LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

செய்தியால் வந்த வருத்தம்

யாராவது என்னை இவனிடமிருந்து காப்பாத்துங்களேன் ! எதிர்பார்த்து எல்லோர் முகத்தையும் பார்த்தேன். ஒருத்தராவது வரணுமே,ஹூம் அப்படியே எனக்கு எப்பொழுது அடி விழும் என எதிர்பார்த்து காத்திருப்பதுபோல் நின்று கொண்டிருந்தார்கள். அப்பாடி..! அவனே என் சட்டையை விட்டு விட்டு முகத்தின் மீது குத்துவதற்காக நிறுத்தி வைத்திருந்த கையை தாழ்த்தி விட்டான்.போய்த்தொலை ! இந்த வார்த்தையை உதிர்த்துவிட்டு விலகி சென்றுவிட்டான்.
ஒரு பெரு மூச்சு விட்டு அப்பாடி தப்பித்தேன், என்றவன் தோளை குலுக்கி சுற்றி உள்ளவர்களை பார்த்தேன். அவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் காணப்பட்டது தெரிந்தது. அடிக்காமல் விட்டு விட்டானே, என்ற ஏமாற்றம்தான் கண்களில் தெரிந்தது.. எனக்கு புரிந்தது. போங்கடா நீங்களும்....என்பது போல பார்த்துவிட்டு வேகமாக நடையை கட்டினேன்.
இவர்கள் அனைவரும் என்னை அடிப்பதை ஆர்வமாக காண்பதற்கு காரணம் இருக்கிறது,அது என் தொழில் சம்பந்தப்பட்டது.நான் ஒரு பத்திரிக்கை நிருபர் என்று சொல்லிக்கொள்கிறேன்.ஆனால் எந்த பத்திரிக்கையும் என்னை நிருபராக அங்கீகரிப்பதில்லை, காரணம்,அவ்வப்பொழுது நான் கொடுக்கும் கிசு கிசு தகவல்களை கொடுத்து பணம் சம்பாதித்துக்கொள்வேன்.அதற்கு மட்டுமே என்னை உபயோகப்படுத்தி கொள்கிறார்கள். எனக்கும் இதுதான் பிடித்திருக்கிறது. இந்த வேலை சாதாரண வேலையில்லை.
எப்பொழுதுமே ஒருவர் நல்லவராக இருக்க முடியாது, இது என்னுடைய கோட்பாடு. இதுதான் என்னுடைய தொழிலுக்கு பலமே. உலகத்தில் எல்லோருமே நல்லவராக இருக்கமுடியாது, அது போல எல்லோரும் கெட்டவர்களாக இருக்கமுடியாது. நீங்கள் ஒழுங்காக வேலைக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு வந்தால் அது செய்தியா? உங்களை மெதுவாக பின் தொடர்ந்து ஏதோ ஒரு கட்டத்தில் சிறு தவறை செய்துவிட்டீர்கள் என்றால் அது என்னைப்போன்றவர்களுக்கு வருமானம் தரும் செய்திதானே. இதைத்தான் நான் செய்கிறேன். ஆனால் இந்த மக்களுக்கு பிடிக்கமாட்டேன் என்கிறதே? ஆனால் ஒன்று சொல்கிறேன் இந்த மக்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.இப்பொழுதெல்லாம் பத்திரிக்கையில் என் பெயர் வந்துவிட்டதே என்று நிறைய் பேர் கவலைப்படுவதே இல்லை.அதனால் அவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து கூடிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.
