LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

சதுரங்க வேட்டை - திரை விமர்சனம் !!

இயக்கம் : எச் . வினோத்


தயாரிப்பு : மனோபாலா


நடிப்பு : நட்ராஜ், இஷா நாயர்


இசை : சீன் ரோல்டன்


ஒளிப்பதிவு : வெங்கடேஷ்


எழுத்து : எச் . வினோத்


இயக்குனர் மனோ பாலா முதன் முதலாக சொந்தமாக தயாரித்துள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தில் யதார்த்தமாக நடித்துள்ளார் கதாநாயகன் நட்ராஜ். இவருக்கு ஜோடியாக இஷா நாயர் நடித்துள்ளார். 


சரி வாங்க கதைக்குள் செல்லலாம்..


கதாநாயகன் நட்ராஜ் மாதம் பல லட்சங்களை சம்பாதிக்கும் செட்டியாரருக்கு மேலும் பணம் சம்பாதிக்க ஆசையைக்காட்டி அவரிடமிருந்து பல லட்ச்சங்களை கொல்லையடிக்கிறார். அதன் பிறகு நடராஜ் கொல்லை அடித்த பணத்தை வைத்து ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அதன் மூலம் மக்களிடம் பொய்யான பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கிறார். 

 

அப்போது அங்கு வேலை கேட்டு வரும் கதாநாயகி பானுவை வேலைக்கு சேர்க்கிறார் கதாநாயகன். இவரை வைத்து அந்த பொருட்களை எல்லாம் சாதுர்யமாக பேசி விற்கிறார். பின்பு அந்நிறுவனம் போலி என மக்களுக்கு தெரியவர நிறுவனத்தை சுற்றி வளைக்கிறார்கள். பணத்தோடு மறைமுகமாகிறது நட்ராஜ் கும்பல்.


பின்பு போலீசில் சிக்குகிறார் நட்ராஜ், அப்போது தான் தெரிகிறது அவன் மேல் இருக்கும் பல வழக்குகள் எண்ணிக்கையில் அடங்காதவை. சும்மா விடுவாங்களா போலீஸ் வெளுத்து வாங்குகிறது அவனை பணம் எங்கே என்று கேட்டு, ஆனால் துளி கூட வாயயை திறந்து பணம் இருக்கும் இடத்தை சொல்லாத நட்ராஜ்க்கு வாய்தா வாய்தா என சத்மே அடிக்கிறது.

 

அவன் சம்பாதித்த பணத்தை வைத்து ஜாமினில் எளிதாக வெளியில் வருகிறான். ஜாமினில் வந்தவனை கடத்துகிறது வளவனின் கும்பல், ஏன் இந்த கடத்தல் என்றால் இவனால் பாதிக்கப்பட்ட ஒருவன் வளவனை வைத்து நட்ராஜுடன் இழந்த பணத்தை பெறுவதற்காக, ’உன்னை ஏமாத்துரவன் ஒரு வகைல உனக்கு குரு ஏன்னா பிழைக்குற தந்திரத்தை சொல்லிதரான்னு நினைச்சுகோன்னு’ நட்ராஜ் சொல்லி வந்த வசனத்தை சொல்லி இவனுக்கு ஆப்பு வைக்கிறார்கள் கூட்டாளிகள், பணத்தை இழந்த வளவன் இவனை கொலை செய்ய முடிவு செய்யும் போது அவர்களின் ஆசையை தூண்டி ஒரு திட்டம் தீட்டுகிறான்.


அதை செயல்படுத்துவதாக சொல்லி அவர்களிடம் இருந்து தப்பித்து பானுவை கல்யாணம் செய்து கொண்டு கிராமத்தில் திருந்தி வாழ்கிறான். இவனால் ஏமாற்றப்பட்ட அந்த வளவன் இவனை தேடி கிராமத்திற்கு வர அவர்களிடன் இருந்து இவன் தப்பித்தானா..?? பானுவின் நிலைமை என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.


மொத்தத்தில் சதுரங்க வேட்டை மக்களுக்கு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது.

சதுரங்க வேட்டை - திரை விமர்சனம் !!
இயக்கம் : எச் . வினோத்
தயாரிப்பு : மனோபாலா
நடிப்பு : நடராஜ், இஷா நாயர்
இசை : சீன் ரோல்டன்
ஒளிப்பதிவு : வெங்கடேஷ்
எழுத்து : எச் . வினோத்
இயக்குனர் மனோ பாலா முதன் முதலாக சொந்தமாக தயாரித்துள்ள படம் சதுரங்க வேட்டை. 
by Swathi   on 18 Jul 2014  0 Comments
Tags: Sathuranga Vettai   சதுரங்க வேட்டை                 
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் தயாராக இருக்கும் சதுரங்க வேட்டை பார்ட்-2 !! விரைவில் தயாராக இருக்கும் சதுரங்க வேட்டை பார்ட்-2 !!
சதுரங்க வேட்டை - திரை விமர்சனம் !! சதுரங்க வேட்டை - திரை விமர்சனம் !!
சதுரங்க வேட்டை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! சதுரங்க வேட்டை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
தமிழர்களை பெருமைபடுத்திய சதுரங்க வேட்டை !! தமிழர்களை பெருமைபடுத்திய சதுரங்க வேட்டை !!
'சதுரங்கவேட்டை'யை வாங்கிய லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் !! 'சதுரங்கவேட்டை'யை வாங்கிய லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.