LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!

மாதம் ஆனால் மருத்துவத்துக்கே ஒரு கணிசமான தொகையை ஒதுக்கி வைக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இன்றைய பெரும்பாலான குடும்பங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

"நோய் நாடி நோய் முதல் நாடி" என்கிறது வள்ளுவம். நமது அனைத்து பாரம்பரிய வைத்திய முறைகளும் நோயினை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை வேரோடு பிடுங்கவே முயற்சிக்கின்றன.

நமது உடலானது பல நூறு கோடி செல்களால் ஆனது, பல உறுப்புகளைக் கொண்டது. உள்ளுறுப்புகளில் சிறு தோய்வு ஏற்பட்டால் அதை, நமக்கு உணர்த்தும் விதம் உபாதைகள் வருகிறது.

அதற்கு பெயர்தான் நோய், உடல் உறுப்புகள் திறன்பட வேலை செய்ய வேண்டும் என்றால், அதற்கு நூண்ணுட்டங்கள் அவசியம். இதை எங்கிருந்து பெறுவது என்கிறீர்களா...

நம் சமையலறையே போதும், ஆனால் எவ்வகை உணவு என்பதில் சிறிய கவனம் தேவை. அந்த வரிசையில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறுதானியங்களில் சிறப்பிற்குரிய தானியமாகக் கருதப்படுவது சாமை.

சர்க்கரை நோயாளிகளுக்கு சாமை அரிசி உணவு ஒரு நல்ல வர பிரசாதம். ஏனென்றால், நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

மற்ற தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால், நமது உடலுக்கு இரத்தச்சோகை வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது.

இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.

சாமை அரிசி உணவுகளைச் சாப்பிடும் போது நோய்களுக்கெல்லாம் மூலமாகக் கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.

தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.

வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.

எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.


 

சமையல் குறிப்புகள் :

சாமை கூட்டுச்சோறு செய்வது எப்படி? பார்க்க

சாமை மிளகு பெங்கல் செய்வது எப்படி? பார்க்க

சாமை கோழி பிரியாணி செய்வது எப்படி? பார்க்க

by Swathi   on 11 May 2015  3 Comments
Tags: ஆண்மை குறைவு   சர்க்கரை நோய்   மலச்சிக்கல்   சாமை அரிசி   நீரிழிவு நோய்   Samai Arisi   Samai Rice  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா
சாமையின் பயன்கள் சாமையின் பயன்கள்
குழந்தையின்மைக்கு நாட்டுப்பசுவின் பாலில் இருக்கு தீர்வு!! குழந்தையின்மைக்கு நாட்டுப்பசுவின் பாலில் இருக்கு தீர்வு!!
பீர்க்கங்காய் கடைசல் பீர்க்கங்காய் கடைசல்
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
ஆண்மை குறைபாடு நீங்க !! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! ஆண்மை குறைபாடு நீங்க !! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மலச்சிக்கல் – எளிய தீர்வுகள் – 10 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மலச்சிக்கல் – எளிய தீர்வுகள் – 10
கருத்துகள்
07-Jun-2019 10:15:33 Yogananth said : Report Abuse
Saamai rice oru vayadhu kulandhaikku kodukkalaama ??
 
27-Jan-2017 23:20:41 ஜெகன் said : Report Abuse
வெரி குட் சமைத்து சாப்பிட்டோம் நன்றாக இருந்தது இன்னும் பகிரவும்
 
11-Dec-2016 06:23:13 shafe said : Report Abuse
சூப்பர் நன்றாக இருந்தது ,,மேலுமறிய ஆர்வமாக உள்ளது ,,தயவு சாய்த்து அனுப்பிவைக்கவும் ,,,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.