LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

சருகுகளே தடம் பதித்து செல்லுங்கள்

சருகுகளே தடம் பதித்து செல்லுங்கள் உங்கள்
தடங்களின் வழியே
எங்கள் வாழ்க்கை தொடரட்டும்
உங்களின் நீண்ட பசுமையான நினைவுகளில்
உலகம் இளைப்பாறியதை
உங்களின் தடங்களில் விதைத்து செல்லுங்கள்
காற்றோடு செல்லும் முன்
காசினியின் மணல் வெளியில் புரண்டு பறந்தாலும்
குப்பை மேடுகளில் புதைந்து போனாலும்
ஒப்பிலா உரமாகி
அடுத்த தலைமுறைக்கு வலுவூட்டட்டும்
நிறம் மாறி பழுத்து போனாலும்
மரம் விட்டு தரைக்கு வந்தாலும்
உறவுகளோடு உறவாடிய அந்த
சிறப்புகளை நினைவு கூறட்டும்
உலகப்பந்தின் மேலாடையாய்
உவகை உலா வந்ததும்
உங்களின் தடங்களில் காணப்படட்டும்
நாட்களால் வயதால் மூத்த சருகுகளே
நாங்களும் உ திர்வோம் சருகுகளாவோம்
சருகாகி உதிரும் முன்
சரித்திரம் படைக்க
உங்கள் தடங்கள்வழிகாட்டி உதவட்டும்
சருகுகளே தடம் பதித்து செல்லுங்கள்

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
காதலுடன் பேசுகிறேன் காதலுடன் பேசுகிறேன்
உன் தாலி........! உன் தாலி........!
எல்லாம் எங்களுக்காக எல்லாம் எங்களுக்காக
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.