|
||||||||
சகர ஆகார வருக்கம் |
||||||||
சான்றா ரெனும்பெயர் சார்புளெனும் பெயரும்
அருக்கனு மிருக சீரிடமு மானே. ....654
சாதக மெனும்பெயர் பூதமுஞ் சனனமும்
வானம் பாடிப் புள்ளும் வழங்குவர். ....655
சாமி யெனும்பெயர் தலைவனு மரசனும்
குரவனும் வியாழமுங் கூறுவர் புலவர். ....656
சாம மெனும்பெயர் பச்சை நிறமும்
யாமமு மிரவுமோர் வேதமு மியம்புவர். ....657
சானு வெனும்பெயர் மலையின் பக்கமும்
மலையு முழந்தாட் பெயரும் வழங்கும். ....658
சார லெனும்பெயர் மலையின் பக்கமும்
மருத யாழ்த்திறத் தோரோசையும் வழங்கும். ....659
சானகி யெனும்பெயர் சீதையு மூங்கிலும். ....660
சாம்ப லெனப்பெயர் பழம்பூவும் சாம்பரும்
முற்றுத லெனவு மொழியப்பெறுமே. ....661
சால மெனும்பெயர் ஆச்சார மரமும்
மதிலுஞ் சாளரப் பெயரும் வலையுமாம். ....662
சாலேக மென்னும் பெயர்பூ வரும்பும்
வாதா யனமும் வகுக்கப் பெறுமே. ....663
சாதி யெனும்பெயர் பிரம்புந் தேறலும்
தேனும் தேக்குஞ் சிறுசண் பகமும்
சாதியின் விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. ....664
சாறெனும் பெயரே தாழமரக் குலையும்
வேரியு முயர்திரு விழாவுமாமே. ....665
சாலி யெனும்பெயர் நெற்பொதுப் பெயரும்
வேரியு மருந்ததிப் பெயரும் விளம்புவர். ....666
சார்ங்க மெனும்பெயர் விற்பொதுப் பெயரும்
மாயோன் சிலையும் வகுத்து ரைத்தனரே. ...667
சாப மெனும்பெயர் சபித்தலும் சிலையுமாம். ...668
சாக மெனும்பெயர் சாகினி விகற்பமும்
தேனீப் பெயரும் வெள்ளாடுந் தேக்குமாம். ...669
சாகினி யெனும்பெயர் தழைத்திடு சேம்பொடு
கீரையின் விகற்பமும் கிளத்தப் பெறுமே. ...670
சாரங்க மெனும்பெயர் மானும் வண்டுமாம். ...671
சாரிகை யெனும்பெயர் சூறையும் சுங்கமும்
நாகண வாய்ப்புட் பெயரு நவிலுவர். ...672
சாய லெனப்பெயர் மெய்ப்பாட் டினழகும்
மேன்மையு மெனவே விளம்பப் பெறுமே. ....673
சாகர மெனும்பெயர் துயிலொழிந் திடுதலும்
ஏழ்கடற் பெயரும் இயம்புவர் புலவர். ....674
சாலை யெனும்பெயர் குதிரைப் பந்தியும்
அறப்புற மடமும் அரசர்தங் கோயிலும்
வழிநடைச் சாலையும் வழங்கப் பெறுமே. ....675
சால்பெனும் பெயர்சான் றாண்மையு மியல்புமாம். ....676
சாந்த மெனும்பெயர் சந்தனமும் பொறுமையும் ....677
சாம்பு வெனும்பெயர் பறையொடு பொன்னுமாம். ....678
சார்பெனும் பெயரே சார்தலு மிடமுமாம். ....679
சாத்த னெனும்பெயர் அய்யனும் அருகனும்
புத்தனு மெனவே புகலுவர் புலவர். ....680
சாத மெனும்பெயர் மெய்மையும் பூதமும். ....681
சாலெனும் பெயரே யுழவின் சாலும்
நீர்பெய் பசானமு நிகழ்த்துவர் புலவர். ....682
