|
|||||
பீர்க்கங்காய்யின் மருத்துவ பயன்கள் ! |
|||||
பீர்க்கங்காய் அல்லது இது உணவாகப் பயன்படும் ஒரு வகை காய் ஆகும். இது ஒரு படர்கொடி தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். பீர்க்கங்காய் மகத்துவம் : 1.நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம். 2.பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. 3.பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். 4.சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. |
|||||
by Swathi on 05 Feb 2013 1 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|