LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

பசுமை கிராமம் உருவாக்க வழிமுறைகள்

இயற்கையை காப்போம்!..
இயற்கை நம்மை காக்கும்!..

வன பாதுகாப்பு சமூகம்

ஊரின் எல்லையை வனமாக மாற்றுங்கள் அரசாங்க நிலமாக இருப்பினும் அதனை பாதுகாக்க தவறாது தனி குழுகளை அமையுங்கள் வரும் காலங்களில் இந்த வனமே உங்கள் கேடயம்..


தேனீ பட்டாம்பூச்சி பாதுகாப்பு சமூகம்

காடுகள் மற்றும் அனைத்து இயற்கை மீண்டும் தழைத்து வர தேனீக்கள் தேவை இதற்கென சமூகத்தை கட்டமைப்பு செய்வது மிக மிக மிக அவசியம் இதனை வளர்க்க கற்று கொள்ளுங்கள்.. இதில் வருவாயும் இருக்கிறது.. இதனை அந்த குழுக்கள் சார்ந்த தொழிலாக தெளிவாக கட்டமைப்பு செய்யுங்கள்.. இதனை தவிர்த்தால் மனிதனின் அழிவும் நிச்சயம்..


பாரம்பரிய மரங்கள் பாதுகாப்பு சமூகம்

வனங்கள் இருந்தாலும் நம் பாரம்பரியம் மன்னின் மரபு உண்டு.. நம் தட்ப வெப்பத்திற்கு ஏற்ற பாரம்பரிய மரங்களில் எண்ணை வித்துகள் மரம் அதிகம் அதனை பராமரித்து வளர்த்து அதன் மூலமாக வருவாய் வருமாறு மரங்கள் பாதுகாப்பு சமூகம் உருவாக்குங்கள்

மூலிகை பாதுகாப்பு சமூகம்

செடிகள் வளர்ப்பில் மூலிகை என்ற ஒன்று தமிழன் இவ்வுலகிற்கு கண்டு சொன்னதே அதனை பாதுகாத்து வளர்த்து ஒவ்வாரு கை வைத்திய முறையை அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுங்கள்.. 18 வகை மூலிகை 1800 வீடுகளிலும்
வைக்க கட்டாயமாக்குங்கள்..
ஒரு குழந்தை இரவில் அதற்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லாத போதும் முதலுதவிக்கு பயன் பெறும்.. இது அல்லாமல் குழந்தைகளுக்கு பல்வேறு மூலிகை பற்றிய விழிபனர்வு பள்ளிகளில் அதனை வளர்க்க இக்குழு துணையுடன் செயல்படுத்துங்கள்..

இதில் மற்ற மூலிகை பொடியாக, இலையாக வருவாய் வர குழுவை கட்டமைத்து கொள்ள வேண்டும்

பறவைகள் பாதுகாப்பு சமுகம்

பறவைகள் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று மழை வருவது மற்றும் செடி கொடிகள் மரங்கள் இயற்கையாக அமைய பறவைகள் தான் முடியும்.. இதனை பாதுகாக்க சமூகம் ஒன்றை அமைத்து கொள்ளுங்கள் முதலில் கணக்கெடுத்து பின்பு இவை வரவுகள் அதிக படுத்து வேண்டும்.. ஊரில் இவைகள் எங்கு அதிகமாக உள்ளது என்பதை கண்டு அந்த இடத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்...
இந்த ஐந்து இருந்தால் இதனை தொடர்ந்து.. மழை மற்றும் நீர் நிலை ஆதாரங்கள் பெருக்கி கொள்ள முடியும்..

