இந்திய வணிக வரலாற்றிலேயே முதல் முறையாக நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 60.72 என உயர்ந்தது. நேற்று முன்தினம் வர்த்தகம் முடிவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்றுமதிப்பு ரூ. 59.66 என்ற நிலையில் இருந்தது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து டாலரை வாங்கும் போக்கு அதிகரித்தது. இதனால் ஒரு கட்டத்தில் ஒரு டாலருக்கு ரூ. 60.76 தர வேண்டிய நிலை ஏற்பட்டது. வங்கிகளும், எண்ணெய் இறக்குமதி நிறுவனங்களும் பெருமளவில் டாலரை வாங்கியதே வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
|