LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கோயில்கள் Print Friendly and PDF

சேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்)

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில் சேலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை. கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.

சித்தர் கோவிலில் கிரிவலம் நடப்பது இங்குதான். திருவண்ணமலைக்கு அடுத்தபடியாக இங்குதான் கிரிவலம். இங்கு பௌர்ணமி மாலை 7.30 அடிவார கோவிலில் தொடங்கி 19km சுற்றி அடுத்தநாள் காலை 5 மணிக்கு கிரிவலம் முடிவடைகிறது.

கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது.இத்திருக்கோயிலில் சித்ராபவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர்.மலை முழுவதும் இரும்புத்தாது (Magnetite, Grunerite & Quartz) மட்டுமே உள்ளது. அதனாலேயே இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது. ஆனால் இந்த மலையில் அரசாங்கத்தால் கனிமவள திட்டப்பணி 1சதவிகிதம் கூட நடத்த முடியவில்லை.

இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் .இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.அடிவார கோயிலுக்குள் பத்து தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமானவை நந்தி தீர்த்தம் மற்றும் காந்த தீர்த்தம் ,காந்த தீர்த்தத்தை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் உப்பு, மிளகு வாங்கிப் போடுகிறார்கள் இதில்.சமீபத்தில் உருவாக்கப்பட்ட "ஞானசற்குரு பால முருகன்" கோயில் உள்ளது.எங்கும் இல்லாத நாரதர் உருவ சிலை, சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் உருவ சிலைகள் உள்ளது. இது "அமாவாசை கோயில்” ஆகும்.

சித்தர்:

காலங்கி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக் கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு.
திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர்.இவர் இங்குள்ள மூலிகை உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பியது இந்த மலையில் தான். அதனாலேயே இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"என்று பெயர் பெற்றது. திருமூலரின் உத்தறவின்படி இங்கேயே இருந்து அருள்பாவிக்கிறார்.இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும். இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மந்திரம் சொல்லியே அணுகவேண்டும்.இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார்.
ஒன்பது பாஷாணகளில் இதுவும் ஒன்று.

பார்க்க வேண்டிய இடங்கள் :

அடிவாரக் கோயில்:

1.கணபதி, ஞானசற்குருபாலமுருகன் கோவில்
2.முனீஸ்வரர் ஆலயம்
3.சித்தேஸ்வரர் கோவில்
4.பத்து தீர்த்தங்கள் (பெரிய நந்தி கிணறு, ராகு கேது தீர்த்தம், காந்த தீர்த்தம் …)
5.காளி அம்மன் கோவில்
6.நவகிரகம் , நாகதேவதை கோவில், மடம்
மலைக்கோயில்:
7.சித்தி விநாயகர்
8.வேட்டைக்கார சாமி
9.அன்னதான குடில் (சிவ லிங்கம்)
10.காவல் ஆஞ்சநேயர்
11.பிள்ளையார் பாறை
12.காலங்கி பாதம்
13.நாகர் புற்று
14.மேல் சித்தர் கோவில் (18 சித்தர்கள்)
15.மேல்>கிழ்>பாலமலைசித்தர் நேர் கோட்டில்
16. கிணறு, இரட்டைலிங்கம் (சிவசக்தி)
17.ஐயப்பன் கோவில்
18.கன்னிமார் கோவில்
19.பெருமாள் கோவில்
20.புலித்தோல் பாறை
21.தியான மலை (சித்தர்கள் கூடும் பாறை)
22.ஆதி சிவன் பாறை (ஆத்மா லிங்கம்)
23.கரிய பெருமாள் கோவில்
24.77அடி ஆஞ்சநேயர்
25.நாகதேவி சிலை அரியானுர் வழி
26.சுயம்பு லிங்கம்
27.சுழுமுனை ஊத்து, சுழுமுனை குகை
28.அகஸ்தியர் குகை, காலங்கி குகை
29.மணல் ஊற்று / காளி கானல் / மூங்கில்வனம்
30.ரோம விருச்சம், சந்தன மரம்
31.மதிமயக்கி வனம்
32.சிற்றாறு, பொன்னி நதி !!!

Gkarthick BE salem,

by Swathi   on 26 Nov 2017  8 Comments
Tags: கஞ்சமலை   கஞ்சமலை சித்தர் கோவில்   சித்தர் கோவில்   சேலம் கோவில்கள்   Salem Kovilgal   Siddhar Kovil   Kanjamalai Siddhar Kovil  
 தொடர்புடையவை-Related Articles
சேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்) சேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்)
கருத்துகள்
05-Sep-2020 07:51:58 சுந்தரமூர்த்தி.மு said : Report Abuse
கஞ்சமலை சித்தர் கோவில் கட்டிய மன்னர் தாரமங்கலமத்தை ஆட்சி செய்த மன்னர் (பூவாணிய நாடு)கெட்டிமுதலி மன்னர் ஆவார். இதுப்பற்றி ஏன் கூறவில்லை. மேலும் சித்தர் கோவில் கல்வெட்டு தகவல்களைக் கிடைத்தால் நன்றாக இருக்கும். இது எனக்கு கிடைத்த வாய்மொழி தகவல் ஆகும். உங்கள் தகவல்களுக்கு நன்றி. உங்கள் பணிச் சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
 
07-Aug-2019 23:00:33 Praveen said : Report Abuse
Nice
 
09-Jun-2019 17:08:10 Harivishnu said : Report Abuse
Salem eelampillai siddhar kovil romba arumaiyana kovil.intha temple damage agitu varuthu so pls govt intha kovilku important kuduthu kovil ah Sari seiyanumnu ketukara
 
09-Jun-2019 17:05:15 Harivishnu said : Report Abuse
Ipa iruka ella palamai vaaintha kovilgal ellam damage agitu varuthu govt pls itha romba import kuduthu palamai vaaintha kovil silaigal ah save pannanum
 
04-Nov-2018 18:37:52 g தேவராஜ் said : Report Abuse
மதி மயக்கி வனம் என்றால் என்ன
 
12-Jun-2018 15:56:17 சிவா said : Report Abuse
நைஸ் இ அம ஆல்சோ salem
 
16-Mar-2018 14:12:29 BABU said : Report Abuse
nice
 
13-Mar-2018 09:26:20 ஸ்ரீ பாலா விஜய் said : Report Abuse
மிகவும் அருமையாக இருக்கிறது முதல் தடவையாக இங்கு பார்த்து வியந்தேன் அன்புடன் ஸ்ரீ பாலா விஜய் சிட்னி ஆஸ்திரேலியா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.