்சனையால் அவதி படுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், துபாய் அரசு, உடல் எடையை குறைப்பவர்களுக்கு, பரிசாக தங்கம் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி, ஒரு மாதத்தில், குறைந்த பட்சம், 2 கிலோ எடையை குறைப்பவர்களுக்கு,ரம்ஜான் பரிசாக 2 கிராம் தங்கம் வழங்கப்படும். உடல் எடையை குறைக்க வசதியாக நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள துபாயில் 91 இடங்களை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.
|