நம் மக்கள் முடிந்தால் அவ்ர்களை தலைவர் அந்தஸ்துக்கு கொண்டு செல்ல தயாராகவே இருக்கிறார்கள்.ஆரம்பத்தில் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்னை அடிப்பதற்கு கூட ஆள் வைத்ததுண்டு, அதன்பின் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் அந்தஸ்தை கண்டு நன்றி சொல்லிவிட்டு போனவர்களும் உண்டு. ஒரு காலத்தில் தன் பெயர் வெளி வந்துவிட்டதே என்று கவலையால் துவண்டு போனவர்கள் உண்டு. இன்று அவர்களுக்குத்தான் சமுதாயத்தி மதிப்பு. சரி இனி கதைக்குள் நுழைவோம். என்னை அடிக்க வந்தவ்ன் பெயர் முருகன். ஊர் திருநெல்வேலி பக்கம். நல்ல பையன் தான்.ஆரம்பத்தில் ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து ஓட்டுநர் தொழில் கற்று அதன் பின் மெல்ல முன்னேறி இன்று நடிகை வாணி அவர்களுக்கு ஓட்டுநர் மற்றும் பாதுகாவலனாக இருக்கிறான். நடிகை வாணி மிக நல்ல் பெண்தான். ஆரம்பத்தில் மிக நல்லவளாக இருந்தவளை நான் என் தொழில் திறமையில் பத்திரிக்கையில் பெயர் வரும்படி செய்துவிட்டதால் மிக வருத்தமுற்று என்னை நன்றாக திட்டிவிட்டார்கள். ஆனால் அதன்பின் அவர்கள் மார்க்கெட் ஏறுமுகமாகி நல்ல நிலைக்கு சென்றுவிட்டதால் என்னிடம் மன்னிப்பு கேட்டு நண்பனாக்கிக்கொண்டார்கள். அவர்களிடம் முருகன்
இருந்ததால் எனக்கு ஒன்றும் நட்டமில்லை.மிக நல்ல பையன். ஒரு முறை எங்கோ வெளியில் செல்லும்போது கையில் கணக்கு காட்ட முடியாத பணம் வைத்திருந்ததாக  ரோந்து சென்ற காவல் துறையிடம் சிக்கிக்கொண்டான். அந்த செய்தி என் காதுகளுக்குத்தான் கிடைக்க வேண்டுமா?சாதாரண முருகன் காவல் துறையிடம் மாட்டுவது செய்தியல்ல,புகழ்பெற்ற நடிகையின் ஓட்டுநர் மாட்டுவதுதானே செய்தி.அதற்குத்தான் என்னை அடிக்க வந்துவிட்டான்.
காலம் கொஞ்சம் வேகமாகத்தான் ஓடுகிறது.இந்த நிகழ்ச்சி நடந்து  மூன்று மாதங்கள் ஓடியிருந்தது.ஒரு நாள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பொழுது ஏதேச்சையாக முருகனை பார்க்க நேர்ந்தது. எங்கோ வேக வேகமாக சென்று கொண்டிருந்தான். ஒரு குறு குறுப்பு, இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறான்?தொழில் மூளை சுறுசுறுப்படைந்தது. நல்ல வேளை பஸ் நிறுத்தம் அடுத்தே இருந்த்து.பஸ்ஸை விட்டு இறங்கி அவனை கண் பார்வையில் வைத்து மெல்ல பின் தொடர்ந்தேன்.வேகமாக சென்றவன் ஒரு சந்தில் திரும்பினான், நானும் மெல்ல அவனை பின் தொடர்ந்தேன். அரை பர்லாங்க் 
நடந்தவன் ஒரு திருப்பத்தில் இருந்த ஒரு வீட்டு காம்பவுண்ட் கேட்டை திறந்து கதவை மெல்ல தட்டினான். கதவு மெல்ல திறந்த்து.உள்ளே இருந்தவர் இவனை கண்டவுடன் கதவை திறக்க்க,இவன் உள்ளே சென்றுவிட்டான். நான் காத்திருக்க ஆரம்பித்தேன்.ஒரு மணி நேரம் கழித்து இவன் வெளியே வர கதவு உடனடியாக சாத்தப்பட்டது. வெளியே வந்தவன் விறு விறு வென நடக்க ஆரம்பித்து பேருந்து செல்லும் பாதைக்கு வந்தவன் அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க ஆரம்பித்தான். நானும் காத்திருந்தேன். காத்திருப்பது என்பது என் தொழிலுக்கு முக்கியமானது என்பதால் நான் அதிகம் சிரமப்படவில்லை.
பஸ் ஏறியவன் அவன் இறங்கிய இடத்தை பார்த்தவுடன் கண்டுபிடித்துவிட்டேன். நடிகை வாணி அவர்களின் வீடு அங்குதான் இருக்கிறது. வீட்டை நோக்கி நடந்தவனை மெல்ல ‘முருகா’ என கூப்பிட்டேன்.திரும்பி என்னைப்பார்த்தவன் முகம் மாறி பின் சகஜ நிலைக்கு வந்தது.என்ன நாரதரே?எப்படி இருக்கறீங்க?கேட்டவனின் கேள்வியில் நையாண்டி! நானும் பதிலுக்கு முருகா இந்த நாரதரின் கலகம் நன்மையில்தான் முடியும் தெரிந்து கொள்? என் விசயத்துல அப்படி ஒண்ணும் தெரியலயே?
