LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி - மிதுன ராசி பலன்கள் (2017 - 2020)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

மிருக சீரிஷம் 3-4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம், 1,2,3ம் பாதம் 


(உங்கள் ரசி எது என்று தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தாக கா, கி, கு, கூ, க, ங, ச, சே, கோ, கை, ஹை மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட பலன்கள் பொருந்தும்)

வான மண்டலத்தில் 3வது ராசியாக வலம் வரும் மிதுனராசியில் பிறந்த உங்கள் ராசி நாதன் புதன் ஆவார். இவர் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும் அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால் உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள். பலருடைய சவால்களையும் பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாராகவே இருந்து வரும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதும் இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக இருந்தது பலன் தருவார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் இல்லாமல் இல்லை. அதே சமயம் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் அதனுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் முதல் என்று சொன்னால் அது மிகையாகாது.

சனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர் குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். உங்கள் ராசிக்கு சனி 8ம் அதிபதி என்றாலும் அவரே 7ம் அதிபதியாக இருந்து அவர் 7ல் பலம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் சிலசமயம் வந்து சேரும்.

எனென்றால் 8ம் இடம் என்பது கஷ்டத்தை பற்றி சொன்னாலும் அதிர்ஷ்டத்திற்கு 9ம் இடமாகும். இரண்டுக்கும் அவரே அதிபதியாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலங்களில் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். அந்த பணங்கள் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிய நேரிடும்.

தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளல் வேண்டும். வேலையாட்களால் நன்மையும். அதே சமயம் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்சனையும் வந்து சேரும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. விரதங்களை தவிர்ப்பது நன்று. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் குறிப்பாக காதல் திருமணங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகள் இழுபறியாகவே இருந்தாலும் இறுதியில் வெற்றி கிட்ட வாய்ப்பு அதிகம். அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன் மற்றும் வட்டி கட்ட வேண்டி வரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுயதொழில் கூட்டுத் தொழில் ஓரளவு சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை.

ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்யோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். வேலையில் அதிக கவனம் தேவை. சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் வந்து சேரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.


வேலை அல்லது உத்யோகம் (JOB)

உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியாக செவ்வாய் வருவதால் அடிக்கடி வேலை மாற வேண்டியது வந்தாலும் வேலை மாறாமல் இருப்பது சிறப்பானது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் பார்க்கும் வேலையில் உங்களுடைய பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். அடிக்கடி லீவு போட வேண்டிய சூழ்நிலை வரும். அதை தவிர்த்தல் வேண்டும். கிடைத்த வேலையில் திருப்திகரமாக செயல்பட்டு உங்களுடைய திறமையையும் உழைப்பையும் அதிகரித்தல் வேண்டும். எந்த வேலையும் காலதாமதபடுத்தாமல் உடனே செய்தல் வேண்டும். வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும். உயரதிகாரிகள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு வந்து சேரும்.


தொழில் (BUSINESS, வியாபாரம் (TRADE)

பார்க்கும் தொழிலில் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டாலும் தொழில் ஒரளவு சுமாராக இருந்து வரும். புதிய தொழில் மற்றும் கூட்டுத் தொழில் இருக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும். தொழில்களில் தேவைக்கேற்ப முதலீடு செய்வது போதுமானது. சிறு தொழில்களில் ஒரளவு லாபம் இருந்து வரும். உற்பத்தி சார்ந்த துறைகளும் லாபகரமாக இருக்கும். சாலையோர வியாபாரம் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை முதலீட்டில் அதிக கவனம் தேவை.

ஏற்றுமதி இறக்குமதி சுமாராக இருந்து வரும். பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. கனரக தொழில் உற்பத்தி, விற்பனை, பழுதுபார்ப்பது லாபகரமாக இருந்து வரும். இரும்பு, எஃகு, சிமிண்ட், நிலக்கரி, பெட்ரோல், கிரானைட் போன்ற கனிமவளத் தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு துறைகளில் லாபம் குறைந்தும், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைகள் ஏற்றம் அதிகரித்தும் காணப்படும். உணவு உடை, ஆபரணத் தொழில்கள் லாபகரமாகவும், நீர், கப்பல், மீன்பிடித் தொழில்கள் சாதகமாக இருந்து வரும்.

நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாகவும், சுற்றுலா, அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி விற்பனை அதிகரித்தும் காணப்படும், பத்திரிக்கை தொலைக்காட்சி, திரைப்பட தயாரிப்பு விற்பனை விநியோகம் சற்று லாபம் குறைந்து காணப்படும். மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் சாதகமாக இருந்து வரும். ஆடம்பரம் பொருட்கள், பிளாஸ்டிக், ரசாயன உற்பத்தி ஆரம்பத்தில் சற்று லாபம் குறைந்து விட்டாலும் பின்னாளில் நல்ல லாபகரமாக இருந்து வரும்.


விவசாயம்

ஆரம்பத்தில் விவசாயம் சற்று சுமாராக இருந்தாலும், பின்னாளில் ஓரளவு லாபகரமாக அமையும். பழவகைகள், காய்கறிகள் சற்று லாபம் குறைந்து காணப்படும். அதே சமயம் பூக்கள் லாபகரமாக இருக்கும். கடன் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு பணப்பயிர்களால் லாபம் ஏற்படும். கடலை, கம்பு, வாழை, தென்னை, மஞ்சள் ஆகியவற்றில் சற்று லாபம் கிட்டும். நெல், கோதுமை, ஏலம், மிளகு, கிராம்பு போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும்.


அரசியல்

அரசியல் வாழ்வில் அதிக கவனம் தேவை. மேலிடத்தில் தேவையில்லாத பிரச்சனைகள், தொண்டர்களிடம் நல்ல பெயர் எடுக்காமல் போய்விட வாய்ப்புகள் அதிகம். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பர். பணவரத்து அதிகமாக இருக்கும் அதே சமயம் வழக்குகளின் செயல்கள் பயமுறித்திக் கொண்டே இருக்கும். குரு விருச்சகத்திற்கு வரும் காலங்களில் வசதிகள் அதிகரித்தும் எண்ணங்கள் ஈடேறும். பாடுபட்டதற்கேற்ப பலன்களும் உண்டாகும்.


கலை

கவனமும், காலம் தவறாத உழைப்பும் உங்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தி தரும். இசை, நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பம், சினிமா, சின்னதிரை, ஜோதிடம், சிற்ப துறைகள், நல்ல லாபகரமாக அமையும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படவும் அதனால் நன்மையும் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். உழைப்புக் கேற்ற வருமானங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு விருதுகளும், பட்டங்களும் தேடி வரும்.


மாணவர்கள் :

உயர்கல்வி பயில வாய்ப்புகள் அமைந்தாலும் நிறைய தடைகளை தாண்ட வேண்டியது வரும். படிப்பில் அதிகக் கவனம் தேவை. கல்விக் கடன்கள் எளிதில் கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் அமைய போராட வேண்டி வரும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. எப்பொழுதும் சுறு சுறுப்பாக இருத்தல் வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக சென்று வருதல் வேண்டும்.


பெண்களுக்கு

உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது காதல் வயப்பட ஒரு சிலரைச் செய்யும். காதல் கனிந்து திருமணத்தில் முடிய கடுமையாக போராட வேண்டி வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து வருவீர்கள். நிறைய படிக்க, எழுத, புதிய விஷயங்களை கற்க அதிக நேரம் ஒதுக்க சந்தர்ப்பம் அமையும். விரும்பியதை கற்க சந்தர்ப்பம் அமையும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் மற்றும் குழந்தை பாக்யம் அமைய வாய்ப்பு அமையும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். அடிக்கடி பயணங்கள் அமையும். பயணத்தினால் நன்மையும் தீமையும். கலந்தே காணப்படும். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். வேலையில் திருப்தியற்ற தன்மையே அமையும். சக ஊழியர்களினால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் வந்து சேரும். எல்லோரிடமும் எச்சரிக்கையாகப் பழகுதல் வேண்டும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற பேச்சுகளை தவிர்த்தல் நலம். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவி உலவிக் கொண்டிருக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். இரண்டாவது திருமணம் நடைபெறுவதிலும் ஒரு சிலருக்கு தடை ஏற்பட்ட பின் விலகும். ஆடை, ஆபரணங்கள் விரும்பியபடி அமையும். பணப்புழக்கம் எப்பொழுதும் போல் தாராளமாக இருந்து வரும். மனதை எப்பொழுதும் ஆன்மீக விஷயங்களில் செலுத்துவது நன்மை பயக்கும். சளித் தொல்லைகள் இல்லாமல் உடம்பை பாதுகாத்தல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்.


