LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இரண்டு நாட்கள் சங்க இலக்கியப் பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது

தொழிலாளர் தினத்தை ஒட்டிய பெருவார இறுதியில் (Labor Day Long weekend), ஆகஸ்டு 30, 31 ஆகிய இரு நாட்கள் விர்சீனியாவிலுள்ள மெக்லீன் நகரத்தில் (McLean, Virginia) நடைபெற்ற சங்க இலக்கியப் பயிலரங்கத்தில்/பட்டறையில் (Workshop on Sangam Literature) முப்பதுக்கும் மேற்பட்டோருடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


இதில் கலந்துகொண்ட திரு.துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன் கீழ்கண்ட அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 


மொழியின் மேன்மையையும், அன்றைய தமிழ் மன்னர்கள், புலவர்கள் மட்டுமல்லாது, சராசரி மக்களின் வாழ்க்கை, அவர்களின் காதல், வீரம், ஈகை, அவர்கள் வாழ்ந்த நிலங்கள் என பலவற்றையும் அறியமுடிந்த்து. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த பிற சமூக்தினர் வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் என்று தத்துவங்களாகக் கூறியவைகளை, கூறிக்கொண்டிருப்பவைகளை தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமது வாழ்வியலாகக் கொண்டிருந்தார்கள் என்றும், சாதி மதங்களற்ற, ஆண் பெண் வேறுபாடற்ற, சமத்துவம் நிறைந்த ஒரு உன்னத வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றும் அறியும் பொழுது, நமது இன்றைய முற்றிலும் முறன்பட்ட வாழ்வியலை நினைக்காமல் இருக்க முடியவில்லை.


திருமதி. வைதேகி ஹெபர்ட் அவர்கள் எளிமையான முறையில் பல பாடல்களைப் பொருளுடன் படித்துக்காட்டி, இப்பட்டறையை திறம்பட நடத்தி தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் சஙக இலக்கியங்களைப் படித்து, புரிந்து, அதன் இன்பத்தினை சுவைக்கலாம் என்ற நிலையை வந்திருந்த அனைவருக்கும் ஏற்படுத்தினார்.


தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்து, தற்போது ஹவாயில் வாழும் இவர், தானே சங்க இலக்கியங்களைப் படித்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு ஆங்கிலத்தில் உரை எழுதி, 11 நூல்களாக வெளியிட்டுள்ளார். எந்த ஒரு வியாபார நோக்கமுமின்றி, நம் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை, நம் சந்ததியினரிடமும், உலகின் பிற மக்களிடமும் எடுத்துச் செல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர்களின் எழுத்துக்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றிகள் பல. நாம் அதைப் படித்தும், நம் குழந்தைகளைப் படிக்க வைத்தும், பிறரிடம் பரப்பியும் நம்மால் இயன்ற சிறு தொண்டினை நம் மொழிக்குச் செய்வோம்.


http://sangamtranslationsbyvaidehi.com/

 

இந்தப் பயிலரங்கத்தை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (FeTNA), வாசிங்க்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தது.



by Swathi   on 01 Sep 2014  0 Comments
Tags: Sangam Literature   இலக்கியப் பயிலரங்கம்   வைதேகி ஹெபர்ட்              
 தொடர்புடையவை-Related Articles
இரண்டு நாட்கள் சங்க இலக்கியப் பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது இரண்டு நாட்கள் சங்க இலக்கியப் பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.