LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

சம்மதம் தா கற்பகத்தருவே

பூத்தமுகத்    தாமரையில்    பூசும்    மதியெழிலில்

கோத்த    அனிச்சயிதழ்ப்    புன்னகையில் – மாத்தமிழே

நேஞ்சம்    நிறைந்தாய்    இரவெல்லாம்    உன்நினைவில்

தஞ்சம்    புகுந்தேன்    தவித்து !


மொட்டவிழ்ந்த    பூமரமே    மொய்க்கும்    விழிவண்டைக்

கட்டவிழா    கொங்கைக்குள்    கட்டிவைத்த – கற்பகமே

பட்டத்    தழகேஉன்    பார்வைக்    கடிபணிந்தேன்

எட்டத்தில்    கொல்லுவதோ    நின்று !


பாரென்னும்    பூம்பருவம்    பக்கம்வா    வென்னுமிதழ்

தேரென்னும்    மேனிதழு    வென்றுரைக்கச் – சீரென்னும்

நாணம்    இடையில்    தலைகவிழ்க்க    வேகின்றேன்

காமன்    கணைமலரால்    காண் !


கச்சை    நகில்மூடிக்    காணும்    விழியீர்த்தே

இச்சை    பெருக    இடையசைத்தாய் – நச்சிமனம்

அன்ன    நடைபின்னே    அன்பு    குடைபிடித்தேன்

என்னைக்   குழைவாகத்    தைத்து !


கண்ணின்    இமைக்குள்ளே    காதற்பூ    உன்முகத்தை

தண்ணீருள்    மீனாகக்    காத்ததனால் – மண்ணில்

குருடாய்    நடக்கின்றேன்    துள்ளும்பூ     மானே

திறந்தால்நீ    போயிடுவாய்    என்று !


கண்திறந்த    போதே    வரும்கனவு    நாயகியே

என்னிதய   ஏக்கத்தை    எண்ணிப்பார் – உன்மீது

வீசுமிளங்    காற்றுவந்து    பட்டாலும்    என்மேனி

தீசுமந்து    போவதுதான்    ஏன் !


சந்தனத்    தேன்கலசம்    சாயாத    கோபுரத்தை

முந்தானை    மேகத்தால்    மூடிவரும் – சுந்தரியே

ஆலய    வாசலில்    அன்பிற்காய்    ஏங்கும்என்

கோலத்தில்    நல்லருளைக்    கூட்டு !


நாதம்    இயற்றும்உன்    நாமொழி    சொல்கேட்டால்

ஓதமுறு    தென்றலுக்கே    போதைவரும் – சீத

நிலவொளியும்    சொக்கிவிழும் ;  நித்திலமே    காதல்

நிலவுமொழி    நான்வாழச்    செப்பு !


காலைக்    கதிர்செம்மை    கண்ணில்    எடுத்துன்றன்

மாலைப்    பிறைநுதலில்    பொட்டிடுவேன் – கோதையுன்

கார்குழலின்    மீதினிலே    நட்சத்    திரப்பூவை

பார்வியக்க    வைப்பேன்    பறித்து !


வீட்டருகில்    வந்தபோது    வாயிற்    படிநின்றே

பாட்டிதழில்    நீசொன்ன    பாகுமொழி – கேட்டசெவி

இன்பத்தை    வேற்றொலிகள்    ஈர்த்திடாமல்    கைபொத்தி

நின்றேன்    நினைவில்    நினைத்து !


பாதம்    பெயர்க்கும்உன்    பாங்குதனைப்    பார்த்துவிட்டால்

வேத    முனிவருக்கும்    ஆசைவரும் – காதல்

ரதியாளைக்    காமனுமே    கைவிடுவான் ;   வீட்டுப்

படியிறங்கி    வாராமற்   பார் !


செந்தூர    மாலையிலே    சித்திரமே   நீநடந்தால்

வெந்துருகி    மாலும்    கணைதொடுப்பான் – இந்திரையின்

கண்சிவப்பில்    சாம்பலாவோம் ;   கண்மணியே    நாமிணைய

என்பார்வைக்    குள்ளே   இரு !


பார்வையிலே    மின்சாரம்    பாய்ச்சுகின்ற    பூச்சரமே

ஊர்சனங்கள்    மெச்சுகின்ற    அச்சாரம் – தார்சரமாய்

நான்சூட்டித்    தந்திடுவேன்    நாள்மலரே    தாகத்தைத்

தேன்ஊற்றித்    தீர்க்கவா    இன்று !


தங்கமே    உன்னைவர    தட்சணை    வாங்காமல்

மங்கலநாண்    இட்டு    மகிழ்விப்பேன் – இங்குலவும்

எம்மதம்     ஆனாலும்    என்னுடலின்    பாதிநீயே

சம்மதம்    உன்நாவால்    தா !


விண்மீன்கள்    புள்ளியிடும்    வானவில்லோ    கோலமிடும்

வெண்ணிலவும்    ஆதவனும்    தோரண – கற்பகங்கீழ்

குத்து    விளக்காய்    ஒளிகூட்டும் ;   என்னவளாய்

இத்தரையில்    நீயாகும்    போது !

 

பாவலர்  கருமலைத்தமிழாழன்

by Swathi   on 01 Nov 2014  0 Comments
Tags: Sammatham   Karpaga Tharuve   சம்மதம்   கற்பகத்தருவே   கருமலைத்தமிழாழன்        
 தொடர்புடையவை-Related Articles
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
ஊனமாகி  வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன் ஊனமாகி வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன்
மகளின்  மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
உண்மைத் தமிழனாய் உயர்வானோ! உண்மைத் தமிழனாய் உயர்வானோ!
சம்மதம் தா கற்பகத்தருவே சம்மதம் தா கற்பகத்தருவே
தமிழ்   ஒரு   பூக்காடு தமிழ் ஒரு பூக்காடு
சிறப்பாக   நடிக்கின்ற   நடிக   ரானோம் ! சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.