LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சேலம் மாவட்ட கலெக்டர் காலில் விழுந்து மனு கொடுத்த முதியவர்களால் பெரும் பரபரப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் முதியவர்கள் கலெக்டரின் காலில் விழுந்து மனுக்களை வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற  சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு கலெக்டர் ரோகிணி  தலைமை வகித்து, 388 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நிகழ்ச்சியில் ஆத்தூர் கோட்டாட்சியர்,  வட்டாட்சியர்,  காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர், வட்ட வழங்கல் துறை, மின்வாரியத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர்கள் பலர் மாவட்ட கலெக்டர் காலில் விழுந்து மனுக்களை அளித்தனர். 

சேலம் மாவட்டத்தில் வருவாய்துறையினர் முதல் வி.ஏ.ஓ வரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த முகாமில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பிரச்சனை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்தனர். 

by Mani Bharathi   on 26 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.