சான்றா ரெனும்பெயர் சார்புளெனும் பெயரும் அருக்கனு மிருக சீரிடமு மானே. ....654
சாதக மெனும்பெயர் பூதமுஞ் சனனமும் வானம் பாடிப் புள்ளும் வழங்குவர். ....655
சாமி யெனும்பெயர் தலைவனு மரசனும் குரவனும் வியாழமுங் கூறுவர் புலவர். ....656
சாம மெனும்பெயர் பச்சை நிறமும் யாமமு மிரவுமோர் வேதமு மியம்புவர். ....657
சானு வெனும்பெயர் மலையின் பக்கமும் மலையு முழந்தாட் பெயரும் வழங்கும். ....658
சார லெனும்பெயர் மலையின் பக்கமும் மருத யாழ்த்திறத் தோரோசையும் வழங்கும். ....659
சானகி யெனும்பெயர் சீதையு மூங்கிலும். ....660
சாம்ப லெனப்பெயர் பழம்பூவும் சாம்பரும் முற்றுத லெனவு மொழியப்பெறுமே. ....661
சால மெனும்பெயர் ஆச்சார மரமும் மதிலுஞ் சாளரப் பெயரும் வலையுமாம். ....662
சாலேக மென்னும் பெயர்பூ வரும்பும் வாதா யனமும் வகுக்கப் பெறுமே. ....663
சாதி யெனும்பெயர் பிரம்புந் தேறலும் தேனும் தேக்குஞ் சிறுசண் பகமும் சாதியின் விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. ....664
சாறெனும் பெயரே தாழமரக் குலையும் வேரியு முயர்திரு விழாவுமாமே. ....665
சாலி யெனும்பெயர் நெற்பொதுப் பெயரும் வேரியு மருந்ததிப் பெயரும் விளம்புவர். ....666
சார்ங்க மெனும்பெயர் விற்பொதுப் பெயரும் மாயோன் சிலையும் வகுத்து ரைத்தனரே. ...667
சாப மெனும்பெயர் சபித்தலும் சிலையுமாம். ...668
சாக மெனும்பெயர் சாகினி விகற்பமும் தேனீப் பெயரும் வெள்ளாடுந் தேக்குமாம். ...669
சாகினி யெனும்பெயர் தழைத்திடு சேம்பொடு கீரையின் விகற்பமும் கிளத்தப் பெறுமே. ...670
சாரங்க மெனும்பெயர் மானும் வண்டுமாம். ...671
சாரிகை யெனும்பெயர் சூறையும் சுங்கமும் நாகண வாய்ப்புட் பெயரு நவிலுவர். ...672
சாய லெனப்பெயர் மெய்ப்பாட் டினழகும் மேன்மையு மெனவே விளம்பப் பெறுமே. ....673
சாகர மெனும்பெயர் துயிலொழிந் திடுதலும் ஏழ்கடற் பெயரும் இயம்புவர் புலவர். ....674
சாலை யெனும்பெயர் குதிரைப் பந்தியும் அறப்புற மடமும் அரசர்தங் கோயிலும் வழிநடைச் சாலையும் வழங்கப் பெறுமே. ....675
சால்பெனும் பெயர்சான் றாண்மையு மியல்புமாம். ....676
சாந்த மெனும்பெயர் சந்தனமும் பொறுமையும் ....677
சாம்பு வெனும்பெயர் பறையொடு பொன்னுமாம். ....678
சார்பெனும் பெயரே சார்தலு மிடமுமாம். ....679
சாத்த னெனும்பெயர் அய்யனும் அருகனும் புத்தனு மெனவே புகலுவர் புலவர். ....680
சாத மெனும்பெயர் மெய்மையும் பூதமும். ....681
சாலெனும் பெயரே யுழவின் சாலும் நீர்பெய் பசானமு நிகழ்த்துவர் புலவர். ....682
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|