LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

ஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே !!

நமது உரிமையை மீட்க அருமையான வாய்ப்பு

சனவரி 26 குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் உள்ளூர் அரசு அதிகாரிகள் தலைமையில் உங்கள் கிராமத்தில் கட்டாயம் நடைபெற உள்ளது. ஊராட்சி தலைவர் கவுன்சிலர் வார்டு உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகள் யாரும் தற்சமயம் அதிகாரத்தில் இல்லாததால் யாருக்கும் தெரியாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே கிராம சபை கூட்டத்தை நடத்துவார்கள்

கிராம சபை கூட்டத்தில் வாக்காளர்கள் (பொது மக்கள்) யார் வேண்டுமானலும் கலந்துக் கொண்டு தீர்மானம் கொண்டு வரலாம்.

சிந்து சமவெளி நாகரீக காலம் முதல் நடந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டினை நடத்த சட்ட பூர்வ அங்கிகாரம் உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும் என்ற பொருள் படும் தீர்மானத்தை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றுங்கள் இந்த தீர்மாணத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைவேற்றி அதன் சான்றிட்ட நகலை பெற்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வையுங்கள் கூட்டம் முடிந்த உடனேயே சான்றிட்ட நகல் பெற்றுக் கொள்ளலாம்.

முதல் முறையாக உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் இப்படி ஒரு வேண்டுகோளை மக்கள் மன்ற தீர்மானங்கள் மூலமாக சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் அதுவும் வழக்கில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்

வழக்கு எண்ணை கட்டாயம் குறிப்பிடவும் (உச்ச நீதிமன்ற வழக்கு எண் CIVIL APPEAL NO.5387 OF 2014)

தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் (வாக்காளர்கள்) கையெழுத்திட்டு உங்கள் கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் (ஊராட்சி எழுத்தர்) மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்சி அலுவலர்க்கும் உங்கள் மாவட்ட ஆட்சியருக்கும் இன்றே ஒரு கடிதம் அனுப்பி வையுங்கள்
 
நல்வினை விஸ்வராஜு. எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
செல் 9445675801

by Swathi   on 18 Jan 2017  0 Comments
Tags: ஜல்லிக்கட்டு   கிராமசபை   தீர்மானம்   Jallikattu   Panchayati raj        
 தொடர்புடையவை-Related Articles
உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம் உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்
ஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே !! ஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே !!
இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது : தமிழக சட்டசபையில் தீர்மானம் !! இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது : தமிழக சட்டசபையில் தீர்மானம் !!
குழந்தை திருமணத்தை தடைசெய்யும் ஐ.நா தீர்மானம் : இந்தியா ஆதரிக்க மறுப்பு !! குழந்தை திருமணத்தை தடைசெய்யும் ஐ.நா தீர்மானம் : இந்தியா ஆதரிக்க மறுப்பு !!
சிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம் சிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.