LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

சைவம் - திரைவிமர்சனம் !!

நடிப்பு : பேபி சாரா, நாசர்

 

 

எழுத்து : ஏ.எல்.விஜய்

 

 

இயக்கம் : ஏ.எல்.விஜய்

 

 

இசை : ஜீ.வி.பிரகாஷ்குமார்

 

 

தயாரிப்பு : ஏ.எல்.அழகப்பன்

 

 

திரைப்படவியல் : நீரவ் ஷா

 

 

இயக்குனர் விஜய்யின் மாறுபட்ட படைப்பு தான் சைவம். இப்படம் ஒரு காரைக்குடி குடும்பத்தைப் பற்றிய கதை. காரைக்குடி பக்கத்தில் உள்ள கோட்டையூர் என்ற கிராமத்தின் பெரிய குடும்பம் நாசருடையது. மூன்றாவது மகன், மருமகள், பேத்தி மட்டும் அவருடன் 
இருக்க, மூத்த மகனும், இரண்டாவது மகனும், சென்னையில் இருக்க ஒரு மகள் துபாயில் இருக்கிறார். அனைவரும் அவரவரர் மகன்கள், மகளுடன் அப்பா நாசர் வீட்டிற்கு திருவிழாவிற்காக வருகிறார்கள்.

 

வந்த இடத்தில் நாசரின் மூத்தமகனுடைய மகன் பாஷா, அவனது அத்தை மகளான துவாராவை காதலிக்கிறார். இது ஒருபக்கம் சென்றுகொண்டிருக்க, ஒருநாள் இவர்கள் எல்லோரும் கோவிலுக்கு சாமி கும்பிட செல்கிறார்கள்.


அப்போது, கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் சாராவின் பாவாடை எதிர்பாராமல் தீப்பற்றிக் கொள்கிறது. இதனால் பதட்டத்தில், அர்ச்சனைக்காக கொண்டுவந்த தட்டும் கீழே விழுந்துவிடுகிறது. காயமின்றி சாரா தப்பிக்கிறாள். ஆனால், கோயில் பூசாரியோ கோவிலுக்குள் தீ விபத்து ஏற்பட்டாலும், அர்ச்சனை தட்டு கீழே விழுந்தாலும் குடும்பத்துக்கு ஆகாது என்கிறார்.


வந்த இடத்தில் ஒரு சிறு அசம்பாவிதம் நடக்க, கோயிலுக்காக நேர்ந்து விட்ட சேவலை இன்னும் கோயிலுக்கு கொடுக்காததுதான் காரணம் என அறிகிறார்கள். அதனால் வீட்டில் வளர்க்கும் சேவலை கோயிலுக்கு பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து 
சேவல் காணாமல் போகிறது. அதன் பின் சேவலை பலி கொடுத்தார்களா?  இலையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை.


இயக்குனர் விஜய் இப்படத்தின் மூலம் கடவுளின் பெயரால் பிராணிகளை வதைக்கும் மூடநம்பிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

 

மனதை தொடும் அளவுக்கு படத்தை எடுத்த இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சைவம் - திரைவிமர்சனம்
நடிப்பு : பேபி சாரா, நாசர்
எழுத்து : ஏ.எல்.விஜய்
இயக்கம் : ஏ.எல்.விஜய்
இசை : ஜீ.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு : ஏ.எல்.அழகப்பன்
திரைப்படவியல் : நீரவ் ஷா
இயக்குனர் விஜய்யின் மாறுபட்ட படைப்பு தான் சைவம். இப்படம் ஒரு காரைக்குடி குடும்பத்தைப் பற்றிய கதை. காரைக்குடி பக்கத்தில் உள்ள கோட்டையூர் என்ற கிராமத்தின் பெரிய குடும்பம் நாசருடையது. மூன்றாவது மகன், மருமகள், பேத்தி மட்டும் அவருடன் 
இருக்க, மூத்த மகனும், இரண்டாவது மகனும், சென்னையில் இருக்க ஒரு மகள் துபாயில் இருக்கிறார். அனைவரும் அவரவரர் மகன்கள், மகளுடன் அப்பா நாசர் வீட்டிற்கு திருவிழாவிற்காக வருகிறார்கள். வந்த இடத்தில் நாசரின் மூத்தமகனுடைய மகன் பாஷா, அவனது 
அத்தை மகளான துவாராவை காதலிக்கிறார். இது ஒருபக்கம் சென்றுகொண்டிருக்க, ஒருநாள் இவர்கள் எல்லோரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட செல்கிறார்கள்.
அப்போது, கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் சாராவின் பாவாடை எதிர்பாராமல் தீப்பற்றிக் கொள்கிறது. இதனால் பதட்டத்தில், அர்ச்சனைக்காக கொண்டுவந்த தட்டும் கீழே விழுந்துவிடுகிறது. காயமின்றி சாரா தப்பிக்கிறாள். ஆனால், கோயில் பூசாரியோ 
கோவிலுக்குள் தீ விபத்து ஏற்பட்டாலும், அர்ச்சனை தட்டு கீழே விழுந்தாலும் குடும்பத்துக்கு ஆகாது என்கிறார்.
வந்த இடத்தில் ஒரு சிறு அசம்பாவிதம் நடக்க, கோயிலுக்காக நேர்ந்து விட்ட சேவலை இன்னும் கோயிலுக்கு கொடுக்காததுதான் காரணம் என அறிகிறார்கள். அதனால் வீட்டில் வளர்க்கும் சேவலை கோயிலுக்கு பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து 
சேவல் காணாமல் போகிறது. அதன் பின் சேவலை பலி பலி கொடுத்தார்களா?  இலையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை.
இயக்குனர் விஜய் இப்படத்தின் மூலம் கடவுளின் பெயரால் பிராணிகளை வதைக்கும் மூடநம்பிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார். மனதை தொடும் அளவுக்கு படத்தை எடுத்த இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
by Swathi   on 28 Jun 2014  1 Comments
Tags: Saivam Movie Review   சைவம் விமர்சனம்   Saivam Thiraivimarsanam              
 தொடர்புடையவை-Related Articles
சைவம் - திரைவிமர்சனம் !! சைவம் - திரைவிமர்சனம் !!
கருத்துகள்
30-Jun-2014 03:53:04 சர்வோ ர ச வாசன் said : Report Abuse
திருமுருகன் நாதஸ்வரத்தில் காண்பிக்கும் யதார்த்தத்தை விட ஒரு படி கூட போய் மூட நம்பிக்கை உயிர் பலி ஒரு சேவலை மையமாக வைத்து பின்னி பிணைத்து சினிமா ரசிகர்களை கட்டி போட்டு விட்டார் டைரக்டர் விஜய். சிரிக்க சிந்திக்க வைக்கும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் .அசைவ பிரியர்களை கவரவும் கடைசியில் அம்மா சொன்ன கதைன்னு போட்டதை சைவ பிரியர்கள் ஒரு புன்முறுவலோடு ஏற்று கொள்வதை பார்க்க முடிந்தது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.