LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

ஒரு கோடியைத் தேடி

இரவு சமையலை முடித்துவிட்டு சமையலறையை விட்டு ஹாலிற்கு வந்தேன். டி வி   சப்தம் அதிகமாக இருந்தது.குழந்தைகள்படிப்பிற்கு இடைஞ்சலாக இருக்கும் என டி வி யை அணைக்கப் போனால் ஒரு இன்ப அதிர்ச்சி. நடிகர் கதிரவன் நிகழ்த்தும் " சொல்லுங்கள் பதில், வெல்லுங்கள் ஒரு கோடி வரை " என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் கதிரவன் எதிரே உட்கார்ந்து இருப்பவர் என் கணவர்.  எனக்கு ஒரே மகிழ்ச்சி. " அப்பா டி.வி யில் வரார் அம்மா " என்று என் மகன் அடுத்த வீட்டில் இருந்து ஓடி வர , அவனைத் தொடர்ந்து என் பெண்ணும் படிப்பதை விட்டு ஹாலிற்கு விரைந்து  வந்தாள். 

முதல் நான்கு ஐந்து கேள்விகளுக்கு உதவி  கேட்காமல் பதில் சொல்லி ஐம்பதாயிரம் வரை வந்துவிட்டார். என் மாமனார், மாமியார் , என் கணவரின் தங்கை , தம்பி என எல்லாரும் உற்சாகமாக வந்து நிகழ்ச்சியை எங்களுடன் நிகழ்ச்சியைப் பார்க்க தொடங்கினார்கள்.  

கதிரவன் குடும்ப விவரம் கேட்க என் கணவர்   என்னைப் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பெருமையாக சொல்ல என் மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம்.வாசலில் மீண்டும் டாக்சி சப்தம். என் அப்பா , என் அம்மா , என் தம்பி எல்லோரும் "எங்களுக்கு சொல்லவே இல்லையே" என சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவர் என்கிட்டேயே சொல்லவில்லை என்றேன்.

என் கணவர் ஒரு லட்சம் இலக்கைத் தொட்டுவிட்டார். இது வரை  விளையாட்டாக பார்த்த என் உறவினர்கள் கருத்துடன் பார்க்க துவங்கினார்கள். ஐந்து, பத்து என ஐம்பது லட்சம் வரை என் கணவர் வந்து விட்டார்.   இவருக்கு ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்யலாம் என மாமனார் , மாமியார் , என் அப்பா அம்மா மற்ற உறவினரும் பேசிக்கொள்ள துடங்கி விட்டனர். ஒரு கோடிக்கான கேள்வி.   உதவி  கேட்காமலேயே என் கணவர் பதில் சொல்லிவிட்டார். பதில் சரி என  கதிரவன் என் கணவரைக் கட்டிப்பிடித்து  பாராட்ட என் மனம் குளிர்ந்து விட்டது. வீட்டில் ஒரே மகிழ்ச்சி வெள்ளம். வரும் பணத்தை எப்படி உபயோகிக்கலாம் என உறவினர் இடையே ஒரு பட்டி மன்றமே நடக்க தொடங்கிவிட்டது.

ஒரு இடை வெளி விட்டு " வென்ற ஒரு கோடியை எப்படி உபயோகிக்க போகிறீர்கள்? " கதிரவன் என் கணவரைக்  கேட்க,  என் கணவர் " தெருவில் ஆதரவு இல்லாமல் அலையும் சிறுவர் நலத்திற்கு நான் வென்றதை கொடுத்து விடுங்கள் " என்று சொல்லிவிட்டார். கதிரவன் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டார்.

. " எல்லோரும் கிடைப்பதில் ஒரு பகுதியைத்தான் தானம் கொடுப்பார்கள். நீங்கள் மொத்த தொகையும் கொடுக்கிறீர்கள். மேலும் தொகை பெரியது.  அதனால்  நீங்கள் தான பெரிய நட்சத்திரம்"  என்று கதிரவன் என் கணவரைப் பாராட்டினார். 

ஆனால் வீட்டிலுள்ள உறவினர்கள் எல்லோரும் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். கோபம் , வருத்தம், அவர்களை தாக்கி விட்டது.. " கடவுளே காசு தந்தாலும் தூக்கி எறிகிறார் உன் கணவர்.  பணம் வேண்டாம்  என்று சொல்ல உன் கணவரோ நாமோ  பணக்காரர்கள் இல்லை. உன் கணவருக்குப பொறுப்பே இல்லை. " என்று சலித்துக்  கொண்டு போய்விட்டார்கள். 

அவர்கள் கோபம் நியாமானதே. வருமானம் பற்றாது நாட்களை ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் தான் நாங்கள் . இந்த பணம் கொண்டு என்ன வாங்கலாம் என்று குழந்தைகளும் ஆசைப் பட்டு இருக்கலாம். என் குழந்தைகளைப் பார்த்தேன். " அப்பா சூப்பர் ஸ்டார் தான் அம்மா." என்று அவர் தானம் செய்ததை குழந்தைகள் உற்சாகமாக ஏற்றுக் கொண்டனர். நானும் தான். 

வலைத்தமிழுக்காக ,

 

S.ராமகிருஷ்ணன் 
Rtd ISRO engineer

 

 

by Ramakrishnan   on 04 Jun 2013  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
20-Sep-2013 10:33:44 murali said : Report Abuse
நல்ல கதை நல்ல முடிவு மிகவும் நேர்தியாக சொல்லப்பட்டுள்ளது
 
20-Sep-2013 10:33:32 murali said : Report Abuse
நல்ல கதை நல்ல முடிவு மிகவும் நேர்தியாக சொல்லப்பட்டுள்ளது
 
19-Jul-2013 10:23:27 ராஜசேகரன்.S said : Report Abuse
நன்றாக இருக்கிறது....Best of luck
 
15-Jun-2013 08:01:52 சத்யா said : Report Abuse
ச்வரச்யமான கதை, நல்ல முடிவு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.