குடிநீர் பாதுகாப்பு சமூகம்

உங்கள் ஊர் நீர்நிலைகள் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அவ்வாறு செய்யும் போது நீர்நிலைகள் அக்கிரமிப்பு இருப்பின் அதனை கண்டிப்பாக மாற்றி அமைக்க பட வேண்டும்..
குறைந்தது கிணறுகள் குளம் எத்தனை என கணக்கெடுத்து நீர்நிலைகள் புதுப்பிக்க வேண்டும்.. அவை குறைவாக இருப்பின் புதிய நீர்நிலை உருவாக்கி பின்பு அதனை பழமையும் சேர்த்து நீர்நிலைகள் வற்றாமல் பாதுகாக்க பட வேண்டும்..
நீர்நிலைகள் வருவாய் ஈட்ட குழுக்கள் அதனை சார்ந்த தொழில்கள் கட்டமைக்கபட வேண்டும்

தாணிய பாதுகாப்பு சமூகம்

தாணியங்கள் பருவ காலம் பார்த்து பயிர் செய்ய வேண்டும்.. நாம் உணவு பழக்கத்தில் இதனை சேர்க்க வேண்டும்.. இதனை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி வருவாய் குழுவுக்கு வர நடைமுறைபடுத்துவது அவசியம்

விதை வங்கி சமூகம்

அங்கு வரும் பயிர் மற்றும் ஏற்ற காலங்களில் தட்டுபாடு இன்றி விதைகள் கிடைக்க பயனடைய விதைகள் வாங்கி விற்க விதை வங்கி உருவாக்க வேண்டும்.. வெவ்வேறு விதைகள் தரமானதாக சரி பார்த்து கலபடம் இல்லா நாட்டு ரகங்களை விற்பது சிறப்பு..

நுண்ணுயிர் பாதுகாப்பு சமூகம்

கழிவுகளை மற்றும் மண் வளப்படுத்த இயற்கை உரங்கள் இட.. இந்த நுண்ணுயிர் பாதுகாப்பு அவசியம்.. இதனை கொண்டு குழு வருவாய் பெற நடைமுறை படுத்த வேண்டும்

பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்கள் பாதுகாப்பு சமூகம்

இதனை உற்பத்தி செய்ய மற்றும் விற்க.. இதற்கான சமூகம் வேண்டும் முதலில் தொலைந்த அந்த உணவுகள் கண்டறிந்து புத்துயிர் கொடுக்க வேண்டும் அதனை எவ்வாறு மாற்றம் செய்ய முடியும் என ஆராயந்து அக்குழு வருவாய் ஈட்டும் பொருட்டு அவர்களுக்கு கட்டமைத்து தர வேண்டும்..
இந்த பத்தும் புதிதாக மீண்டு வர.. மீட்டதை பாதுகாக்க இதனுடன் ஆரம்பத்தில் இருந்தே இன்னும்14 சமூகத்தை சேர்த்து கட்டமைக்க பட வேண்டும்.

-தொடரும்


இயற்கை விவசாயம் சமூகம்

தேனீக்கள் மற்றும் மண்ணை மலடாக்காது இயற்கை பூச்சி கொல்லி இயற்கை உரம் என இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்

எண்ணெய் உற்பத்தி பாதுகாப்பு சமூகம்

எண்ணெய் வித்துகள் பயிரிட்டு அதனை உபயோதபடுத்த இயற்கை முறையில் உற்பத்தி செய்ய வேண்டும்.. தேங்காயில் காய வைக்க சல்பர் பயன்படுத்தாமல் சோலார் டையர் பயன்படுத்தி எண்ணெய்க்கு தேவையான கொப்பரையை காய வைக்க வேண்டும்.. எண்ணையில் கலபடமில்லா முன்னோர்கள் வைத்திருந்த அனைத்து வகையும் சந்தை படுத்த வேண்டும்

மரபுசாரா எரிசக்தி பாதுகாப்பு சமூகம்

நமக்கான எரிவாயு மற்றும் எரிசக்தி யை நாமே உற்பத்தி செய்ய வேண்டும்.. இதனை அனைவரும் ஒருகினைந்து நடைமுறைப்படுத்த பட வேண்டும்.. அதன் தேவைகள் ஏற்றார் போல மாற்றி அமைக்க வேண்டும்..

பாசன மேம்பாட்டு பாதுகாப்பு சமூகம்

புதிய நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழை தூவுவான் மூலம் நீரினை சிக்கணமாக செலவிட உத்திகளை கையாள வேண்டும்..

