|
|||||
புதுப்படங்களில் நடிக்க மாட்டேன் : சமந்தா ஸ்ட்ரைக் !! |
|||||
இனி புதுப்படங்களில் நடிக்காமல், ஸ்ட்ரைக் செய்யபோவதாக நடிகை சமந்தா கூறியுள்ளார். ஆனால் இந்த ஸ்ட்ரைக் நல்ல படங்களில் சிறந்த வேடங்கள் கிடைக்கும் வரை தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சமந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ஸ்டிரைக் என குறிப்பிட்டுள்ள அவர், இனி எந்த புதுப்படங்களிலும் தான் நடிக்கப் போவதில்லை எனவும். தனக்கு பிடித்தமான, சிறந்த கதாபாத்திரம் கொண்ட படங்கள் கிடைக்கும் வரை இந்த முடிவில் உறுதியாக இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தான் ஏற்கெனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடிப்பேன் என்றும் அறிவித்துள்ளார்.
சமந்தாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
எனது முழு திரைமையையும் சரியாக வெளிப்படுத்தாவிட்டால், ரசிகர்கள் என்னை ஒதுக்கிவிடுவார்கள். அதனால்தான் இப்படி முடிவெடுத்திருக்கிறேன் என காரணம் கூறுகிறார் சமந்தா... |
|||||
by Swathi on 08 Oct 2013 0 Comments | |||||
Tags: சமந்தா ஸ்ட்ரைக் புது படங்கள் Samantha Strike | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|