|
||||||||
பீர்க்கங்காய் தோல் துவையல் |
||||||||
தேவையானவை 1. பீர்க்கங்காய் - 2 2. உளுந்தம் பருப்பு - ஒரு கப் 3. புளி - ஒரு நெல்லிக்காயளவு 4. காய்ந்த மிளகாய் - 2 5. எண்ணெய் - ஒரு ஸ்பூன் 6. உப்பு - தேவையான அளவு செய்முறை : 1. பீர்க்கங்காயின் தோலை மட்டும் தனியாக சீவி எடுத்துக் கொண்டு அதை பொடியாக நறுக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு. காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
3. அதே வாணலியில் மறுபடியும் சிறிதளவு எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை போட்டு வதக்கி, மிக்ஸியில் போடவும்.
4. இதனுடன் புளி, உப்பு, வறுத்த உளுந்து. காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த துவையலை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். |
||||||||
by Swathi on 16 Jul 2014 0 Comments | ||||||||
Tags: Ridge Gourd Leaves Chutney Peerkangai Chutney Peerkangai Thol Thogayal Peerkangai Skin Thogayal பீர்க்கங்காய் தோல் துவையல் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|