LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையை சமக்ரசிக்ஷா கணக்கெடுக்கிறது!

தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க சமக்ரசிக்ஷா நடவடிக்கை எடுத்து உள்ளது. 

தமிழகத்தில் இதுவரை இயங்கி வந்த அனைவருக்கும் கல்வி இயக்கம், மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகிய இரு மத்திய அரசின் திட்டங்களை ஒன்றாக இணைத்து தற்போது சமக்ரசிக்ஷா என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டில் தொடக்க கல்விக்காக பராமரிப்பு மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புவாரியாக எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டது. 

இதன்பேரில் தமிழகத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இயங்கி வரும் மாநில திட்ட இயக்குநர் அளிக்கும் புள்ளி விவரங்களை பெற்றுக் கொண்டு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கி வந்தது. நடப்பு ஆண்டுக்கான பராமரிப்பு மானியம் கடந்த செப்டம்பர் மாதம் கிடைத்தது. 

இதற்காக மத்திய அரசுக்கு, சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய பட்டியலின்படி ஒரு வகுப்பில் 15 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்து 1 முதல் 14 வயதுள்ள மாணவர்கள் கொண்ட 3003 பள்ளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. 

இதையடுத்து, அடுத்த கல்வி ஆண்டுக்கான பராமரிப்பு நிதி பெறுவதற்கான கணக்கெடுப்பை மாநில திட்ட இயக்குநர் நடத்தினார். அதில், தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவது தெரிய வந்துள்ளது. 

சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பணியில் உள்ளனர். கல்வியில் பின்தங்கிய  கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவது தெரிய வந்துள்ளது.

by Mani Bharathi   on 01 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.