உடல் ஆரோக்யம்

தலை, கண், அடிவயிறு, ஜீரண உறுப்புகள், கால் போன்ற பகுதிகளில் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உடல் உள் உறுப்புகளில் தேவையற்ற உபாதைகள் ஏற்படும். கவனம் தேவை. அறுவை சிகிச்சைக்குரிய காலம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. யோகா, தியானம் போன்றவற்றில் மனதை செலுத்துதல் வேண்டும்.


சனி பகவான் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்

(மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம்

சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9ம் இடங்களில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் செய்திகள் சற்று கால தாமதமாக வந்து சேரும். எடுக்கும் முயற்சிகள் கடுமையான போராட்டத்திற்குப் பின் நடந்தேறும். பேச்சில் எச்சரிக்கை தேவை. பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு இராது. கொடுக்கல் வாங்கலில் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் நடந்தேறும். அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரும் அலைச்சல்கள் கூடும். வேலையில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். தேவை இல்லாத விஷயங்களைப் பேசுவதோ எழுதுவதோ கூடாது. அடிக்கடி ஆலய தரிசனம் செய்து வருதல் வேண்டும். தெய்வ அனுகூலத்தை கூட்டுதல் வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்குதல் கூடாது. தாய், பாட்டி, உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வேலையில் அதிகக் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். குழந்தைகளால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். சுய தொழில்கள், முதலீட்டில் கவனம் தேவை. தேவையற்ற தொழில் முதலீடு செய்தல் கூடாது.


பூராடம்

சனிபகவான் பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஓரளவு நிறைந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். விருந்து கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். காதல் விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும்.

அடிக்கடி வேலை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். வேலையில் லீவு போட வேண்டிய சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு வேலையை விட்டுவிடக் கூடாது. கடன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இதரச் செலவுகள் சுப விரயங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும். நீண்ட காலமாக இருந்த நோயின் தன்மை குறைந்து காணப்படும். பணம் பொருள் கண் முன்னாலே பறிபோனது போல் இருக்கும். பொருட்கள் திருடு போக வாய்ப்பு அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும். உல்லாச சல்லாபங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். புதிய உறவுகள் தாமாகவே வந்தமையும். புதிய நட்பு வட்டாரம் அதிகரிக்கும்.


உத்தராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி நிச்சயம். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் வெற்றிச் செய்தியாக வந்து சேரும். புகழ் அந்தஸ்து சிறப்பு அமையும். பணப்புழக்கங்கள் தாரளமாக இருந்து வரும். போக்கு வரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. தாயரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். அதே சமயம் உங்களைப் பற்றிய தேவையில்லாத வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும். சகோதர சகோதரிகளின் நட்பும் அன்பும் அதிகரிக்கும், நெருங்கிய உறவினர்களால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு அமையும். வேலையின் நிமித்தமாக இடம், மனை மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. கூடியவரை அமைதியாக இருந்து வருவதே சிறப்பானது.


கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அதே சமயத்தில் எதிர்பார்த்த பொருள்வரவு வருவதில் சற்று காலதாமதம் ஏற்படும். தாயரால் எதிர்பாராத உதவி கிட்டும். உடன் பிறந்தவர்களால் தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும்.. எப்பொழுதும் சிந்தனை வயப்பட்டு கொண்டிருப்பீர்கள். உயர்கல்வி பயில சரியான சந்தப்பமிது. ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். குழந்தைகளை விட்டுபிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். விருந்து கேளிக்கைகளில் சற்று நாட்டம் குறைந்து காண்பாடும். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிகக்வனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் உடலை பேணிக் காத்தல் வேண்டும். விரதத்தை தவிர்த்தல் நலம், நேரத்திற்கு உணவும் மருந்தும் உட்கொள்ளுதல் வேண்டும். வேலையில் அதிக கவனம் தேவை. எப்பொழுதும் டென்ஷனாக இருக்க வேண்டியது வரும். மனைதையும் உடலையும் இக்காலங்களில் சற்று ரிலாஸாக வைத்துக் கொள்ளல் வேண்டும். 


