LOGO
  முதல் பக்கம்    அரசியல்     Print Friendly and PDF
- முல்லைப்பெரியாறு அணை

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !!

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் இன்று பரபப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 


முல்லை பெரியாறு அணை பிரச்சனை :


1979 ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கேரளா அரசு, அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து, 136 அடியாக குறைத்தது. அணையில் பராமரிப்பு பணிகள் முடிந்த பின், மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் எனவும் கேரள அரசு கூறியது. ஆனால் பராமரிப்பு பணி முடிந்தும் மீண்டும், நீர்மட்டத்தை உயர்த்த கேரளா அனுமதிக்கவில்லை. 


இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு 2006ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. மராமத்து பணிகள் முடிவடைந்த பின் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. 


சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு மாறாக, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து நடவடிக்கை எடுத்த கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு ஏற்றவாறு கேரள சட்டசபையில் அணை பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் ஒரு மாநில அரசின் முடிவுகளில் அண்டை மாநிலங்கள் தலையிடக்கூடாது என்றும் அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், அணை மிகவும் பலமாக உள்ளது என்றும், நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை தரப்பட்டது. 


நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை அளித்த பின்னரும், கேரள அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. 


கேரளா அரசு நீதிபதி ஏ.எஸ்.ஆனந்தின் அறிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு புதிய குழுவை நியமிக்க வேண்டுமென கோர்ட்டில் வலியுறுத்தியது. கேரள அரசின் இந்த வாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் நியமித்த இந்த குழுவானது ஏசி அறையில் அமர்ந்து அறிக்கை தயாரிக்கவில்லை என்றும், நேரடியாக களத்தில் இருப்பதை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்தனர் என்றும் நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்து இருந்தார்.


இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு 20ந் தேதி முடிவடைந்த நிலையில், 5 நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.


தீர்ப்பின் முழு விவரம் பின்வருமாறு, 


முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது. 


அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், கேரள அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. எனவே, அந்த சட்டம் செல்லாது. 


அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முல்லை பெரியாறு திட்டத்தில் புதிய அணை கட்டவும் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  

by Swathi   on 07 May 2014  1 Comments
Tags: முல்லை பெரியார் அணை   உச்ச நீதிமன்றம்   Mullaperiyar Dam   Mullaperiyar Dam Problem   Mullaperiyar Dam Issue        
 தொடர்புடையவை-Related Articles
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !! முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !!
சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​ சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !! கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !!
வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !! வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !!
மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !! மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !!
இலங்கை அகதிகள் குடியுரிமை : மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் !!! இலங்கை அகதிகள் குடியுரிமை : மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் !!!
வாக்களர்களுக்கு வாக்கு பதிவு ரசீது வழங்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு !! வாக்களர்களுக்கு வாக்கு பதிவு ரசீது வழங்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு !!
கருத்துகள்
23-Oct-2015 11:55:25 ராஜா said : Report Abuse
இவங்களுக்கு வேற வேல இல்லை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.