இப்பக்கூட பாரு நீ எங்கிருந்து வர்றேன்னு என்னால சொல்ல முடியும். ஆனா உன்னை இனிமேல் தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்.மெல்ல பீடிகை போட்டேன். என் பீடிகையை தெரிந்து கொண்டவன் வேண்டாம் சார், இந்த பிரச்சனையை கண்டுக்காம விட்டுடுங்க, ஏற்கனவே என்னைப்பத்தி கன்னா பின்னான்னு நியூஸ் வந்த்துல மேடம் ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க, தயவு செய்து இதை எல்லாம் பெரிசு பண்ணாதீங்க,
எலி தானாக வலையில் மாட்டிக்கொள்கிறது, தயார்படுத்திக்கொண்டேன். இதை பத்தி மூச்சு கூட விட மாட்டேன், ¨தரியமாக் சொல்லு? எங்கூட வாங்க என்று அவன் முன்னர் சென்ற இடத்துக்கு ஒரு ஆட்டோவை கைதட்டி அழைத்து ஏறச்சொன்னான்.ஆட்டோவை கொஞ்சம் தள்ளி நிறுத்தச்சொன்னவன் முன்னர் சென்றபடியே என்னையும் அழைத்து அந்த வீட்டின் கதவை தட்டினான். கதவை மெல்ல திறந்தவர் அவனை பார்த்து பின் அருகில் என்னை பார்த்தவர் கேள்விக்குறியாய் அவனை பார்க்க ¨தைரியமாய் திறங்க, ‘நம்ம சார்’ தான் என்று உள்ளே அழைத்து சென்றான்.
உள்ளே மிக விசாலமாய் இருந்தது. ஒரு மருத்துவமனை எப்படி இருக்கும் அப்படி தனித்தனியாய் அறைகள் இருந்தன. ஒரு அறைக்குள் அழைத்து சென்றவன் அங்கு படுத்து இருந்தவரை பார்த்த எனக்கு அவ்வளவு பரிதாபமாய் இருந்தது. சார் இங்கிருக்கவங்க எல்லாம் சொந்தக்காரங்களால கைவிட்டவங்க, மொத்தம் பத்து பேரை வச்சு மேடம் பாத்துக்கறாங்க, ஐஞ்சு வேலயாளுங்க இங்க வேலை செய்யறாங்க, அது போக ஒரு டாக்டர் தினமும் வந்து இவங்களை பரிசோதிச்சுட்டு போவாங்க, நர்ஸ்ங்க இரண்டு பேரு இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் சம்பளம், மத்த செலவுகள் எல்லாத்தையும் மேடம்தான் பார்த்துக்கறாங்க.இதைய வெளிய சொல்லி விளம்பரம் செய்யறத மேடம் விரும்பறதில்ல.ஆன இதுக்காக ஆகற செலவுகளை சட்டபூர்வமான பணத்துல மட்டும் செய்ய முடியாது. அப்படி கையில ஒரு லட்சம் ரூபாய் இவங்க செலவுக்கு கொண்டு போய் கொடுக்க போன்போதுதான் மாட்டிக்கிட்டேன்.நான் சொல்லியிருந்தா  அன்னைக்கு மேடத்தோட பேரு ரொம்ப பெரிசா பிரபலமாயிருக்கும்,ஆனா அதை மேடம் சொல்ல வேண்டாம் அப்படீன்னுட்டாங்க, அதனால தப்பை நானே ஏத்துகிட்டேன்.
எனக்கு பிரமிப்பாய் இருந்த்து. யாரை பாராட்டுவது இவனின் மேடத்தையா? அல்லது பேர் வரக்கூடாது என்று திருட்டுப்பட்டம் ஏற்றுக்கொண்ட இவனையா? இதில் என் தொழிலால், இவனைபற்றிய செய்தி “ நடிகை வீட்டு டிரைவரின் கைவரிசை” என்ற செய்தியானது என் மனசை இப்போது கனக்க செய்தது.

Worried for that news
by Dhamotharan.S   on 23 Feb 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.