மிதுனம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லவராவார். இதுவரை ஏற்பட்டு வந்த தடங்கள் நிவர்த்தியாகி எதிர்பார்த்த பலன்கள் இனிதே நடந்தேறும். அதே சமயம் வலுவான போராட்டத்திற்கு பின் வெற்றி நிச்சயமாகும். முயற்சிகள் நற்பலன் கொடுக்கும். பெயர், புகழ், சம்பாத்தியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். சகோதர சகோதரர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது. கொடுக்கல் வாங்கல் சரளமாக இருந்து வரும். வண்டி வாகனங்கள் வீடு வாங்க வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு வேலையை விடக் கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. பிரயாணங்களில் அதிக அளவு ஈடுபாடும் விருப்பமும் அதிகரிக்கும்.


மிதுனராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

எதிர்பார்த்த எதிர்பாரத செய்திகள் சாதகமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள், மன உலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்கள் நண்பர்களாவர். நண்பர்கள் எதிரிகளாவர். புது முயற்சியுடன், புது எழுச்சியுடன் செயல்படுவீர்கள் எடுத்த காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகள் ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு எடுத்த காரியத்தை வெற்றிப் பெற செய்வீர்கள். தாயரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.

உடன் பிறந்தவர்களால் நன்மையும் அதே சமயம் மன உளைச்சல்களும் ஏற்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தாய்மாமன்களால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. வேலையில் மாற்றம் அமையும் புதிய தொழில்களால் ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டு. பொருளாதாரம் வலுவாக இருக்கும். நிலம், வீடு இவற்றில் முதலீடு அதிகரிக்கும். சுய தொழில்கள் நல்ல லாபகரமாக இருக்கும். வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல வாய்ப்புகள் அமையும். அதனால் நன்மையும் ஏற்படும். தந்தையால் எதிர்பாராத நற்பலன்கள் கூடும்.


மிதுனராசி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இந்நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்பாராத தன வரவும், பொருள் வரவும் ஏற்படும். உயர்கல்வி பயில வாய்ப்பும் அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும் உடன் பிறந்தவர்களால் நன்மையேற்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. விபத்துகள், ஆப்ரேஷன் செய்ய சந்தர்ப்பம் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், கடன்கள் அதிகரித்து, வட்டி கட்ட வேண்டி வரும். வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். வேலையில் மாற்றம் ஏற்படும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற பாடுபட வேண்டி வரும். வேலையில் முன்னேற்றமும் இடமாற்றமும் ஏற்படும் தந்தையார் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பாடு விலகும். உங்களை பற்றிய வீண் வதந்திகள் பரவ வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

 

by Swathi   on 25 Nov 2016  12 Comments
Tags: Sani Peyarchi Palangal   Mithuna Rasi Palangal   சனிப்பெயர்ச்சி பலன்கள்   மிதுன ராசி பலன்கள்   மிதுனம்        
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : அபிராமி சேகர் 2017-2018 மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கும்ப ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கும்ப ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020)
கருத்துகள்
17-Feb-2020 10:39:21 தேவி .S said : Report Abuse
கரண்டலி நா ரொம்ப மன குழப்பத்துத்தடன் இருக்கிறேன். சரியான முடிவு எடுக்க முடியவில்லை . என்னால இப்போ யாரையும் நம்பமுடியாத சூழ்நிலையை யிருக்கிறான் . இப்போ அஷ்டம சனி நடக்கிறது .திருமண வாழ்க்கை எனக்கு பிடத்தவருடன் நடக்குமா ? ?21 -01 -1996 அப்போது பிறதென் .பணிபுரியும் job மூலம் திருப்பதி யில்லை .
 
