LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

கடலே ...

கடலே

கடலே ....


நான்

கண்ணைக்

கசக்கிய

நேரத்திலெல்லாம்

ஈரக்காற்றை அனுப்பி

என்னை நீ

நலம் விசரித்திருக்கிறாய் ...


நான்

சந்தோசப்பட்ட

போதெல்லாம்

உயரமாய் அலையடித்து

என்னோடு

சிரித்து மகிழ்ந்திருக்கிறாய் ...


என்

நம்பிக்கைகள்

தீர்ந்தபோதெல்லாம்

தூரத்தே தெரியும்

கப்பல் விளக்குகளைக்

காட்டிக் காட்டி

எனக்குள்

நம்பிக்கை ஒளி

வளர்த்திருக்கிறாய் .....


உன்னை

ஆழமாய் ரசித்தபோது

நுரைகளை அனுப்பி

வாழ்க்கையின்

சூத்திரம்

புரிய வைத்திருக்கிறாய் ...


உன்னோடுமட்டுமே

நான்

அதிகமாய் பகிர்ந்து

கொண்டிருக்கிறேன் ...


அழுது

அரற்றியிருக்கிறேன்...


உறக்கப்

பேசியிருக்கிறேன் ...


ஆங்காங்கே

ஒன்றிரண்டு

மனிதர்களைத்தவிற

யாருமில்லாத

அந்த இரவு வேளைகளில்

நிலவுத் துணையோடு

உன் அழகு கண்டு

மயங்கிப் கிடந்திருக்கிறேன் ...


மொத்தமாய்

உன்னோடு நான்

வாழ்ந்திருக்கிறேன் ...


ஊரிலிருந்து

யாரேனும் என்னைப்

பார்க்க வந்தால்

அழைத்து வந்து

என்னை உயிர்ப்பிக்கிற

நண்பனென்று

உன்னை

அறிமுகம்

செய்துவைத்திருக்கிறேன் ...


எப்போதாவது

சோகச் சுமைகளோடு

உன்னைக் காண வந்தால்

நீ ஓடிவந்து

என் கால் நனைத்து

என்னை

நீ ஆ சுவாசப்படுத்தியிருக்கிறாய் .....


இப்போது

பிரிவு வந்து

என் கதவு தட்டுகிறது ...


நான்

விரும்பியோ

விரும்பாமலோ

என் காரம் பற்றி இழுக்கிறது ...


வாழும்

பொருட்டும்

காலத்தின்

பொருட்டும்


இந்தப் பிரிவு

நிகழ்கிறது ...


பிரிகிற நேரத்தில்

உனக்கொரு

வேண்டுகோள்

வைக்கிறேன்

என் பிரியமுடியாத் தோழனே ....


காலமாற்றத்தில்

என்னை நீ

மறந்துபோய் விடாதே ...


நான்

மாறிப்போனாலும்

நீ மாறிப்போய் விடாதே ...


என் பக்கம்

வருகிற காற்றைஎல்லாம்

உன்னைபற்றி நலம்

விசாரித்து அனுப்பிவைக்கிறேன்


பதில்

அனுப்ப மறந்துவிடாதே ....


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  5 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
19-Jan-2021 10:10:30 nanne said : Report Abuse
I like this kavithai but how he/she can write this biggg kavithai excellent and super👏👏👏👏
 
12-Apr-2018 02:26:44 Safieka yasmeen said : Report Abuse
It was very good try to make it shorter Best of luck for your more எஸ்பிஎரியென்செஸ் 😊😊😊😊
 
27-Oct-2017 00:42:34 thala sarathi said : Report Abuse
semma kavithai
 
19-Jun-2015 07:40:48 nandha said : Report Abuse
assdfghjjjjkjhbgggggggggggggggggggggggg
 
12-Dec-2013 07:18:34 vivek said : Report Abuse
dsdsfvsdvdssssssssssssssssssss
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.