பசுமை ஆய்வகம் சமூகம்

அடுத்த தலைமுறை மற்றும் இன்றைய நிலையில் உள்ள வேளாண்மை மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் கொண்டு உழவர்களுக்கு வழிகாட்ட தன்மைகளை கண்டறிய ஆய்வகம் நிறுவ வேண்டும்.

சுற்றுசூழல் பாதுகாப்பு பயிற்சி மைய சமூகம்

சுற்றுசூழலை பாதுகாத்து.. கேடு விளைவிக்கும் வகையில் காற்று, நீர்,மண் எவ்வாறு காப்பாற்ற பட வேண்டும் என பயிற்சிகள் உங்களை சார்ந்தவர்களுக்கு தந்து ஊரை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை


பசுமை வாழ்கை முறை இனைய சமூகம்

இனணயம் என்பது கட்டாயம் ஆனதால் இதனை உபயோகிக்க கம்பி வழி மற்றும் Optic Fibre cable யை பயன்படுத்த வேண்டும்.. இதற்கான கட்டமைப்பை ஒவ்வொரு கிராமமும் அவர்கள் பெயரில் பெற்றிப்பது அவசியம்..

ஒருகினைந்த கழிப்பறை மேம்பாட்டு சமூகம்

ஒருகினைந்த கழிப்பறைகள் இருக்க வேண்டும்..அதனை கண்காணித்து பராமரிப்பு செய்ய குழுவினர் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.. கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட வேண்டும்..

கழிவு நீர் சுத்திகரிப்பு மேம்பாட்டு சமூகம்

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊரில் அமைத்து அதனை குழுவினர் முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.. கழிவு நீர் மற்றபடி திறந்த வெளியில் ஒட விடுவதை தடுக்க வேண்டும்..


கலை மற்றும் ஒப்பனை மேம்பாட்டு சமூகம்

கலைகள் வளர்க்க வேண்டும்.. இதற்கான பெண்கள் குழுவினர் ஆண்கள் குழுவினர் மற்றும் அதில் இயற்கை சார்ந்த பயன்பாடுகளை அனைவரும் உபயோகிக்க இயற்கையாக இந்த பொருட்கள் தயாரித்து சந்தை படுத்த வேண்டும்..

 

பசுமை விளையாட்டு சமூகம்

விளையாட்டு மற்றும் போட்டிகள் தொலைந்த போன நிகழ்ச்சிகள் மீண்டும் புத்துணர்வுடன் விளையாட அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும்..

நீர்வள ஆதார மேம்பாட்டு சமூகம்

நீர் ஆதாரங்கள் உள்ளடக்கிய வேளாண்மை,தொழில்துறை,ஊரின்
சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க குழு வேண்டும்.. நீர் வளங்களை பாதுகாக்க இவர்கள் பங்கு முக்கியமானது

திடக்கழிவு மேலாண்மை சமூகம்

வீடுகள்,வணிக வளாகங்கள் ,தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தேவையில்லாத பயன்படுத்தப்பட்ட திடப் பொருள்களை சரியான முறையில் கழித்து அதனை அழிக்க வேண்டும்.. சேகரித்தல் பிரித்தல் அழித்தல் என குழுவினர் பிரிவாக செயல்வடிவம் பெற வேண்டும்..

பாரம்பரிய நாட்டு மாடு பாதுகாப்பு சமூகம்


இவை அனைத்தும் வர உழவுக்கு ஒவ்வொரு உழவனுக்கும் நாட்டு மாடு இருக்க வேண்டும்.. இதில் கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய் , நெய் ,கோமியம் சானம் மற்றும் இயற்கை முறையில் பூச்சி மருந்து உற்பத்தி செய்ய கற்று கொள்ள வேண்டும்..இதனை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு பசுமையான சூழலை உருவாக்க வேண்டும்..

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

by Swathi   on 02 Dec 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
கருத்துகள்
13-May-2020 08:23:19 சதிஸ்குமார் said : Report Abuse
எங்கள் ஊரில் அரசு நிலம் உல்லது அதை எவ்வாரு காடுகள் அமைபது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.