21-Jul-2019 18:10:10 ஸ்டீபன் said : Report Abuse
என்னுடைய ராசிக்கு இந்த வருடம் திருமணம் நடக்குமா
 
11-Jul-2019 15:44:21 காளிதாஸ் said : Report Abuse
என்னுடைய ராசி மிதுனம் D O B. 10.07.1991 நடசத்திரம் மிருகசீரஷம் நடப்பு ஆண்டில் சனிபெயற்சி எப்படி இருக்கிறது சொல்லுங்க சார்
 
09-Apr-2019 12:25:54 குணசேகரன் said : Report Abuse
ஏனது திருமணம் வாழ்க்கை ஏப்படி இருக்கும். ஏன் உடைய ஆயூள் ஏப்படி இருக்கும். தயவு செய்து செல்லுங்கள்.
 
22-Sep-2018 12:11:04 v. சங்கர் கணேஷ் said : Report Abuse
Name v. sankarganesh date of birth 10. 06. 1986 rasi methunam nachatram திருவாதிரை palan லக்கனம் மீனம் மை ஜாதகம் கொஸ்டின் now 1.ஹொவ் டு மீ சோப் 2.Own பிசினஸ் சரி யா தவற 3. ஹொவ் டு மை ஜாப் 4. ஹொவ் டு மை லைப் 5. ஹொவ் டு மை ஹெஅழ்த் கண்டிஷன் 6. மை பிசினஸ் கிரேடெட் கம் ஓர் not கம் 7. ஹொவ் டு மை லைப் பார்ட்னர் 8. மை பிசினஸ் எனி காம்பெடிஷன் ஐ face இட் or நோட் 9. மை லேண்ட் or ஹவுஸ் I'ம் பியிங் ஓர் நோட் 10. ஐ புர்ச்சஸ் எனி வெஹிகிள் கார் வான் ஆட்டோ 11. Intha month குரு palan what 12. மை IsTam கோட் who 14. Monday வ்திச் god ஐ Pray
 
21-Dec-2017 13:48:15 கலையரசி கார்த்திக் said : Report Abuse
ஒரே ராசி நட்சத்திரம் வேறு ,இருவருக்கும் கண்டக சனி என்பதால் ஒரே வீட்டில் இருக்கலாமா ?தயவு செய்யுது கூறவும்.மிதுனம் ராசி திருவாதிரை மற்றும் புனர்பூசம் நட்சத்திரம்..எனக்கு மகர ராசி அவிட்டம் natchathiram குடும்ப ஒற்றுமை ஏற்பட என செய்ய வேண்டும்
 
15-Dec-2017 06:50:45 அர்த்தனாரி said : Report Abuse
கடன் வாங்கி கொடுத்த பணம் திரும்ப பெற என்ன வழி .மன குழப்பம் நிறைய உள்ளது. தீர்வு கூறுங்கள்.
 
15-Dec-2017 06:50:21 அர்த்தனாரி said : Report Abuse
கடன் வாங்கி கொடுத்த பணம் திரும்ப பெற என்ன வழி .மன குழப்பம் நிறைய உள்ளது. தீர்வு கூறுங்கள்.
 
15-Dec-2017 06:48:59 அர்த்தனாரி said : Report Abuse
கடன் வாங்கி கொடுத்த பணம் திரும்ப பெற என்ன வழி .மன குழப்பம் நிறைய உள்ளது. தீர்வு கூறுங்கள்.
 
11-Dec-2017 06:22:01 சுகன்யா said : Report Abuse
மிக்க நன்றி
 
28-Nov-2017 14:33:08 பிரியா said : Report Abuse
சார் ஐ அம் really ஹாப்பி மிதுன ராசி நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் .ப்ளீஸ் சொல்லங்க ... தந்கயூ சார் ...
 
15-Dec-2016 22:10:19 குணேஸ்வரி said : Report Abuse
என் ராசி சனி பயிற்சி அன்று எப்படி இருக்கே, நன் ஏப்ரல் 18 / 04 /1980 பிறந்தேன் ......என் கணவர் 11 /03 /1975 , nandri
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.